இனி வரப்போகும் காரியங்கள் Rialto, California, USA 65-1205 1சகோ. பூன் மற்றும் சபையோர்களே, சான் பெர்னார்டினோவுக்கு நான் மறுபடியும் வந்துள்ளது எனக்கு கிடைத்த பெரும் சிலாக்கியம் என்பது உறுதி. இந்த இடம் முன் நாட்களில் நடந்த அநேக மகத்தான சம்பவங்களை என் ஞாபகத்துக்கு கொண்டு வருகிறது. இங்கு நான் செய்த விஜயம் இப்பொழுதும் மக்களுக்கு நல்விளைவை உண்டு பண்ணுகின்றது என்று கேள்விப்படும்போது, அநேக ஆண்டுகளுக்கு முன்பு கர்த்தர் என்னை இங்கு வழிநடத்தினார் என்பதைக் குறித்து நான் நிச்சயம் மகிழ்ச்சி கொள்கிறேன். சற்று முன்பு நான் காரை நிறுத்தும் இடத்தில் உட்கார்ந்து கொண்டு, நடந்த ஒரு சம்பவத்தை ஞாபகத்துக்கு கொண்டு வர முயன்று கொண்டிருந்தேன். நான் பின்லாந்துக்கு கூட்டங்களுக்கு சென்றிருந்தபோது, திருமதி ஐசக்சன் என்பவள் எனக்கு மொழி பெயர்ப்பாளராக பணியாற்றினாள். நான் புறப்படும் நேரத்தில் அவள் என் காரருகில் வந்தாள். அவள், ''நீங்கள் பின்லாந்தின் சத்தம்“ என்றாள். திருமதி ஐசக்சன் இங்கு எங்காகிலும் அருகில் வசிக்கின்றாளா என்று வியக்கிறேன். எனக்குத் தெரியாது. இன்றிரவு கூட்டத்துக்கு அவள் வந்திருக்கமாட்டாளென்று நினைக்கிறேன் - திருமதி. மே. ஐசக்சன்? அவள் பின்லாந்து நாட்டைச் சேர்ந்தவள். 2என் ஞாபகத்துக்கு வந்த மற்றொரு தலைசிறந்த காரியம், நான் உணவு உண்ட விடுதியில், உணவு கொண்டு வந்து மேசையில் வைக்கும் பணி புரிந்த ஒரு பெண் (Waitress). அந்த விடுதியின் பெயர் ஆண்ட்லர்ஸ் ஹோட்டல். அது சரியென்று நினைக்கிறேன் அந்த பெண்... அவளுடன் நான் ஜெபித்தேன். அவள் மிகவும் நல்லவள். ஆனால் கிறிஸ்தவள் அல்ல. அவளை நான் கூட்டத்துக்கு வரும்படி அழைத்தேன். அவள் குழந்தையை இழந்திருந்தாள். அவளும் அவள் கணவனும் பிரிந்திருந்ததாக கேள்விப்பட்டேன். அவள் கணவனுடன் சமரசமாக வேண்டுமென்று, அல்லது இருவரும் ஒன்று சேர வேண்டுமென்று நான் ஜெபித்தேன். அந்த பெண் இன்று கூட்டத்துக்கு வந்திருக்கிறாளா என்று வியக்கிறேன். (பாருங்கள்), அவள்... மற்றொரு சம்பவம் நிகழ்ந்தது. ஒருசிறு குழந்தை எங்கிருந்தோ (ஒரு நாள் கார் பயணத் தூரத்திலிருந்து கொண்டு வரப்பட்டது). அது மரித்துப் போய் தாயின் கரங்களில் இருந்தது. அது உயிரோடு எழுப்பப்பட்டது. அந்த பெண் இன்று வந்திருக்கிறாளா? அது இந்த நாட்டுக்கு மேல் பாகத்திலிருந்து கொண்டு வரப்பட்டதென்று நினைக்கிறேன்... அது இங்கு மேலே உள்ளது. அந்த தாய் இரவு முழுவதும் காரோட்டி இங்கு அடைந்தாள் கூட தந்தையும். மரித்துப் போன அந்த குழந்தையை தாய் கரங்களில் ஏந்திக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். நான், “என்ன ஒரு விசுவாசம்! நான் உலகிலேயே மிகப் பெரிய மாய்மாலக்காரனாக இருக்க நேரிட்டாலும், இந்த தாயின் விசுவாசத்தை தேவன் கெளரவிப்பார் என்று எண்ணினேன். நான் குழந்தையை என் கைகளில் இப்படி பிடித்துக் கொண்டு ஜெபித்தேன். அப்பொழுது அது வெப்பமடைந்து, அசையத் தொடங்கி, அதன் சிறு கண்களைத் திறந்தது. அந்த குழந்தையை தாயின் கரங்களில் திரும்பவும் கொடுத்தேன். அவர்கள் எங்கிருந்தோ வந்தனர். அவர்கள் பெந்தெகொஸ்தேயினர் அல்லவென்று நினைக்கிறேன், அவர்கள் ஏதோ ஒரு சபையை சேர்ந்தவர்கள் என்று எண்ணுகிறேன்... அவர்கள் கிறிஸ்தவர்களா என்று கூட எனக்குத் தெரியாது. அவர்களை நான் கேட்கவில்லை. அந்த குழந்தை மீண்டும் உயிர் பெற்றதைக் குறித்து நான் மிகுந்த மகிழ்ச்சியடைந்திருந்தேன். அன்று முதல் சகோ. பூன், அநேக சம்பவங்கள் நிகழ்ந்துவிட்டன. நாம் இப்பொழுதும் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிற அதே தேவனை சேவித்து வருகிறோம். 3நான் சுற்றிலும் பார்க்கும் போது, சகோ. லிராய் காப் உட்கார்ந்திருப்பதைக் காண்கிறேன், நீண்ட நாட்களுக்குப் பிறகு அவரை இப்பொழுதுதான் காண்கிறேன் ('இவர் பால்காப்' என்று ஒரு சகோதரன் கூறுகிறார் - ஆசி). உங்கள் பெயர் பால், அது சரி. லிராய் உங்கள் தந்தை, அது சரி, (“இன்றிரவு அவர் ருஷியாவில் இருக்கின்றார், அவருக்காக ஜெபிக்கவும்'') ஓ, என்னே, ருஷியா. நல்லது, அது... இந்த தீரமான இராணுவ வீரர் அங்கிருக்கிறார் என்றால், அவர் ராஜாவின் பணியில் அங்கு ஈடுபட்டிருக்கிறார். (சரியே) எனவே இங்கு வந்திருப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. நாங்கள் முன்பு இங்கு வந்திருந்தபோது எங்களுக்கிருந்த ஊழியத்தினால் இந்த வாலிப போதகர் உற்சாகமடைந்தார் என்று கூறுவதைக் கேட்டபோது, என்னை மெய்சிலிர்க்க வைத்தது. இப்பொழுது நான் நம்புகிறேன்... ஜனங்கள் நின்று கொண்டிருப்பதால், நாங்கள் நீண்ட நேரம் அவர்களை வைத்திருக்கப் போவதில்லை. முன்பு நடந்த மகத்தான சுகமளிக்கும் ஆராதனைகள் எங்கள் நினைவில் உள்ளன. 4ஒரு சகோதரன் எங்கோ அருகாமையில் சுகமளிக்கும் கூட்டங்களை நடத்துவதாக கேள்விப்படுகிறேன் - சகோ. லிராய் ஜென்கின்ஸ் என்பவர். அது சரியென்று நினைக்கிறேன். கர்த்தர் அவரை ஆசீர்வதித்து ஒரு மகத்தான ஆராதனையை அவருக்களிப்பார் என்று நம்பி தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன். என்னே, இப்படிப்பட்ட ஒரு சபைக்குள் இன்றிரவு வந்துள்ளதில் நான் உண்மையில் மேன்மைப்படுகிறேன். அரங்குகளில் உள்ளதைக் காட்டிலும் ஒரு சபையில் எனக்கு மேலான உணர்வு தோன்றுகின்றது. அங்கு... அரங்குகளுக்கு விரோதமாக ஒன்றுமில்லை. ஒருக்கால் அது மூட நம்பிக்கையாயிருக்கலாம், அல்லது அது உண்மையென்று எனக்குத் தோன்றுகிறது பாருங்கள், அவர்கள்... இந்த அரங்குகளில் குத்து சண்டைகள், மல்யுத்தம், சிரிப்பூட்டும் நடிப்புகள் (burlesque) போன்றவை நடைபெறுவதால், பொல்லாத ஆவிகள் இவ்விடங்களில் தங்கியுள்ளன. அது மூட நம்பிக்கை என்று நீங்கள் எண்ணுவதற்கு வகையுண்டு, ஆனால் அது மூட நம்பிக்கையல்ல. அது ஒரு... நீங்கள் சபை கட்டிடத்துக்குள் வரும்போது, வழக்கமாக ஆவிக்குரிய சபையோர் அங்கு கூடுவதால், உங்களுக்கு அதிக விடுதலை உள்ளது போன்ற ஒரு உணர்வு உண்டாகின்றது. இங்கு ஏதோ ஒன்றுள்ளது, தேவனுடைய பிரசன்னம் இங்குள்ளது... எனவே வித்தியாசமாக காணப்படுகிறது. இதற்கும் கட்டிடத்திற்கும் என்ன தொடர்போ எனக்குத் தெரியவில்லை. ஆனால் இங்குதான் ஜனங்கள் ஒன்று கூடுகின்றனர். மற்றவிடங்களிலும் ஜனங்கள் கூடுகின்றனர் என்பது உண்மையே. ஆனால் பொல்லாத விஷயங்களுக்கு, ஒருக்கால் அது என் சொந்த கருத்தாக இருக்கக் கூடும், இன்றிரவு இங்கிருப்பதால் எனக்கு மகிழ்ச்சி. 5இப்பொழுது, கூட்டத்தினர் நின்று கொண்டிருக்கும் காரணத்தால், உங்களை நாங்கள் நீண்ட நேரம் வைத்திருக்கப் போவதில்லை. நாளை இரவு நாங்கள் வேறொரு இடத்துக்கு செல்கிறோம். அது எங்கேயுள்ளது என்று கூட எனக்குத் தெரியாது. அது அருகில் உள்ளது, (ஒரு சகோதரன் ஆரஞ்சு ஷோ அரங்கம் என்று கூறுகின்றார் - ஆசி) எங்கே? (''ஆரஞ்சு ஷோ அரங்கம்“) ஆரஞ்சு ஷோ அரங்கு - நாளை இரவு கூட்டம். நான்... இது இடையில்... நான் பயணம் மேற்கொண்டு வர்த்தகரின் (முழு சுவிசேஷ வர்த்தகரின்) கூட்டத்தில் பேசுகின்றேன். அவர்கள் கூட்டத்தில் உலகம் முழுவதிலும் பேசும் சிலாக்கியம் எனக்கு கிடைக்கப் பெற்றது. அந்த பயணத்தின் போது தான் இங்குள்ள அருமை நண்பர் எங்களை இங்கு வரும்படி அழைத்தார். இன்றிரவு இந்த சபையில் உள்ளது எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி. இப்பொழுது, வேதாகமத்தை திறப்பதற்கு முன்பு... சரீர பலமுள்ள எவரும் வேதாகமத்தை இந்த விதமாக திறக்கலாம். (பாருங்கள்?), ஆனால் வார்த்தையை நமக்குத் திறந்து கொடுத்து, நமது மனதைத் திறந்து வேத வாக்கியங்களை வெளிப்படுத்தி தர பரிசுத்த ஆவியானவர் அவசியம். நான் வேதாகமத்தை விசுவாசிக்கிறேன். அது தேவனுடைய வார்த்தையென்று நான் விசுவாசிக்கிறேன். உலகம், அதாவது உலகிலுள்ள ஜனங்கள் என்றாவது ஒரு நாள் இந்த வார்த்தையைக் கொண்டு நியாயந்தீர்க்கப்படுவார்களென்று நான் விசுவாசிக்கிறேன். ஒருகால் அது வினோதமானதாகத் தென்படலாம். இதைக் குறித்து அநேகர் கருத்து வேறுபாடு கொண்டுள்ளனர். 6அண்மையில் என் நெருங்கின நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தேன். அவர் ஒரு கத்தோலிக்கர். அவர், ''தேவன் கத்தோலிக்க சபையைக் கொண்டு உலகத்தை நியாயந்தீர்ப்பார்'' என்றார். அது உண்மையானால், எந்த கத்தோலிக்க சபையைக் கொண்டு அவர் மெதோடிஸ்டு சபையைக் கொண்டு நியாயந்தீர்ப்பாரானால், பாப்டிஸ்டுகளின் கதியென்ன? பாருங்கள்? அவர் ஒரு சபையைக் கொண்டு நியாயந்தீர்த்தால், மற்றது இழக்கப்படுகின்றது. அங்கு பயங்கர குழப்பம் ஏற்பட்டுள்ளது. எனவே நாம் வேதாகமத்துக்கு சென்று உண்மை எதுவென்று அறிந்து கொள்ளுதல் அவசியம். தேவன் இயேசு கிறிஸ்துவைக் கொண்டு உலகத்தை நியாயந்தீர்ப்பாரென்று வேதகாமம் உரைக்கிறது. இயேசு கிறிஸ்து வார்த்தையாயிருக்கிறார். யோவான் 1:1 “ஆதியிலே வார்த்தை இருந்தது அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி நமக்குள்ளே வாசம் பண்ணினார்...'' அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்று எபிரெயர் 13:8 உரைக்கிறது. அது உண்மையென்று நான் விசுவாசிக்கிறேன். நான் விசுவாசிப்பது என்னவெனில்... 7ஆதியில் தேவன் அவர் முடிவற்ற தேவன். அவர் முடிவற்றவர், நாம் முடிவுள்ளவர்கள். அவர் சிந்தை மிகவும் மகத்தானது. நாம் நமது சிறிய முடிவுள்ள சிந்தையைக் கொண்டு அவருடைய மகத்தான, முடிவற்ற ஞானத்தை புரிந்து கொள்வது கடினம். எனவே அவர் ஏதாவதொன்றைக் கூறும்போது, அவர் வேதாகமத்தில் கூறியுள்ளவை நமக்கு விசித்திரமாகத் தென்படக் கூடும், ஆனால் அவை நிறைவேறியே தீரவேண்டும். அவருடைய வார்த்தைகள் ஒருபோதும் ஒழிந்து போவதில்லையென்று நான் விசுவாசிக்கிறேன். எனவே, நமது சிறிய, முடிவுள்ள சிந்தையைக் கொண்டு அவருடைய மகத்தான சிந்தையை நாம் அறிந்து கொள்ள இயலாது என்பதை தேவன் அறிந்து, தாம் கூறிய வார்த்தைகளை அவரே வியாக்கியானப்படுத்தி அர்த்தம் உரைக்கிறார். அவருக்கு வியாக்கியானப்படுத்த யாரும் தேவையில்லை. அவருடைய வார்த்தையை அதன் ஏற்ற காலத்தில் உறுதிப்படுத்துவதன் மூலம் அவர் தமது சொந்த வார்த்தையை வியாக்கியானப்படுத்துகிறார். 8ஆதியிலே தேவன் - நோவா, அவருடைய செய்திக்கு அந்த நாளின், வார்த்தையாயிருந்தான் என்று நான் விசுவாசிக்கிறேன். அதன் பிறகு மோசே தோன்றினான். மோசே நோவாவின் வார்த்தையை எடுத்துக் கொண்டு ஒரு கப்பலை உண்டாக்கி, இஸ்ரவேலரை நீல நதியின் வழியாக எகிப்திலிருந்து வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்துக்கு கொண்டு சென்றிருக்க முடியாது. அவ்வாறே அவனுடைய செய்தி நோவாவின் நாளில் கிரியை செய்யவில்லை; அது தேவனுடைய வார்த்தையின் பாகமாயிருந்து, அது சத்தியமென்று மோசேயினால் உறுதிப்படுத்தப்பட்டது. அது போன்று இயேசுவும் மோசேயின் வார்த்தையை பெற்றிருக்க முடியாது. லூத்தர் கத்தோலிக்க சபைகளின் வார்த்தையில் தொடர்ந்திருக்க முடியாது. வெஸ்லி, லூத்தரின் வார்த்தையில் நிலைநின்றிருக்க முடியாது. அவ்வாறே பெந்தெகொஸ்தேயினரும் மெதோடிஸ்டுகளின் வார்த்தையை ஏற்று கொண்டிருக்க முடியாது. அவர்கள்... பாருங்கள், சபை வளர்ந்து வந்தது. ஒவ்வொரு காலத்தைக் குறித்தும் வேதத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே தேவன், பரிசுத்த ஆவியின் மூலம், வார்த்தையை வெளிப்படுத்தி, அவரே அதை உறுதிப்படுத்தி, தம்முடைய வார்த்தை அது வாக்குத்தத்தம் பண்ணப்பட்டுள்ள நாளில் நிறைவேற்றப்படுகிறது என்று காண்பிக்கிறார். 9இயேசு அதை கூறினார். அவர், ''நீங்கள் விசுவாசிக்காவிட்டால், நான் செய்கிற கிரியைகளையாவது விசுவாசியுங்கள்'' என்றார். ஏனெனில் அவர் யாரென்று அவை சாட்சி கொடுத்தன. பாருங்கள்? யாராகிலும் வேதத்தை அறிந்திருந்தால்... அவர் வினோதமான விதத்தில் - மிகவும் விசித்திரமான விதத்தில் - வந்த காரணத்தால், ஜனங்கள் யாரும் அவரை விசுவாசிக்கவில்லை. ஏனெனில் அவர் மனிதனாயிருக்க, தம்மை தேவனாக்கிக் கொண்டார் என்பது அவர்கள் கருத்து. ஆனால் அவர் உண்மையில் மனித உருவில் இருந்த தேவன். தேவன் கிறிஸ்துவுக்குள் இருந்து, உலகத்தை தம்முடன் ஒப்புரவாக்கிக் கொண்டார். ஒருவனும் தன்னுடனே தேவன் இராவிட்டால் இப்படிப்பட்ட அற்புதங்களைச் செய்யமாட்டான் என்று நிக்கொதேமு கூறினான். சனகரீப் சங்கம் அப்படி விசுவாசித்தது. நாம் அறிகிறோம், வார்த்தையானது. அவர்கள் வார்த்தையை அறிந்திருந்தால்... அவர், ''நீங்கள் மோசேயை விசுவாசித்தீர்களானால், என்னையும் விசுவாசிப்பீர்கள்; அவன் என்னைக் குறித்து எழுதியிருக்கிறானே'' என்றார். நாம் காண்கிறோம். அவர்கள் வேதத்தை ஆராய்ந்து, மேசியா என்ன செய்ய வேண்டுமென்று அறிந்திருந்தார்களானால், அவர் செய்த கிரியைகளின் மூலம் அவர்கள் அவரை அறிந்து கொண்டு, தேவன் கிறிஸ்துவுக்குள் இருந்து, உலகத்தை தம்முடன் ஒப்புரவாக்கி, மேசியா என்ன செய்வாரென்று அவரை குறித்து கூறப்பட்டுள்ள வாக்குத்தத்தங்கள் அனைத்தையும் நிறைவேற்றி வருகிறார் என்பதைக் கண்டு கொண்டிருந்திருப்பார்கள். இயேசு அந்த வார்த்தைக்கு சாட்சியாயிருந்து, அந்த வார்த்தை ஜீவிக்கும்படி செய்தார். 10நாம் வாழும் இந்நாளிலும் அதுவே சம்பவித்துக் கொண்டிருக்கிறதென்று நான் நம்புகிறேன். அதாவது, தேவன் தமது வார்த்தைக்கு சாட்சியாயிருந்து, அவர் என்ன செய்வாரென்று கூறப்பட்டுள்ளதோ அதை இன்று செய்து, வார்த்தையை உறுதிப்படுத்துகிறார். இது இரட்சிப்பின் நாளென்று நாமறிவோம். இந்நாளில் தேவன் மனிதரை உலகத்திலிருந்து அழைத்து, பாவமான வாழ்க்கையிலிருந்து ஊழியம் செய்யும் ஜீவியத்திற்கென்று அழைக்கிறார். தேவன் உயரத்திலிருந்து தமது ஆவியை ஊற்றி, இந்நாளின் ஊழியத்தில் மகத்தான அற்புதங்களும் அடையாளங்களும் நடக்கும்படி செய்கிறார். இது முன்மாரியும் பின்மாரியும் ஒன்றாக விழும் நேரமாகும். மகத்தான அடையாளங்களும் அற்புதங்களும் இந்நாளில் நிகழ வேண்டுமென்றும் அதை ஸ்தாபனங்கள் புறக்கணிக்குமென்றும் நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் நான் உள்ளே செல்ல இந்த திறந்த வாசல்கள் இன்றும் உள்ளதற்காகவும் இங்குள்ள உங்கள் போதகரைப் போன்ற இளைஞருக்கு அது அளிக்கும் உற்சாகத்துக்காகவும் நான் தேவனுக்கு நன்றியுள்ளவனாயிருக்கிறேன்... எனக்கு வயதாகிக் கொண்டே போகின்றது. என் நாட்கள் எண்ணப்பட்டுள்ளன என்று அறிவேன். என் சந்ததியில் அவர் வராமல் போனால், இந்த இளைஞர்கள் இந்த செய்தியை கர்த்தருடைய வருகை மட்டும் கொண்டு செல்லலாம். அவரை நான் காண்பேன் என்று நம்புகிறேன்... அவருக்காக நான் ஒவ்வொரு நாளும் விழிப்புடன் காத்திருந்து, அந்த மணி நேரத்துக்காக என்னை ஆயத்தமாக வைத்துக் கொண்டிருக்கிறேன். 11அவருடைய புத்தகத்தை நாம் படிக்கும் முன்பு, நாம் தலை வணங்கி ஆக்கியோனிடம் பேசுவோம். பரலோகப் பிதாவே, இன்றிரவு நாங்கள் உயிரோடிருப்பதற்காகவும் இந்த மகத்தான நகரத்துக்கு நாங்கள் மறுபடியும் வந்து, இந்த பனி மூடிய மலைகளின் அழகான காட்சியையும், அதே சமயத்தில் ஆரஞ்சுகள் தோன்றி மரங்களில் தொங்குவதை காணச் செய்ததற்காகவும் உமக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். நாங்கள் வாழ்வதற்கு எவ்வளவு சிறந்த உலகத்தை நீர் தந்தருளியிருக்கிறீர்! ஆனால் மனிதன் அதை தாறுமாறாக்கிக் கொண்டிருக்கிறான் என்பதை காணும் போது, பிதாவே, நாங்கள் வெட்கப்படும்படி அது செய்கிறது. தேவன் செய்துள்ள மகத்தான காரியங்களை மனிதர் அறிந்து கொள்ள வேண்டுமென்று முயற்சி செய்யவே இன்றிரவு நாங்கள் இங்கு வந்துள்ளோம். இதைக் காட்டிலும் பெரியவை மறுபுறத்தில் உள்ளதென்று நாங்கள் அறிந்திருக்கிறோம். இன்றிரவு உமது வார்த்தையை நாங்கள் படிக்கும்போது அதை நாங்கள் நோக்கிப் பார்க்க அருள் புரியும். பிதாவே, நாங்கள் வார்த்தையைப் படிக்கலாம். ஆனால் பரிசுத்த ஆவியானவர் தாமே வெளிப்பாட்டின் மூலம் அதை எங்களுக்கு வெளிப்படுத்தித் தருவாராக. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இதை கேட்கிறோம். ஆமென். 12குறிப்புகளை எழுதிக்கொள்ள விரும்புகிறவர்கள் - போதகருடன் கூட சேர்ந்து வேத வாக்கியங்களைப் படிக்க விரும்புகிறவர்கள் - வழக்கமாக அவர்கள் அவ்வாறு படிப்பதுண்டு. பல ஆண்டுகளுக்கு முன்பெல்லாம், நான் வேத வசனங்களை குறித்து வைப்பது கிடையாது. ஆனால் இப்பொழுது எனக்கு வயதாகிவிட்டது. பாருங்கள், அண்மையில் என் ஊழியத்தின் இருபத்தைந்தாம் ஆண்டை, பூர்த்தி செய்தேன் - அது இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு. எனவே அது சிறிது மோசமாகிவிட்டது. இருப்பினும், அவர் என்னை அழைக்கும் வரைக்கும், எனக்கு அவருடைய வார்த்தையில் செய்யத் தெரிந்த எல்லாவற்றையும் இப்பொழுதும் செய்ய முயன்று வருகிறேன். 13இப்பொழுது நாம் பரிசுத்த யோவான் 14-ம் அதிகாரத்துக்கு வேதாகமத்தைத் திருப்புவோம். அது எல்லாருக்கும் தெரிந்த ஒரு வேதபாகம். இன்றிரவு அதைப் படித்து, கர்த்தருக்கு சித்தமானால் அதிலிருந்து ஒரு பொருளைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். இந்த பாகம் அநேகமாக எல்லோருக்கும் தெரிந்ததே. அநேக சமயங்களில் இது அடக்க ஆராதனைகளின் போது உபயோகிக்கப்படும் பாகமாகும். நான் எப்பொழுதாகிலும் அடக்க ஆராதனையில் பிரசங்கிக்க விரும்பினால், அது இந்த உலகத்திற்காகவே. அது மரித்து மறுபடியும் பிறக்கட்டும். பரிசுத்த யோவான் 14-ம் அதிகாரம், 1 முதல் 7 வசனங்கள் அதை நான் குறித்து வைத்திருக்கிறேன். உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக: தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள். என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம் பண்ணப் போகிறேன். நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம் பண்ணின பின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக் கொள்ளுவேன். நான் போகிற இடத்தை அறிந்திருக்கிறீர்கள், வழியையும் அறிந்திருக்கிறீர்கள் என்றார். தோமா அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் போகிற இடத்தை அறியோமே, வழியை நாங்கள் எப்படி அறிவோம் என்றான். அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிந்திருப்பீர்கள்; இது முதல் நீங்கள் அவரை அறிந்தும் அவரைக் கண்டும் இருக்கிறீர்கள் என்றார். யோவான் 14:1-7 படித்த அவருடைய வார்த்தையுடன் கர்த்தர் தாமே தமது ஆசீர்வாதங்களைக் கூட்டுவாராக. சபைக்கு ஒரு சிறு பாடத்தை நான் அளிக்க விரும்பும் இத்தருணத்தில், நான் அதை பேசிக் கொண்டிருக்கும் போது, மறுபடியும் இந்த வேதபாகத்தை குறிப்பிட விரும்புகிறேன். 14நேற்று மாலை நான் அரிசோனாவிலுள்ள யூமாவில் இருந்தேன். அங்குதான் இப்பொழுது என் குடும்பம்... நான் முன்பு இங்கு வந்திருந்தபோது, இந்தியானாவிலுள்ள ஜெபர்ஸன்வில்லில் வசித்து வந்தேன். சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தரிசனத்தின் மூலம் நான் அரிசோனாவுக்கு அனுப்பப்பட்டேன். இப்பொழுது நாங்கள் அங்கு தான் தங்கியிருக்கிறோம். அங்கு எனக்கு ஒரு சபையும் இல்லை. இப்பொழுது நம்முடன் இருக்கும் சகோதரன், சகோ. கிரீன் அங்கு ஒரு கூடாரத்தை நிறுவியுள்ளார். அது முன்பு அசெம்பிளீஸ் ஆப் காட் சபையாக இருந்தது - கீழ் நகர அசெம்பிளீகள்... அவை ஒன்றாக இணைந்தன. அவர்கள் சகோ. ப்ராக் சகோ. கில்மோர் இவர்களுடன் சென்றுவிட்டு அந்த சபையை திறந்தபடி விட்டு சென்றுவிட்டனர். எனவே டெக்ஸாஸை சேர்ந்த சகோ. பெர்ரி கிரீன் அங்கு சென்று அந்த இடத்தை தன் கைவசமாக்கிக் கொண்டார். அவர் நம்முடன் கூட்டாளியாக இருக்கிறார். மூடப்பட்ட அந்த சபையை சகோ. கிரீன் மறுபடியும் திறந்தாரென்று கேள்விப்பட்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். 15நேற்றிரவு யூமாவில் கிறிஸ்தவ வர்த்தகரின் மத்தியில் நான் “ஆகாயத்தில் எடுத்துக் கொள்ளப்படுதல்” என்னும் பொருளின் பேரில் பேசினேன். அந்த விருந்தின் போது பேசுவதற்கு அது வினோதமான பொருளே. ஆனால் அங்கிருந்தோர் எல்லோருமே அநேகமாக கிறிஸ்தவர்களே, கூட்டம் நடைபெறும் இந்த சபையிலும் அப்படித்தான் இருக்கும். ''உங்களில் எத்தனை பேர் கிறிஸ்தவர்கள்?'' என்று நான் கேட்டால், ஒருக்கால் எல்லோருடைய கரங்களுமே உயர்த்தப்படும். நீங்கள் கிறிஸ்தவர்கள். நாம் கிறிஸ்தவர்களாக இருக்கும் பட்சத்தில், நமக்கு முன்கூட்டியே அறிவிக்கப்பட வேண்டும். நாம் அதை ஊகித்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. நாம் அடைய வேண்டிய இடம் எதுவென்று நமக்கு அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இன்றிரவு நான் பேசவிருக்கும் பொருள்: “இனி வரப்போகும் காரியங்கள்” என்பதாம். நேற்றிரவு நான் ஆகாயத்தில் எடுத்துக் கொள்ளப்படுதல் என்னும் பொருளின் பேரில் பேசினேன். இன்றிரவு நான் இந்த பொருளை எடுத்துப் பேசி, நேற்றிரவு செய்தியையும் இதையும் ஒன்றாக இணைக்க விரும்புகிறேன், கவனியுங்கள் எடுத்துக் கொள்ளப்படுதல் என்பது இருக்கப்போகிறது அதை நாமறிவோம். அது வருங்காலத்தில் நிகழவிருக்கும் ஒரு சம்பவம். 16இயேசு இங்கு எதைக் குறித்து பேசுகிறார் என்றால்... நமக்காக ஒரு ஸ்தலத்தை ஆயத்தம்பண்ண அவர் முன்னால் சென்றுவிட்டார். ''உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக“. அவர் யூதர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். அவர், ''நீங்கள் தேவனிடத்தில் விசுவாசமாயிருந்தீர்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள். நீங்கள் தேவனிடத்தில் விசுவாசமாயிருந்தது போல, என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள், ஏனெனில் நான் தேவனுடைய குமாரன்” என்றார். பாருங்கள்? தேவன்... வேறு வார்த்தைகளில் கூறினால், ''நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம். பிதா எனக்குள் வாசமாயிருக்கிறார். ஆகையால் தான் நான் செய்ய நீங்கள் காணும் கிரியைகளை நான் செய்து கொண்டிருக்கிறேன். நானல்ல, எனக்குள் வாசமாயிருக்கிற பிதாவே இந்த கிரியைகளைச் செய்கிறார்'' என்றார். தேவன் கிறிஸ்துவுக்குள் வாசமாயிருந்து உலகத்தை தம்மோடு ஒப்புரவாக்கிக் கொண்டார். தேவன் கிறிஸ்துவுக்குள் வாசமாயிருந்து உலகத்தை தம்மோடு ஒப்புரவாக்கிக் கொண்டார். 17இயற்கைக்கு மேம்பட்ட மகத்தான தேவன் ஒருவர் இருக்கிறார் என்று பல தலைமுறைகளாக போதிக்கப்பட்டு வந்த யூதர்களுக்கு அதை நம்புவது எளிதாயிருந்தது. ஆனால் தேவன் இறங்கி வந்து தமது குமாரனாகிய இயேசு கிறிஸ்து என்னும் நபரில் தம்மை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார் - அதாவது, “தேவன் மாம்ச சரீரமாகிய கூடாரத்தில் வாசமாயிருக்கிறார்” என்பது அவர்களுக்குப் புரிந்து கொள்ள இயலாத ஒரு செயலாக அமைந்திருந்தது. ஆனால் அவர், ''நீங்கள் தேவனிடத்தில் விசுவாசமாயிருந்தது போல, என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள். என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு. ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம் பண்ணப்போகிறேன்'' என்றார். இயேசுவின் வாழ்க்கை இவ்வுலகில் முடிவடைய வேண்டிய தருணமாயிருந்தது அது. அவர் செய்த மகத்தான அடையாளங்கள் அற்புதங்கள் மூலமாகவும், அவரைக் குறித்து வேதாகமத்தில் எழுதியிருக்கிறவைகளை அவர் எடுத்துரைத்ததன் மூலமாகவும், அவர் மாம்சத்தில் வெளிப்பட்ட யேகோவா என்பதை ஜனங்களுக்குக் காண்பித்தும் நிரூபித்தும் வந்தார். அவர் ''என் வாழ்க்கை இவ்வுலகில் முடிவடைவதை நீங்கள் காணும் போது, அது ஒரு நோக்கத்துக்காகவே முடிவடைகிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள். ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம் பண்ணுவதற்காக நான் போகிறேன். அப்பொழுது நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருப்பீர்கள்“ என்றார். இந்த வாழ்க்கை மரணத்துடன் முடிவடைந்து விடுவதில்லை என்பதை இயேசு தமது சீஷர்களுக்கு வலியுறுத்தினார். 18இது அடக்கத்தின் போது பேசப்படும் பொருளென்று கூறினேன். நாம்... மரணம் நமக்கு முன்பாக உட்கார்ந்து கொண்டிருக்கிறது, நாம் எப்பொழுது மரிப்போம் என்று நமக்குத் தெரியாது... இன்றிரவு கட்டிடத்திலுள்ளவரில் சிலர் உயிருடன் இங்கிருந்து செல்லாமல் இருக்க வகையுண்டு. இது அவ்வளவு நிச்சயமற்றதாக உள்ளது. இன்னும் ஐந்து நிமிடங்களில், இக்கட்டிடத்தில் ஆரோக்கியமாயுள்ள இளைஞர்கள் சவமாகிடக் கூடும் - இன்னும் ஐந்தே நிமிடங்களில், அது உண்மை, இன்னும் ஐந்தே நிமிடங்களில் நாம் ஒவ்வொருவரும் மகிமையில் பிரவேசிக்கக் கூடும். நமக்குத் தெரியாது. அது தேவனுடைய கரங்களில் உள்ளது. அந்த நேரம் எப்பொழுது வருமென்று இயேசுவே அறியார் என்றும் அது பிதாவினுடைய கரங்களில் மாத்திரம் உள்ளதென்றும் இயேசு கூறியுள்ளார். மரணத்துக்குப் பிறகு ஜீவன் உண்டு என்பதை அவர் சீஷர்களுக்கு வலியுறுத்தினார். “ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம் பண்ணப்போகிறேன்.'' அவர்களை சேர்த்துக் கொள்ள. அது என்ன காண்பிக்கிறதென்றால் (அவர் அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தார்), இந்த ஜீவன் முடிந்த பின்பு வேறொரு ஜீவன் உள்ளதென்று. இந்த ஜீவன் முடிந்த பின்பு நாம் வேறொரு ஜீவனில் பிரவேசிக்கிறோம் என்பது நாம் அனைவருக்கும் எப்படிப்பட்ட ஆறுதலை அளிக்க வல்லதாய் உள்ளது! உங்களுக்கு வயதாகுந்தோறும், அது இன்னும் அதிகமாக தத்ரூபமான ஒன்றாக ஆகின்றது. உங்கள் வாழ்க்கையின் நாட்கள் முடிவு பெற நெருங்குவதை நீங்கள் காணும் போது, நீங்கள் எல்லாவற்றையும் மூட்டை கட்டி விட்டு, அந்த மகத்தான சம்பவத்துக்காக ஆயத்தமாகின்றீர்கள். இதே ஜீவன் வேறொரு உலகத்தில், வேறொரு இடத்தில் தொடர்கின்றதேயன்றி, வேறொன்றுமல்ல. 19உங்கள் பிறப்பு முன் கூட்டியே திட்டமிடப்பட்ட ஒன்று. இதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களென்று நம்புகிறேன். நமது பிறப்பு முன் கூட்டியே திட்டமிடப்பட்டதென்று நீங்கள் ஒவ்வொருவரும் அறிவீர்கள். இங்குள்ளது எதேச்சையாக நடந்த ஒன்றல்ல என்பது உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் காணும் இவையனைத்தும் உலகத் தோற்றத்துக்கு முன்பே தேவனால் திட்டமிடப்பட்டது. முடிவற்ற தேவன் அறிந்திருந்தார். அவர் முடிவற்றவராயிருந்தால், இவ்வுலகிலுள்ள ஒவ்வொரு பூச்சியையும், அது எத்தனை முறை கண்சிமிட்டும் என்பதையும் அவர் அறிந்திருக்க வேண்டும். அதுவே முடிவற்றவரின் தன்மை. பாருங்கள்? முடிவற்றது என்பது என்னவென்பதை நமது சிறு சிந்தை அறிந்து கொள்வது கடினம். முடிவற்ற தேவன் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார். எனவே அவர் அறியாதது ஒன்றுமில்லை. நாம் தேவனுடைய வார்த்தையை அறிந்திருப்போமானால், நாம் எக்காலத்தில் வாழ்கிறோம் என்பதை அறிந்திருப்போம். நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் நேரத்தை அறிந்திருப்போம். நமக்கு முன்னால் என்ன உள்ளதென்றும், நம்மைக் கடந்து சென்றது என்னவென்பதையும் நாம் அறிந்திருப்போம், தேவனுடைய வேதாகமம் இயேசு கிறிஸ்துவை வெளிப்படுத்துவதாயுள்ளது. வெளிப்படுத்தின விசேஷ புத்தகம் வரைக்கும், அவர் காலங்கள் தோறும் செய்து வந்த கிரியைகளையும் இனி நிறைவேறவிருக்கும் அவருடைய வாக்குத்தத்தங்களையும் அது அறிவிக்கிறது... அவருடைய வாக்குத்தத்தங்கள் அனைத்தும் உண்மை. தேவன் ஒன்றைக் கூறுவாரானால் அது நிறைவேறாமல் இருக்க முடியாது. அவர் கூறும் ஒவ்வொரு வார்த்தையும் நிறைவேறியே தீர வேண்டும். உலகத் தோற்றத்துக்கு முன்பே... 20சிலர் ஆதியாகமத்தைப் படித்து குழப்பிக் கொண்டு, ''தேவன் திரும்பத் திரும்ப அதை கூறுகிறார்'' என்கின்றனர். இல்லை, அதை நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டீர்கள். பாருங்கள், தேவன் ஆதியில் ''உண்டாகக்கடவது! உண்டாகக்கடவது! உண்டாகக்கடவது!“ என்றார். உலகம் ஒழுங்கின்மையாய் இருந்தது. ஒருக்கால் ''அவர் வெளிச்சம் உண்டாகக்கடவது'' என்று உரைத்த பிறகு நூற்றாண்டுகள் கழித்து வெளிச்சம் உண்டாயிருக்கலாம். ஆனால் அவர் ஒன்றை உரைத்தால் அது நிறைவேறியே தீரவேண்டும். அது அப்படித்தான் இருக்க வேண்டும். பாருங்கள்? அவர் வார்த்தையை உரைத்தார். விதைகள் தண்ணீரில் மூழ்கியிருந்தன. அவர் உலகத்தை உலரச் செய்த போது, விதைகள் முளைத்தெழும்பின. அவர் உரைத்தது நிறைவேறியே ஆகவேண்டும். அவர் தீர்க்கதரிசிகளின் மூலம் உரைத்தார். நேற்று மாலை அதை குறிப்பிட்டேன். நாம் ஏசாயாவின் புத்தகத்தை எடுத்துக் கொண்டால், அவன், ''ஒரு கன்னிகை கர்ப்பவதியாவாள்'' என்று தீர்க்கதரிசனம் உரைத்தான். ஜனங்களிடம், ''ஒரு கன்னிகை கர்ப்பவதியாவாள்'' என்று ஒரு மனிதன் கூறுவானென்று யார் நினைத்துப் பார்க்கமுடியும்? ஆனால் அவன்... தீர்க்கதரிசி தேவனை பிரதிபலிப்பவனாக இருக்கிறான். அவன் தன்னுடைய சொந்த வார்த்தைகளை பேச முடியாதபடிக்கு உண்டாக்கப்பட்டிருக்கிறான். அவன் தேவனுடைய வார்த்தைகளை மாத்திரமே உரைக்கிறவனாக இருக்க வேண்டும். அவன் பிரதிபலிக்கும் கருவியைப் போன்றவன். அவன் தேவனுடைய வாயாகத் திகழ்கிறான். எனவே ஏசாயா, ''ஒரு கன்னிகை கர்ப்பவதியாவாள்'' என்றான். அவனுக்கே ஒருக்கால் அது புரிந்திருக்காது, ஆனால் தேவன் அவன் மூலம் அதை உரைத்தார். ஏனெனில் தமது ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகளுக்கு வெளிப்படுத்தாமல் அவர் ஒரு காரியத்தையும் செய்யார் என்று வாக்களித்துள்ளார். ஏசாயா அது நிறைவேறுவதற்கு எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பு உரைத்தான், ஆனால் அது நிறைவேறியே ஆகவேண்டும். முடிவில் அந்த தேவனுடைய வார்த்தைகள் ஒரு கன்னிகையின் கர்ப்பத்தில் நங்கூரம் கொண்டு, அவள் கர்ப்பவதியாகி இம்மானுவேலைப் பெற்றாள். “நமக்கு ஒரு பாலகன் பிறந்தார், நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார். அவர் நாமம் ஆலோசனைக் கர்த்தர், வல்லமையுள்ள தேவன், சமாதானப் பிரபு, நித்திய பிதா என்னப்படும்” அது அப்படியே நிகழ வேண்டும். ஏனெனில் தேவன் தமது தீர்க்கதரிசியின் வாயினால் அதை உரைத்தார். தேவனுடைய வார்த்தைகள் அனைத்துமே நிறைவேற வேண்டும். எனவே இயேசு ஒரு கூட்டம் ஜனங்களை தம்மிடம் சேர்த்துக் கொள்ள ஒரு ஸ்தலத்தை ஆயத்தம் பண்ணப் போயிருக்கிறாரென்று நாமறிவோம். அந்த ஜனங்கள் யார், நாம் அவர்களில் ஒரு பாகமாயிருக்கிறோமென்று இன்றிரவு நான் நம்புகிறேன். அப்படி இல்லாமல் போனால், என் நண்பனே, உனக்கு விருப்பமானால் அதில் நீ சேர்ந்து கொள்ள ஒரு வழியை அவர் உனக்காக உண்டு பண்ணியிருக்கிறார். உனக்கு சுயாதீனம் உண்டு. உன்னுடைய விருப்பப்படி நீ செய்யலாம். இப்பொழுது கவனியுங்கள் வரப்போகும் உலகத்தில் ஒரு உலகம் வரப்போகின்றது. 21அது நான் கூறினது போன்று, இங்கு நேர்ந்த உங்கள் பிறப்பை போன்றது. அதற்காக நீங்கள் ஆயத்தமானீர்கள். நீங்கள் இங்கிருப்பீர்கள் என்று தேவன் அறிந்திருந்தார். இப்பொழுது நீங்கள் அறிந்திருக்கிறீர்கள், உங்கள் பெற்றோர் புரிந்த செயலும் கூட... அது தலைமுறை தலைமுறையாக விசாரிக்கப்படுவதில்லை என்று ஜனங்கள் எண்ணுகின்றனர், ஆனால் அது அப்படித்தான் நடக்கிறது. எபிரெயர், புத்தகத்தில், 7-ம் அதிகாரம் என்று நினைக்கிறேன். (அதை எழுதினது பவுல் என்று எண்ணுகிறேன்). அவன் ஆபிரகாமுக்கு நேர்ந்த மகத்தான சம்பவத்தை அங்கு குறிப்பிடுகிறான். ஆபிரகாம் ராஜாக்களை முறியடித்து திரும்பி வருகிறபோது, மெல்கிசேதேக்குக்கு தசமபாகம் கொடுத்தான். மெல்கிசேதேக்கு ஆபிரகாமுக்கு எதிர்கொண்டு போனபோது, லேவி தன் தகப்பனுடைய அரையிலிருந்தபடியால், அவன் தன் முப்பாட்டனாராகிய ஆபிரகாமின் மூலம் தசமபாகம் கொடுத்தான் என்று பவுல் கூறுகிறான். எனவே அவருடைய வார்த்தையைக் கைக்கொள்ளாத ஜனங்களின் பாவங்களை அவர்களுடைய பிள்ளைகளிடத்தில் அவர் தலைமுறை தலைமுறையாக விசாரிக்கிறவராயிருக்கிறார். 22பாருங்கள், நீங்கள் அனைவரும் தேவனால் முன் கூட்டியே திட்டமிடப்பட்டீர்கள். தேவன் எதையுமே எதேச்சையாக செய்வதில்லை. அவர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார். இன்றிரவு நீங்கள் இங்கு இருக்கவேண்டும் என்பதற்காக அது அநேக தலைமுறைகளுக்கு முன்பே திட்டமிடப்பட்டது. அது உங்களுக்கு தெரியுமா? (சபையார் “ஆமென்'' என்கின்றனர் - ஆசி) சற்று யோசித்து பாருங்கள் நீங்கள் ஒரு காலத்தில் - இதை நான் மறுபடியும் கூறுகிறேன் - ஒரு காலத்தில் நீங்கள் உங்கள் தந்தையின் மரபு அணுவில் (Gene) இருந்தீர்கள். அப்பொழுது அவர் உங்களை அறிந்திருக்கவில்லை, நீங்களும் அவரை அறிந்திருக்கவில்லை. ஆனால் பாருங்கள், பரிசுத்த விவாகத்தின் மூலம் நீங்கள் உங்கள் தாயின் கர்ப்பமாகிய நிலத்தில் விதைக்கப்பட்டு, உங்கள் தந்தையின் சாயலில் ஒரு நபராக வெளிப்பட்டீர்கள். அதன் பிறகு ஐக்கியம் உண்டானது. 23நீங்கள் தேவனுடைய குமாரனாக அல்லது குமாரத்தியாக இருக்கக் கூடிய ஒரே வழி... ஏனெனில் நீங்கள் நித்திய ஜீவனைப் பெற்றிருக்க வேண்டும்... ஒரே ஒரு நித்திய ஜீவன் மாத்திரமே உண்டு, அதுதான் தேவனுடைய ஜீவன். ஒரே ஒரு நித்திய ஜீவன்: அது தேவன். நீங்கள் தேவனுடைய குமாரனாயிருப்பதற்கு, நீங்கள் எப்பொழுதும் அவருக்குள் இருந்திருக்க வேண்டும். உங்கள் ஜீவனின் மரபு அணு, இன்றிரவு உள்ள உங்கள் ஆவிக்குரிய ஜீவன், ஒரு மூலக்கூறு (molecule) உண்டாவதற்கு முன்பே பிதாவாகிய தேவனுக்குள் இருந்தது, பாருங்கள்? நீங்கள் தேவனுக்குள் இருந்த அந்த ஜீவ மரபு அணு - தேவனுடைய குமாரனாக வெளிப்பட்டவர்களேயன்றி வேறொன்றும் அல்ல. இக்காலத்தை பிரகாசிக்கச் செய்ய தேவனுடைய வார்த்தை உங்களுக்குள் வந்த பிறகு, நீங்கள் மற்றவர்களுக்கு அதை வெளிப்படுத்துகின்றீர்கள். நீங்கள் தேவனுடைய குமாரரும் குமாரத்தியுமாயிருப்பதால், உங்களுக்குள் இருக்கும் தேவனுடைய ஜீவனை நீங்கள் வெளிப்படுத்துகின்றீர்கள். எனவே நான் என்ன கூறுகிறேன் என்று புரிகிறதா? (சபையார் ''ஆமென்'' என்கின்றனர்- ஆசி) பாருங்கள்? நீங்கள் இப்பொழுது உண்டாக்கப்பட்டிருக்கின்றீர்கள்... இன்றிரவு நீங்கள் சபையில் உட்கார்ந்து கொண்டிருக்கும் காரணம் என்னவெனில், இந்த தேசத்துக்கும், இந்த ஜனங்களுக்கும், நீங்கள் தொடர்பு கொள்ளும் அண்டை வீட்டாருக்கும் தேவனை வெளிப்படுத்திக் காண்பிப்பது உங்கள் மேல் விழுந்த கடமையாகும். நீங்கள் எங்கேயிருந்தாலும், இங்கு நீங்கள் வருவீர்கள் என்று தேவன் அறிந்திருந்தார். ஏனெனில் நீங்கள் அவருடைய மரபு அணுக்கள் அல்லது தன்மைகளில் ஒருவராக இருக்கின்றீர்கள். நீங்கள் அப்படி இருந்திருக்க வேண்டும். நீங்கள் நித்திய ஜீவனைப் பெற்றிருந்தால், அது எப்பொழுதுமே நித்திய ஜீவனாக இருந்து வந்துள்ளது நீங்கள் இங்கு வருவீர்கள் என்று தேவன் உலகத் தோற்றத்துக்கு முன்பே அறிந்திருந்தார். வார்த்தை - தண்ணீர் முழுக்காகிய வார்த்தை - உங்கள் மேல் விழுந்தபோது, நீங்கள் ஒரு மனித உருவமாக வெளிப்பட்டீர்கள். இப்பொழுது நீங்கள், உலகப் பிரகாரமான உங்கள் தகப்பனுடன் ஐக்கியங் கொள்வது போன்று தேவனாகிய பிதாவினிடத்திலும் ஐக்கியங்கொள்கின்றீர்கள். பாருங்கள்? நீங்கள் ராஜாவின் குடிமக்கள் - குடிமக்கள் அல்ல, அவருடைய பிள்ளைகள். நித்திய ஜீவன் உங்களுக்குள் வாசமாயிருக்குமானால் நீங்கள் ஜீவனுள்ள தேவனின் குமாரரும் குமாரத்திகளுமாயிருக்கின்றீர்கள். 24இயேசு தேவனின் பரிபூரணத்தை மாம்சத்தில் வெளிப்படுத்தினார். தேவத்துவத்தின் பரிபூரணம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருந்தது. எனவே அவர் இவ்வுலகில் மாம்சத்தில் வெளிப்பட்ட போது, நீங்கள் அவருக்குள் அப்பொழுது இருந்தீர்கள். ஏனெனில் அவர் வார்த்தையாயிருந்தார். ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி நமக்குள்ளே வாசம் பண்ணினார். வார்த்தை மாம்சமானார். எனவே அவரோடு நீங்களும் நடந்தீர்கள்... அவர் இவ்வுலகில் இருந்தபோது, நீங்கள் அவருக்குள் இருந்தீர்கள். நீங்கள் அவருடன் பாடுபட்டீர்கள், அவருடன் மரித்தீர்கள், அவருடன் அடக்கம் பண்ணப்பட்டீர்கள், நீங்கள் அவருடன் கூட உயிரோடெழுந்து, இப்பொழுது தேவனுடைய தன்மைகளாக வெளிப்பட்டு, உன்னதங்களில் உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் ஏற்கனவே புது ஜீவனுக்கென்று உயிரோடெழுப்பப்பட்டு, கிறிஸ்து இயேசுவுடன் கூட உன்னதங்களில் உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள். ஓ, இந்நாட்களில் அது மிகவும் முக்கியம் வாய்ந்தது. இயேசு கிறிஸ்துவில் நாம் நமது ஸ்தானங்களில் பொருத்தப்பட்டுள்ளோம் என்பது நமக்கு மிகவும் முக்கியம் வாய்ந்தது. 25நாம் தேவனுடைய தன்மைகளாக இருப்போமானால், நாம் கோட்பாடுகளைக் கொண்டு வாழ முடியாது; நாம் ஸ்தாபனத் தத்துவங்களைக் கொண்டு வாழமுடியாது. நாம் வார்த்தையைக் கொண்டே வாழ வேண்டியவர்களாயிருக்கிறோம். ஏனெனில் எந்த ஒரு மனைவியும் அவள் கணவனின் ஒரு பாகமாயிருப்பது போன்று, மணவாட்டியும் மணவாளனின் ஒரு பாகமாயிருக்கிறாள். நாம் அந்த வார்த்தை - மணவாட்டியாக இருக்கவேண்டும். வார்த்தை மணவாட்டி என்றால் என்ன? இந்த மணி நேரத்துக்குரிய மணவாட்டி வெளிப்படுதல். அவள் கோட்பாடாகவோ அல்லது ஸ்தாபனமாகவோ இராமல், ஜீவிக்கும் தேவனுடைய (தெய்வ) வாய்மொழியாக, ஜீவிக்கும் தேவனுடைய தன்மையாக அமைந்து, நாம் வாழும் இந்த மணி நேரத்தில் வெளிப்படவிருக்கும் மணவாட்டியாக தேவனுடைய தன்மைகளை உலகிற்கு காண்பிக்கிறவளாயிருப்பாள். இப்பொழுது நாம் வெளிப்படுத்தும் தன்மைகளை மார்டின் லூத்தரால் வெளிப்படுத்த முடியவில்லை. ஏனெனில் அவர் முன் காலத்தில் இருந்தவர் - கோதுமை மணி நிலத்தில் விழுந்து வெவ்வேறு கட்டங்களில் வளர்ந்து வருவது போன்று. 26இதை நான் மறுபடியும் எடுத்துரைக்க விரும்புகிறேன். அந்த ஜெர்மனி தேசத்தான் என்னை பரியாசம் செய்து, மூடபக்தி வைராக்கியம் கொண்ட அனைவரிலும் நான் அதிக மூடபக்தி வைராக்கியம் கொண்டவன் என்று எழுதியுள்ள புத்தகத்தை நீங்கள் ஒருக்கால் படித்திருப்பீர்கள். தேவன் என்றழைக்கப்படும் அனைத்துக்கும் அவன் முற்றிலும் விரோதமானவன். அவன் தேவனையே பரியாசம் செய்து, ''சிவந்த சமுத்திரத்தை இரண்டாகப் பிளந்து தமது ஜனங்களை அதன் வழியாக கடக்கச் செய்த தேவன், இருளின் காலங்கள் முழுவதும் அந்த ஜனங்கள் துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்டதையும், சிறு பிள்ளைகள் சிங்கங்களுக்கு உணவாக அளிக்கப்பட்டதையும், கைகட்டிக் கொண்டு வேடிக்கை பார்த்த தேவன்...'' என்று எழுதியிருந்தான். பாருங்கள், முழு திட்டமும், சபை முழுவதுமே தெய்வீக வெளிப்பாட்டின் மேல் கட்டப்பட்ட ஒன்றாகும். மத்தேயு 16-ம் அதிகாரத்தில் இயேசு, “மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை. பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார் என்று பேதுருவிடம் கூறினார் - அவர் தாம் என்னவாயிருக்கிறார் என்னும் வெளிப்பாடு. ”இந்தக் கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை“ பாருங்கள்? இந்த மணி நேரத்தில் இயேசு கிறிஸ்துவைக் குறித்த வெளிப்பாடு, மற்றொரு காலத்தில் அவர் என்னவாயிருந்தார் என்றல்ல, இப்பொழுது என்னவாயிருக்கிறார் என்பதே... அது மணவாட்டியில் பூரண வளர்ச்சி அடைவதாக வேதாகமம் கூறியுள்ளது. எனவே கிறிஸ்து என்னும் கோதுமை மணி நிலத்தில் விழுந்து சாகவேண்டியிருந்தது போல், இருளின் காலங்களில் மணவாட்டி விழுந்து சாக வேண்டியிருந்தது. நிலத்தில் விழும் எந்த தானியமும் சாகவேண்டும். இல்லையெனில் அது தன்னை மறுபடியும் உற்பத்தி செய்து கொள்ள முடியாது. பெந்தெகொஸ்தே நாளன்று பரிசுத்த ஆவியை அனுப்பி அவர் நிறுவின அந்த மகத்தான சபை, லூத்தரின் காலத்தில் வளர்ந்து, இந்த கடைசி நாட்களில் இயேசு கிறிஸ்துவின் மணவாட்டியாக பூரண வளர்ச்சியடைவதற்கென, நிலத்தில் விழுந்து இரத்த சாட்சியாக மரிக்க வேண்டியதாயிற்று. பாருங்கள்? வேறு எந்த வழியிலும்... 27எனவே எடுத்துக் கொள்ளப்படுதலில் செல்ல வேண்டிய மணவாட்டி தோன்றுவாள். இவையனைத்தும் தேவனால் முன் கூட்டியே திட்டமிடப்பட்டு, அவரால் ஆதரிக்கப்படுபவை. ஆதிமுதற் கொண்டு அவர் ஒவ்வொரு மனிதனையும், ஒவ்வொரு இடத்தையும், யார் அதில் பங்கு கொள்வார்கள் என்பதையும் அறிந்திருக்கிறார். இது அனைத்தும் முன்கூட்டியே திட்டமிடப்பட்டது. அது இங்கிருக்கும் என்பதை தேவன் அறிந்திருந்தார் அவர் அவ்விதமாக அதை அமைத்து, நாம் அங்கு செல்லும் போது - ஒரு ஸ்தலத்தை நமக்காக ஆயத்தம் பண்ண அவர் சென்றிருக்கிறார். அங்கு நாம் செல்லும் போது, இந்த இரவு எவ்விதமாக ஆயத்தமாக்கப்பட்டிருக்கிறதோ, அவ்வாறே அதெல்லாம் ஆயத்தமாக்கப்பட்டிருக்கும் - இந்த மணி நேரம் ஆயத்தமாக்கப்பட்டிருப்பது போல். அவருடைய சிறந்த முன்னறிவு இவையனைத்தையும் அவருக்குத் தெரிவிக்கிறது - முன்னறிவின் மூலம். 28அவர் எல்லாம் அறிந்தவராயுள்ள காரணத்தால் எங்கும் பிரசன்னராயிருக்கிறார். அவர் எங்கும் பிரசன்னராயுள்ள காரணத்தால், எல்லாம் அறிந்தவராயிருக்கிறார். எனவே அவருடைய முன்னறிவைக் கொண்டு... அவர் பூமியின்மேல் அடிக்கும் காற்றைப்போல் உருவற்றவராக இருக்க முடியாது. அவர் உருவுள்ள ஒருவர். அவர் ஒரு புராணக் கதையல்ல. அவர் உண்மையாகவே ஜீவிக்கிற ஒருவர். அவர் வாசம் செய்கிறார். அவர் ஒரு வீட்டில் வாசம் செய்கிறார். அவர் பரலோகம் என்னும் ஸ்தலத்தில் வாசம் செய்கிறார். எனவே அவர் எல்லாம் அறிந்தவராயுள்ளதால் எங்கும் பிரசன்னராயிருக்கிறார். ஏனெனில் அவருக்கு எல்லாம் தெரியும். நீங்கள்... உங்கள் பிறப்பு முதற்கொண்டு நீங்கள் வளர்ந்து வருகின்றீர்கள். நீங்கள் பிறந்து இவ்வுலகில் தோன்றின போது, நீங்கள் இவ்வுலகில் தோன்றுவீர்கள் என்பதை தேவன் அறிந்திருந்தார். நீங்கள் குழந்தை பருவத்திலிருந்து வளர்ந்து முதிர்ந்த பருவம் அடைகிறீர்கள். வாலிபப் பருவத்தில், குழந்தை பருவத்தில் உங்களுக்கு விசித்திரமாகத் தோன்றினவை இப்பொழுது உண்மையாகக் காணப்படுகின்றது. நீங்கள் குழந்தையாயிருந்த போது, அதை உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் இப்பொழுதோ, உங்களுக்கு வயது வந்து விட்டதால், நீங்கள் புரிந்து கொண்டு, எல்லாமே சரியாக பொருத்தப்பட்டுள்ளது என்பதைக் கண்டு கொள்கிறீர்கள். நீங்கள்... அது உங்களுக்கு உண்மையில் அர்த்தமுள்ள ஒன்றாக இப்பொழுது ஆகிவிடுகின்றது. 29அப்படித்தான் உங்கள் ஆவிக்குரிய பிறப்பிலும் உள்ளது நீங்கள் ஆவிக்குரிய குழந்தையாக இருக்கும் போது. உங்களுக்கு ஒன்றுமே புரிவதில்லை. நீங்கள் பீடத்தண்டை வந்து, உங்கள் வாழ்க்கையை கிறிஸ்துவுக்கு அர்ப்பணிக்கிறீர்கள். அப்படிப்பட்ட விசித்திரமான காரியங்களை நீங்கள் செய்கின்றீர்கள். நீங்கள் ஏன் அப்படி செய்தீர்கள் என்று வியப்படைகின்றீர்கள், ஆனால் சற்று கழித்து நீங்கள் முதிர்வடையும் போது - முதிர்வடைந்த கிறிஸ்தவர்களாகும் போது, நீங்கள் புரிந்து கொள்ளுகின்றீர்கள். பாருங்கள்? ஏதோ ஒன்று வளர்கின்றது, நீங்கள் ஏன் அப்படி செய்ய வேண்டியதாயிருந்தது என்பதைக் கண்டு கொள்கின்றீர்கள். உங்கள் ஆவிக்குரிய பிறப்பு... உங்கள் இயற்கை பிறப்பு உங்கள் ஆவிக்குரிய, பிறப்பிற்கு நிழலாயுள்ளது. இந்த ஆவிக்குரிய, வாழ்க்கையில் நீங்கள் வளர்ந்து கொண்டு வந்தபோது, எல்லாமே உங்களுக்கு சரியாக பொருந்தினது. ஏனெனில் அதற்கென்று நீங்கள் உண்டாக்கப்பட்டீர்கள். ஒரு இரவு நீங்கள் தட்டுத்தடுமாறி ஒரு கூடாரக் கூட்டத்துக்கோ அல்லது எங்கோ மூலையிலுள்ள ஒரு சிறு சபைக்கு சென்றீர்கள். அங்கிருந்த போதகர் ஒரு குறிப்பிட்ட பொருளின் பேரில் பிரசங்கம் செய்தார். நீங்கள் தொடப்பட்டு பீடத்தண்டை வந்தது ஒரு ஆச்சரியமான செயல் அல்லவா? பாருங்கள்? பாருங்கள்? உலகத்தோற்றத்துக்கு முன்பே தேவன் அதை அறிந்திருந்தார். பாருங்கள்? நீங்கள் ஏன் அப்படி செய்தீர்கள் என்பது உங்களுக்கு அப்பொழுது விசித்திரமாகத் தென்பட்டது. ஆனால் இப்பொழுது நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். என்ன நடந்தது என்பதை நீங்கள் அறிந்து கொண்டீர்கள். அது இந்த வாழ்க்கையில் உங்களுக்கு மிகவும் பொருத்தமாய் அமைகின்றது. அது வரப்போகும் வாழ்க்கையிலும் பொருத்தமாய் அமையும். இந்த உலகமும் அதன் வாழ்க்கையும், நீங்கள் முதிர்வடையுந்தோறும், வளர்ந்து வருகின்றது, எல்லாமே உங்கள் வாழ்க்கையில் சரியாக அமைந்துவிடுகிறது. 30இங்கு ஒருவர் எதேச்சையாக வந்துள்ளார் என்பதை நான் நம்புவதில்லை. சற்று யோசித்துப் பாருங்கள், இவ்வுலகிற்கு நீங்கள் வரும்போது, எல்லாமே உங்களுக்காக முன்கூட்டியே ஆயத்தம் பண்ணப்பட வேண்டியதாயிருந்தது. நமக்காக எல்லாவிதமான நன்மைகளையும் ஆயத்தம் பண்ணின ஒரு தேவன் இருக்கும் போது, அவர் மேல் நாம் நம்பிக்கை வைக்க முடியாமலிருப்பது என்னால் புரிந்து கொள்ள முடியாத ஒன்றாக அமைந்துள்ளது. இப்பொழுது நாம் உள்ள இந்த குழப்பத்தின் மத்தியில், தேவன் நம்மை இவ்வுலகிற்கு கொண்டு வந்து, இங்குள்ள வாழ்க்கைக்காக நன்மையானவைகளை நமக்கு ஆயத்தம் பண்ணியிருக்கும் போது, வரப்போகும் வாழ்க்கைக்கென அவர் நித்தியமானவைகளை நமக்கு ஆயத்தம் பண்ணியிருப்பார் என்று நாம் எவ்வளவு அதிகமாக அவர் பேரில் விசுவாசமுள்ளவர்களாயிருக்க வேண்டும்? பாருங்கள்? அவ்வாறு விசுவாசமில்லாமலிருப்பது விசித்திரமான செயலே என்று கூற முற்படுகிறேன். 31என் தாயார் எனக்கு முன்பெல்லாம் பரலோகத்தைக் குறித்து விவரிப்பார்கள். பரலோகம் அவர்கள் விவரித்தது போன்று அப்படிப்பட்ட ஒரு இடமல்ல என்பது என் கருத்து. சபையானது அதிலிருந்து வளர்ந்துவிட்டது. அது முன்பெல்லாம்... மரித்தோர் அனைவரும் பரலோகத்துக்கு சென்று மேகங்கள் மேல் உட்கார்ந்து கொண்டு சுரமண்டலத்தை வாசிப்பதாக, ஓரிரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்த பழைய காலத்தவரிடையே ஒரு கருத்து நிலவி வந்தது. பரலோகம் என்னும் ஒரு ஸ்தலம் உள்ளது என்று அவர்கள் அறிந்திருந்தனர். ஆனால் அவர்கள் அது உண்மையாயிருக்குமானால் இசைக்கருவி வாசிப்பவர்களுக்கு நம்மைக் காட்டிலும் அங்கு முதன்மை ஸ்தானம் இருக்க வேண்டும். பார்த்தீர்களா? நாம் அது அப்படிப்பட்ட ஒரு இடமல்ல. அது சுரமண்டலங்கள் இசைக்கப்படுவதல்ல. வேதம் அப்படி போதிக்கவில்லை வார்த்தையின் பரிபூரணம் வருவதற்கு முன்பு, அல்லது இக்காலத்தில் நமக்கு வாக்களிக்கப்பட்டபடி ஏழு முத்திரைகள் திறக்கப்படுவதற்கு முன்பு, அது அவர்கள் கொண்டிருந்த கருத்தாகும். இப்பொழுது நாம் புரிந்து கொண்டுவிட்டோம். இது எவ்வளவு தத்ரூபமான இடமாக அமைந்துள்ளதோ, அவ்வாறே பரலோகமும் ஒரு தத்ரூபமான ஸ்தலம் என்று நான் நம்புகிறேன் (பாருங்கள்?), தேவன் நமது ஆவிக்குரிய வளர்ச்சியை இந்த உலகத்தில் ஆரம்பித்தார். பரலோகமும் இதைப் போன்று ஒரு தத்ரூபமான ஸ்தலம் என்று நான் நம்புகிறேன். அங்கு நாம் நித்திய காலமாக மேகங்களில் உட்கார்ந்து கொண்டிருக்கப் போவதில்லை. அங்கு நாம் சுரமண்டலங்களை இசைத்துக் கொண்டிருக்கப் போவதில்லை. ஆனால் நாம் தத்ரூபமான ஓரிடத்துக்கு சென்று செயல் புரியப் போகின்றோம். அங்கு நாம் வாழப் போகின்றோம்; அங்கு நாம் பணிபுரியப் போகின்றோம்; அங்கு நாம் அனுபவிக்கப் போகின்றோம். நாம் ஒரு ஜீவனுக்கு செல்கின்றோம், உண்மையான நித்திய ஜீவனுக்கு. நாம் பரலோகத்துக்கு செல்லப் போகின்றோம், பரதீசுக்கு ஆதாமும் ஏவாளும், பாவம் பிரவேசிப்பதற்கு முன்பு, ஏதேன் தோட்டத்தில் பணிபுரிந்து, வாழ்ந்து, புசித்து, எல்லாவற்றையும் அனுபவித்தது போன்று நாமும் அந்த இடத்தை அடைவதற்கு நமது பாதையில் சென்று கொண்டிருக்கிறோம். அது உண்மை, மறுபடியும்... முதலாம் ஆதாம் பாவத்தின் மூலம் நம்மை அங்கிருந்து வெளியே கொண்டு வந்துவிட்டான்; இப்பொழுது இரண்டாம் ஆதாம் நீதியின் மூலம் நம்மை மறுபடியும் அங்கு கொண்டு செல்கிறார் - நம்மை நீதிமான்களாக்கி, உள்ளே கொண்டு செல்கிறார். 32ஒலி நாடாக்களை வாங்கிச் செல்லும் உங்களுக்கு: நீதிமானாக்கப்படுதல் என்னும் என் செய்தி அடங்கிய ஒலி நாடாவை நீங்கள் வாங்கிச் செல்ல வேண்டுமென்று விரும்புகிறேன்... நீங்கள் செய்திகளைக் கேட்க ஒலிநாடாக்களை வாங்கிச் செல்கின்றீர்கள் அல்லவா? அதன் பேரில் நான் சில நாட்களுக்கு முன்பு இங்கு பேசினேன். நீங்கள் இவ்வுலகிற்கு வரப் போகின்றீர்கள் என்று பூமிக்குரிய உங்கள் பெற்றோர் அறிந்தவுடனே, உங்கள் வருகைக்காக எவ்வாறு ஆயத்தம் பண்ணினார்கள் என்பதைக் கவனியுங்கள். அதை இப்பொழுது சற்று சிந்தித்து பாருங்கள் - உங்கள் பூமிக்குரிய பெற்றோர். அது பரலோகத்திலிருக்கிற பிதாவுக்கு அடையாளமாயுள்ளது. “பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும் போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா உங்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?'' இயேசு இந்த வார்த்தைகளை பேசினார். பாருங்கள், உங்கள் வருகைக்காக அவர்கள் ஆயத்தம் பண்ணினார்கள். அவர்கள் ஒரு சிறு தொட்டிலை உண்டாக்கினார்கள், சிறு காலுறைகளையும் துணிகளையும் மற்றவைகளையும் வாங்கினார்கள். நீங்கள் இவ்வுலகில் தோன்றுவதற்கு முன்பே, உங்கள் வருகைக்காக அவர்கள் எல்லாவற்றையும் ஆயத்தம் செய்தார்கள். 33இயேசுவும் நமது வருகைக்காக ஆயத்தம் பண்ணுவதற்காக அங்கு சென்றிருக்கிறார். இப்பொழுது கவனியுங்கள், “என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு'' இப்பொழுது நாம்... வார்த்தையுடன் எதையும் கூட்டவோ அல்லது எடுத்துப் போடவோ நான் முற்படவில்லை. அப்படி நாம் செய்யக் கூடாது. ''இதனுடன் ஒரு வார்த்தையைக் கூட்டினால் அல்லது ஒரு வார்த்தையை எடுத்துப்போட்டால்...” என்று வெளிப்படுத்தின விசேஷம் 22-ம் அதிகாரம் உரைக்கிறது. ஆனால் இதை தெளிவுப்படுத்துவதற்காக கூற விரும்புகிறேன். கூட்ட வேண்டும் என்பதற்காக அல்ல. “என் பிதாவின் வீட்டில் அநேக விதமான வாசஸ்தலங்கள் உண்டு'' நாம் பரலோகத்துக்கு செல்லும் போது, நாம் அனைவரும் காண்பதற்கு ஒரே விதமாக இருப்போம் என்று நான் நம்புவது கிடையாது. எல்லாருமே கருமை நிற தலைமயிர் கொண்டவர்களாகவோ அல்லது பழுப்பு நிற தலை மயிர் கொண்டவர்களாகவோ அல்லது சிறிய உருவம் படைத்தவர்களாகவோ, பெரிய உருவம் படைத்தவர்களாகவோ அல்லது ராட்சத உருவம் படைத்தவர்களாகவோ இருப்போம் என்று நான் நம்புவது கிடையாது. தேவன் வெவ்வேறு வகைகளின் மேல் (Variety) பிரியம் கொண்ட தேவனாயிருக்கிறார் என்று நான் நம்புகிறேன். உலகம் அதை நிரூபிக்கிறது. அவர் பெரிய மலைகளையும் சிறிய மலைகளையும் படைத்திருக்கிறார். அவர், சமவெளிகளையும் பாலைவனங்களையும் படைத்திருக்கிறார், அவர் வெவ்வேறு வகையானவைகளைக் கொண்டிருக்கிறார். அவர் தமக்கு விருப்பமானபடி அவைகளை உண்டாக்கினார். அவர் வெயில் காலம், குளிர்காலம், வசந்தகாலம், இலையுதிர்காலம் போன்ற வெவ்வேறு காலங்களைப் படைத்தார். அவர் வெவ்வேறு வகைகளின் மேல் பிரியம் கொள்ளும் தேவன் என்பதை அது காண்பிக்கிறது, உங்களையும் அவர் வெவ்வேறு வகைகளாக உண்டாக்கியிருக்கிறார். சிலர் முன்கோபிகள், சிலர் பிடிவாதமுள்ளவர்கள், சிலர் அருமையானவர்கள், வேறு சிலர் தயவுள்ளவர்கள் இப்படியாக வெவ்வேறு வகை மனிதர் அவருடைய ராஜ்யத்திலும் உள்ளனர். பாருங்கள், 34பாருங்கள், பேதுருவையும் அந்திரேயாவையும் ஒப்பிட்டுப் பாருங்கள். அந்திரேயா ஒரு ஜெப வீரன், எப்பொழுதும் முழங்க்காலில் இருப்பவன். ஆனால் பேதுரு அப்போஸ்தலன் வைராக்கியமுள்ள ஒரு பிரசங்கி. பவுல் அவனைக் காட்டிலும் அறிவாளி - அவன் தீர்க்கதரிசியைப் போன்ற ஒருவன். அவன் உட்கார்ந்து கொண்டு... பாருங்கள், மோசே பழைய ஏற்பாட்டின் முதல் ஐந்து புத்தகங்களை எழுதினான். மற்றவை நியாயப்பிரமாணம், இராஜாக்கள், சங்கீதம் முதலானவை. சில புத்தகங்கள் தீர்க்கதரிசிகள் உரைத்தவைகளை கொண்டுள்ளவை. ஆனால் மோசே நியாயப்பிரமாணங்களை எழுதினான். அவன் வேதாகமத்தின் முதல் ஐந்து புத்தகங்களை எழுதினான்; ஆதியாகமம், யாத்திராகமம், லேவியராகமம், எண்ணாகமம், உபாகமம். பவுல் புதிய ஏற்பாட்டை எழுதினான். அது உண்மை. மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான், இயேசுவின் காலத்தில் நடந்தவைகளை சுவிசேஷங்களில் எழுதி வைத்தனர். ஆனால் பவுல் நியாயப் பிரமாணத்தையும் கிருபையையும் வெவ்வேறாகப் பிரித்து, அதனதன் ஸ்தானத்தில் பொருத்தினான். பாருங்கள்? அவன் புதிய ஏற்பாட்டை எழுதினவன், அவன் தேவனுடைய வார்த்தையை ஒழுங்குபடுத்தி புதிய ஏற்பாட்டை எழுதி நமக்களித்தான். இப்பொழுது கவனியுங்கள், அநேக, அநேக வாசஸ்தலங்கள், அநேக விதமான வாசஸ்தலங்கள். 35அநேக குன்றுகள், விதவிதமான நதிகள், ஊற்றுகள், குளங்கள், ஏரிகள் உள்ளது போன்று நீங்கள் இவ்வுலகிற்கு வந்த போது, இவையனைத்தும் ஏற்கனவே இருந்தன. பரலோகத்திலுள்ள உங்கள் பிதாவின் தயவினால் இவை இங்குள்ளன. ஏனெனில் சிலருக்கு மலைகள் பிடிக்கும், சிலருக்கு தண்ணீர் பிடிக்கும், வேறு சிலருக்கு பாலைவனங்கள் பிடிக்கும். எனவே... பாருங்கள், உங்கள் வருகை... உங்கள் சுபாவம் என்னவென்றும் நீங்கள் என்னவாயிருப்பீர்கள் என்றும் அவர் ஏற்கனவே அறிந்திருந்தார். எனவே நீங்கள் அனுபவிக்க வேண்டும் என்பதற்காக உங்களுக்கு ஏற்றபடி அவர் அவைகளைப் படைத்திருக்கிறார். ஓ, அவர் அருமையான பிதா (பாருங்கள்? அதனால் தான் அவர் இவைகளை இவ்வாறு உண்டாக்கியிருக்கிறார்). அவர் மலைகளை உண்டாக்கியதில் எனக்கு மகிழ்ச்சி. மலைகள் என்றால் எனக்கு மிகவும் பிரியம். அது எனக்கு பிடிக்கும். மற்றவர்கள், “இதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது. அவர் தமது பெட்டியிலிருந்த கற்களைக் கொட்டி அதை காலியாக்கியிருக்க வேண்டும்'' என்கின்றனர். நான் அனுபவிக்க வேண்டும் என்பதற்காக அவர் தமது பெட்டியைக் காலியாக்கினார். பார்த்தீர்களா? நீங்கள், ''எனக்கு சமவெளிகள் பிடிக்கும். அங்கு நான் அதிக தூரம் காணலாம்'' என்கிறீர்கள். இரு வெவ்வேறு இயல்புகள் நாம் இருவருமே கிறிஸ்தவர்கள். நீங்கள் இவ்வுலகில் தோன்றுவீர்கள் என்று பிதா முன்கூட்டி அறிந்து, இவ்வுலகில் நீங்கள் வருவதற்கு முன்பே இவையனைத்தையும் உங்களுக்காக ஆயத்தம் செய்தார். ஆமென்! நீங்கள் முதன் முறையாக இங்கு வருவதற்கு முன்பு அவர் உங்களுக்காக அதை ஆயத்தம் செய்தார் - அவர் செய்ததை எண்ணிப் பார்க்கும் போது, அது மிகவும் அற்புதமானதல்லவா? 36கவனியுங்கள், இவை உலகப் பிரகாரமான ஈவுகளே என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். இது அடையாளமாயுள்ளது. மோசே ஆசரிப்புக் கூடாரத்தை வனாந்திரத்தில் உண்டாக்க ஆயத்தமான போது, அவன் பரலோகத்தில் கண்டவைகளின் மாதிரியின் படியே அதை உண்டாக்கப் போவதாகக் கூறினான் என்று நாமறிவோம். பாருங்கள்? எனவே பூலோகத்திலுள்ளவைகள் நித்தியமானவைகளை வெளிப்படுத்துகின்றன. இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இவ்வுலகம் மிகவும் பெரியதாய் உள்ளது. அதை நாம் நேசிக்கிறோம். இங்கு நாம் வசித்து இதன் காற்றை உட்கொள்ளவும் பூக்களைக் காணவும் ஆவல் கொள்கிறோம். இங்கு மரித்துக் கொண்டிருக்கும் ஒன்று, நித்தியமான ஒன்று வெளிப்படுத்துகின்றதாய் அமைந்துள்ளது. ஒரு மரம் போராடிக் கொண்டு இழுத்துக் கொண்டு, பட்டுப்போகாமல் உயிரோடிருக்க முனைவதை நீங்கள் காணும்போது, அப்படி செய்ய அவசியமில்லாத ஒரு மரம் எங்கோ உள்ளது என்பதே அதன் அர்த்தம். ஒரு மனிதன் மருத்துவமனையில் அல்லது வியாதிபடுக்கையில், அல்லது விபத்து நேர்ந்து, மரணம் அவர் அருகே இருந்து, அவர் உயிர் வாழ கூச்சலிட்டு போராடிக் கொண்டிருப்பதை நீங்கள் காணும்போது, அதன் அர்த்தம் என்ன? எங்கோ ஓரிடத்தில் அவ்விதம் போராடி, கூச்சலிட அவசியமில்லாத ஒரு சரீரம் உள்ளது என்பதை அது காண்பிக்கின்றது. பாருங்கள்? அது அப்படி செய்வதில்லை. இவை உலகப்பிரகாரமான ஈவுகளே. நித்தியமானது ஒன்று உண்டென்று அதை வெளிப்படுத்துகின்றன. அந்த நித்தியமான ஒன்றை ஆயத்தம் பண்ணவே இயேசு சென்றிருக்கிறார். இதே விதமான, இதைக் காட்டிலும் பெரியவை உள்ளன என்பதை அவை வெளிப்படுத்துகின்றன. ஆனால் அவை இதே விதமானவை. 37இப்பொழுது ஞாபகம் கொள்ளுங்கள். ''பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய வீடு அழிந்து போனாலும், நித்திய வீடு பரலோகத்திலே நமக்கு உண்டு“ என்று வேதம் கூறுகின்றது. ஒரு சிறு குழந்தை தன் தாயின் வயிற்றில் உள்ள போது தன் சிறு தசைகளை முறுக்கிக் கொண்டும் திருப்பிக் கொண்டும் உள்ளது... ஆனால்... பாருங்கள்? நீங்கள் கவனிப்பீர்களானால் ஒரு ஸ்திரீ மிகவும் கெட்டவளாக இருக்கலாம். ஆனால் அவள் கர்ப்பிணியாகி, அந்த குழந்தை பிறப்பதற்கு சற்று முன்பு, அவளில் ஒருவிதமான அன்பு காணப்படும். அவளைச் சுற்றிலும் ஏதோ ஒன்றுள்ளது. அவள் மிகவும் இளகிய மனம் படைத்தவளாயிருக்கிறாள். ஏன்? அந்த மாம்ச சரீரத்தை ஏற்றுக்கொள்ள ஒரு சிறு தூதன் ஆவி காத்துக் கொண்டிருக்கிறது. அது பிறந்தவுடன், ஜீவ சுவாசம் அதற்குள் வருகிறது. தேவன் அதை அந்த குழந்தைக்குள் ஊதுகிறார், அது ஜீவாத்துமாவாகிறது. இந்த குழந்தை பிறக்கும் நேரத்தில், அதை ஏற்றுக் கொள்ள ஆவிக்குரிய சரீரம் ஒன்று அங்குள்ளது. இப்பொழுது, இந்த சரீரம் பூமியில் விழும் போது - குழந்தையின் சரீரம் பூமியில் விழுவது போன்று - அந்த ஆவியை தனக்குள் ஏற்றுக்கொள்ள நித்திய சரீரம் ஒன்று காத்திருக்கிறது. ஓ, எவ்வளவு பெரிய காரியம் இப்பொழுது நாம் கிறிஸ்து இயேசுவில் இருக்கிறோம் ('ஆமென்') நாம் கிறிஸ்துவில் குழந்தைகளாக, தேவனுடைய பிள்ளைகளாக கர்த்தராகிய இயேசுவின் வருகையின் போது முழு சரீர மீட்பைப் பெற்று அவர் நம்மை அவரிடம் சேர்த்துக் கொள்ள நாம் காத்துக் கொண்டிருக்கிறோம். அப்பொழுது அழிவுக்குரிய இந்த சரீரம் அழியாமையைத் தரித்துக்கொள்ளும். 38அவர் செய்த அனைத்தும் இனிவரப் போகும் காரியங்களுக்கு சாயலாக அமைந்துள்ளது. உதாரணமாக, அவர் இங்கு உங்களுக்கு அளித்துள்ள சரீரம்... அவர் உங்களுக்கு அளித்துள்ள சரீரம், இதைக் காட்டிலும் மகத்தான ஒன்று வரப்போகின்றது என்பதை வெளிப்படுத்துகின்றது. பாருங்கள்? மண்ணானவனுடைய சாயலை நாம் அணிந்திருக்கிறது போல, வானவருடைய சாயலையும் அணிந்து கொள்வோம். வரப்போகும் அந்த சரீரத்தில் எந்த பொல்லாங்கும் காணப்படாது. ஆனால் இந்த சரீரமோ பொல்லாங்கு, வியாதி, மரணம், துயரம் என்பவைகளால் நிறைந்துள்ளது. அண்மையில் தேவனுடைய வார்த்தை மறுரூபமாக்குதல் என்பதைக் குறித்து இங்கு நான் பேசினபோது, இந்த சரீரத்தில் பொல்லாங்கு காணப்படுகின்றதென்றும், நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நவீன நாகரீகம் அனைத்தும் பிசாசினால் உண்டானது என்றும் குறிப்பிட்டேன். அதை நீங்கள் நம்புகிறீர்கள் அல்லவா? வேதம் அவ்வாறு கூறுகின்றது. இந்த உலகத்திலுள்ள ஒவ்வொரு அரசாங்கமும், ஒவ்வொரு ராஜ்யமும் பிசாசுக்கு சொந்தமாகி பிசாசினால் ஆளப்படுகின்றது (அதை நாம் மறுக்கின்றோம்). வேதம் அதை வெளிப்படையாய் கூறுகின்றது. சாத்தான் இயேசுவை மிகவும் உயர்ந்த மலையின் மேல் கொண்டு போய் உலகத்தின் சகல ராஜ்யங்களையும் - இருந்தவைகளையும் இனி வரப் போகிறவைகளையும் - அவருக்கு காண்பித்து, அவையாவும் தனக்கு சொந்தமானவை என்று உரிமை கோரினான். இயேசு அவனிடம் விவாதம் செய்யவில்லை, ஏனெனில் அவன் இப்பிரபஞ்சத்தின் அதிபதியாயிருக்கிறான். பாருங்கள்? சாத்தான், “நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து என்னைப் பணிந்து கொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன்” என்றான். பாருங்கள்? அவர் தம்மை தியாக பலியாக ஒப்புக் கொடுக்காமலே, இவைகளை அவருக்களிக்க சாத்தான் முயன்றான். பாருங்கள்? அவன் அவருடன் பேரம் பேசினான். உலகம் பாவம் செய்தது, பாவத்துக்கு தண்டனை மரணம், எனவே அவர் மரிக்க வேண்டியதாயிருந்தது. அவர் மரணத்தை தம்மேல் ஏற்றுக்கொண்டு பாவத்துக்காக தண்டனை அனுபவிக்க வேண்டும் என்னும் காரணத்தால் தான் தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டார். திரும்பப் பெறுவதற்கு ஒன்றுமில்லை. எல்லாமே அவருக்கென்று குறிக்கப்பட்டுவிட்டது. அதற்கென்று கிரயம் செலுத்தப்பட்டு அது முற்றிலும் இலவசமாக அளிக்கப்படுகின்றது! கடன் அனைத்தும் செலுத்தப்பட்டுவிட்டது. இப்பொழுது அது அவருக்குச் சொந்தமானது. நாம் அவருடைய ராஜ்யத்தின் பிரதிநிதிகளாக, நம் ராஜாவாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இன்றிரவு இங்கு ஒன்று கூடி, உன்னதங்களிலே உட்கார்ந்து கொண்டிருக்கிறோம். 39நாம் வாழும் இவ்வுலகில் கல்வி... இன்று நாம் அனுபவிப்பது போல் தோன்றும் கல்வி, விஞ்ஞானம், நாகரீகம் போன்ற அனைத்தும் பிசாசினால் உண்டானவையென்றும் அவை அழிந்து போகுமென்றும் உங்களுக்கு நான் நிரூபிக்க விரும்புகிறேன். நீங்கள், “சகோ. பிரன்ஹாமே, நாகரீகமா?'' என்று வினவலாம். ஆம், ஐயா! நாகரீகம் சாத்தானின் மூலம் உண்டானது. ஆதியாகமம் 4-ம் அதிகாரம் அதை நிரூபிக்கின்றது. காயீனின் மகன் (பாருங்கள்?) இந்த நாகரீகத்தை தொடங்கி கட்டிடங்கள் போன்ற வைகளை கட்டினான். நாகரீகம் அறிவின் மூலம் வந்தது. அந்த அறிவை சாத்தான் ஏவாளுக்கு ஏதேன் தோட்டத்தில் அளித்தான். அது அவள் தேவனுடைய கற்பனைகளை மீறும்படி செய்தது. இவ்வுலகில் ஒரு நாகரீகம் நமக்கு வரப் போகின்றது. ஆனால் அது இந்த விதமான நாகரீகமாக இருக்காது. இந்த நாகரீகத்தில் நமக்கு வியாதி, துன்பம், இச்சை, மரணம் இவையனைத்தும் உள்ளன. இந்த நாகரீகத்தில் காணப்படும் அனைத்துமே தவறாயுள்ளது. ஆனால் வரப்போகும் அந்த நாகரீகத்தில் இவை ஒன்றுமே இருக்காது. நமக்கு விஞ்ஞானம் அவசியமிருக்காது. மூலமான ஒன்றை தாறுமாறாக்குவதே விஞ்ஞானம். பாருங்கள்? நீங்கள் ஒரு மூலக்கூற்றை அல்லது அணுவை மேலும் பிளந்து அணுசக்தியுண்டாக்கி எல்லாவற்றையும் நிர்மூலமாக்கப் பார்க்கின்றீர்கள். நீங்கள் துப்பாக்கியில் தோட்டாக்களை நிறைத்து ஒன்றை சுட்டு வீழ்த்துகின்றீர்கள் நீங்கள் பெட்ரோலை பூமியைக் தோண்டியெடுத்து, பூமியைத் தளரச் செய்து அது என்றாவது ஒரு நாள் வெடித்துப் போகச் செய்கின்றீர்கள். நீங்கள் காரில் பெட்ரோலை நிறைத்து சாலையில் மணிக்கு தொண்ணூறு மைல் வேகம் சென்று யாரையாவது கொன்று விடுகின்றீர்கள். பாருங்கள்? ஓ, நாம் இறுக்கமடைந்து, வேகமாக சென்று, உந்தித்தள்ளி செயலில் ஈடுபட வேண்டியதாயுள்ளது... ஓ, பாருங்கள். இவையனைத்தும் பிசாசினால் உண்டானவை. தேவனுடைய ராஜ்யத்தில் மோட்டார் வாகனங்கள், ஆகாய விமானங்கள், விஞ்ஞானத்தினால் ஏற்பட்ட சாதனைகள் எதுவுமே இருக்காது. இருக்கவே இருக்காது! அங்கு கல்வி என்பதே இருக்காது. இப்பொழுதுள்ள கல்வியைக் காட்டிலும் அது மிகவும் மேன்மையான கல்வியாக இருக்கும், எனவே அந்த கல்வி அங்கு நினைக்கப்படுவதில்லை. பாருங்கள்? கல்வி, நாகரீகம் இவையனைத்தும் சாத்தானால் உண்டானவை. நீங்கள் “சகோ. பிரன்ஹாமே, அப்படியானால் நீங்கள் ஏன் படிக்கின்றீர்கள்?'' என்று கேட்கலாம். 40பாருங்கள், அது எப்படியென்றால், நான் ஏன் இப்பொழுது உடை உடுக்கிறேன்? முதலில் இருந்த நாகரீகத்தில், அவர்களுக்கு உடை அவசியமில்லை. அவர்கள் மகிமையினால் மூடப்பட்டிருந்தனர். அவர்கள் உடை உடுப்பதற்கு எக்காரணமும் இல்லை. ஏனெனில் அவர்கள் நிர்வாணிகள் என்பதை அறியாமலிருந்தனர். இப்பொழுது நாம் கண்டு கொள்கிறோம், நாம் நிர்வாணிகள் என்பதை அறிந்திருக்கிறோம். பாவம் இங்கு தங்கியுள்ள காரணத்தால், நாம் உடை உடுக்க வேண்டியதாயுள்ளது. ஆனால் ஆதியில் அவ்வாறில்லை; அங்கு பாவம் இல்லை. பாருங்கள்? அது போன்றுதான் இந்த நாகரீகத்தில் நாமெல்லாரும் படிக்கின்றோம். எழுதுகிறோம், இவைகளைச் செய்கின்றோம். ஆனால் அதனுடன் ஒப்புரவாக வேண்டாம். அதை உங்கள் தேவனாக்கிவிடாதீர்கள். ஏனெனில் அது கம்யூனிஸக் கொள்கையின் தேவன் பாருங்கள்? அது இயேசு கிறிஸ்துவை சார்ந்ததல்ல. 41இயேசு கிறிஸ்துவும் விசுவாசத்தின்படியே தான்; நீங்கள் விஞ்ஞானம் பூர்வமாக நிரூபிக்க வேண்டிய ஒன்றல்ல, ஆனால் நீங்கள் விசுவாசிப்பது தான். நீங்கள் விசுவாசிப்பதை விஞ்ஞான ரீதியாக நிரூபிக்க முடியாது. இன்றிரவு இக்கட்டிடத்தில் தேவன் இருக்கிறார் என்பதை என்னால் உங்களுக்கு விஞ்ஞான ரீதியாக நிரூபித்துக் காண்பிக்க முடியாது. இருப்பினும் அவர் இங்கே இருக்கிறார் என்று நானறிவேன். என் விசுவாசமோ அதை உறுதிப்படுத்துவதாய் உள்ளது. ஆபிரகாமுக்கு சாராள் என்னும் ஸ்திரீயினால் பிள்ளை உண்டாகுமென்று அவனால் உங்களுக்கு விஞ்ஞான ரீதியாக நிரூபித்துக் காண்பிக்க முடியாது. அவளுக்கு அப்பொழுது ஏறக்குறைய நூறு வயது. ஆனால் அவனுடைய விசுவாசம் அதை உறுதிப்படுத்தினது. பாருங்கள்? அதற்கு விஞ்ஞானப் பூர்வமான நிரூபணம் அவசியமில்லை. மருத்துவர், ''அந்த ஸ்திரீயின் மூலம் குழந்தை பிறக்கப் போகின்றது என்று கூறிக் கொண்டிருக்கும் அந்த மனிதனுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது. அந்த மனிதனுக்கு நூறு வயது, அவளுக்கு தொண்ணூறு வயது என்றிருப்பார்“, ஆனால் பாருங்கள். தேவன் அவ்வாறு கூறினார். அது விஞ்ஞானத்தின் அடிப்படையில் அல்ல. தேவனுடைய வார்த்தையை நம்புவதற்கு விசுவாசமே தேவையாயுள்ளது. விஞ்ஞானம் அல்ல. 42எனவே நமது பள்ளிக் கூடங்களும் மற்றவைகளும் பெரிதாயுள்ளன. அதாவது... ''நீங்கள் சென்று பள்ளிக் கூடங்களை நிறுவுங்கள்'' என்று தேவன் கூறவில்லை; வேதப் பள்ளிக் கூடங்களையும் கூட. அது உங்களுக்குத் தெரியுமா? (சபையார் 'ஆமென்' என்கின்றனர்- ஆசி). அவர், ''வார்த்தையைப் பிரசங்கியுங்கள்'' என்றுதான் கூறினார், அது உண்மை. எனக்குத் தெரிந்தவை அனைத்திலும் நம்முடைய கல்வி முறைமை தான் நம்மை தேவனிடமிருந்து வெகுதூரம் கொண்டு சென்றுள்ளது (அது உண்மை!) - தேவனிடமிருந்து வெகுதூரம். பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் ஆகியவைகளைக் கட்டுவதற்கு தேவன் கூறவில்லை. அது உலகத்துக்கும் அதை சேர்ந்த கூட்டத்தினருக்கும் அளிக்கப்பட்ட பொறுப்பு. ஆனால் அவர்களுக்கு விரோதமாக எனக்கு ஒன்றுமில்லை. அவர்கள் தங்கள் பாகத்தை செய்து கொண்டிருக்கின்றனர். இருப்பினும், அது இன்னும் அங்கில்லை. நாம் சிறந்த மருத்துவமனைகளைக் கட்டி, சிறந்த மருந்துகளைக் கொடுக்கின்றோம். இருப்பினும் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் மரிக்கின்றனர். ஓ, என்னே, ஆனால் தேவனுடைய ராஜ்யத்திலே மரணம் கிடையாது; வருத்தம் கிடையாது; ஆமென்! இவ்வுலகத்தின் காரியங்கள் நமக்கு அவசியமில்லை. நாம் இவைகளையெல்லாம் கடந்து தேவனுடைய உண்மையான காரியங்களில் பிரவேசித்துவிட்டோம். விஞ்ஞானத்தின் மூலம் நாம் கண்டு பிடிக்க அதிகம் பிரயாசப்படுகிறோம். ஆனால் நம்முடைய விஞ்ஞான வளர்ச்சி அதிகமாகுந்தோறும், நமது மேல் நாம் இன்னும் அதிகமாக மரணத்தை வருவித்துக் கொள்கின்றோம். நாம் போரில் தோல்வியடைகிறவர்களா யிருக்கிறோம். எனவே அதை விட்டு விட்டு, தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை இன்றிரவு விசுவாசித்து, விசுவாசத்தினால் அவரை ஏற்றுக் கொள்ளுங்கள். அவர் ஒருவர் மாத்திரமே. விஞ்ஞானம் உங்களை எதற்காக ஆயத்தப்படுத்துகின்றது? அதிக மரணத்திற்காக. அது உண்மை. ஸ்புட் நிக் (Sputnik) செயற்கை கோள்களும் மற்றவைகளும் மேலே சென்று உலகம் முழுவதும் மரணத்தை பரப்புகின்றன. அதை நீங்கள் நோக்காதீர்கள். உங்கள் தலைகளை இன்னும் உயரமாக பரலோகத்தை நோக்கி உயர்த்துங்கள். பரலோகத்தை நோக்கி... இன்றிரவு இயேசு தேவனுடைய வலது பாரிசத்திலே உட்கார்ந்து கொண்டு, எப்பொழுதும் உயிரோடிருக்கிறவராய், நாம் சத்தியம் என்று விசுவாசிக்கும் அவருடைய வார்த்தையை அறிக்கை செய்வதன் அடிப்படையில் மத்தியஸ்த்தம் செய்து கொண்டிருக்கிறார். 43இந்த வாழ்க்கை எல்லாவிதமான பொல்லாப்பினாலும் நிறைந்துள்ளது என்று நாம் காண்கிறோம். வரப்போகும் வாழ்க்கையில் அது இராது. இந்த வாழ்க்கை இச்சை, வியாதி, மரணம், ஆகியவைகளைக் கொண்டுள்ளது. ஏன் அப்படி? அவர் ஆயத்தம் பண்ணச் சென்ற வீடு இதுவல்ல. இது தொற்று நோய் மருத்துவமனை வீடு (Pest House). எத்தனை பேருக்கு அது எப்படிப்பட்ட வீடென்று தெரியும் ? நிச்சயமாக. நல்லது, அதில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தொற்று நோய் மருத்துவமனை வீட்டில் தான் வியாதியுள்ளவர்களை வைக்கின்றனர். நல்லது, அதை தான் பாவம் நமக்கு செய்துள்ளது. அது நம்மை பூமிக்குரிய தொற்று நோய்கள் நிறைந்த வீட்டில் வைத்துள்ளது. வேறு யாரும் அந்த வீட்டுக்குள் செல்ல அனுமதி கிடையாது. ஏனெனில் அது எல்லாவிதமான கிருமிகளால் நிறைந்துள்ளது. அதற்குள் செல்பவர் கிருமிகளால் பீடிக்கப்பட்டு வியாதிப்படுவார்கள். பாவம் நம்மை பிசாசின் தொற்றுநோய் நிறைந்த வீட்டில் கொண்டு வந்துள்ளது. 44ஓ, மற்றைய வீடு பிதாவின் வீடு என்றழைக்கப்படுகின்றது. ''ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம் பண்ணப் போகிறேன். நான் மறுபடியும் வந்து உங்களை தொற்றுநோய்கள் நிறைந்த இந்த வீட்டிலிருந்து வெளியே கொண்டு வந்து, என் பிதாவின் வீட்டில் உங்களைக் கொண்டு செல்வேன்'' ஆமென். பார்த்தீர்களா, இந்த பழைய, பூமிக்குரிய தொற்றுநோய்கள் நிறைந்த வீட்டிலிருந்து என்னை வெளியே கொண்டு வாரும். அவர் ஒரு ஸ்தலத்தை ஆயத்தம் பண்ணச் சென்றிருக்கிறார். அங்கு பொல்லாங்கு கிடையாது, வியாதி கிடையாது, வயோதிபம் கிடையாது, மரணம் கிடையாது. அது பரிபூரண ஸ்தலமாக அமைந்து, உங்களை அந்த பரிபூரணத்துக்கு அழைக்கின்றது. அங்கு அடைவதற்கு, நீங்கள் சற்குணராய் இருக்க வேண்டும். வேதம் அவ்வாறு கூறியுள்ளது. “ஆகையால் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறது போல், நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள்”. அது பரிபூரண ராஜ்யம். எனவே பூரண சற்குணர் மாத்திரமே அங்கு அடைய முடியும். ஏனெனில் நீங்கள் பூரண சற்குணரான தேவனுடைய குமாரனை விவாகம் செய்ய வேண்டியவர்களாயிருக்கிறீர்கள். எனவே நீங்கள் பூரண சற்குண மணவாட்டியாயிருக்க வேண்டும். எனவே பரிபூரண வார்த்தையைத் தவிர வேறெதனால் அந்த நிலையை நீங்கள் அடைய முடியும்? இந்த வார்த்தை தான் தீட்டுக்கழிக்கும் தண்ணீர். அதுவே நம்மை பாவங்களற சுத்திகரிக்கின்றது. ஆமென்! அது உண்மை. இயேசு கிறிஸ்துவின் இரத்தம்! அதை சிந்தித்துப் பாருங்கள்! சொட்டு சொட்டாக ஒழுகும் இரத்த வார்த்தை! ஆமென்! இரத்தம் - தேவனுடைய வார்த்தை மணவாட்டியைக் கழுவுதற்கென இரத்தத்தை ஒழுகச் செய்கின்றது. ஆமென்! ஆம், ஐயா! அவள் பரிபூரணமான, கலப்படமற்ற மணவாட்டியாக நிற்கிறாள். அவள் முதலாவதாக பாவம் செய்யவேயில்லை. 'ஆமென்', அவள் அந்த கண்ணிக்குள் அகப்பட்டுக் கொண்டாள். பாருங்கள்? அவர் ஆயத்தம் பண்ணச் சென்ற பிதாவின் வீடு அங்குள்ளது. 45இது இனச்சேர்க்கையினால் வந்த ஒன்றாகும். வீழ்ச்சியில்லிருந்து, ஆகவே அது வீழ்ச்சியுடனே விழுந்து போக வேண்டும். நீங்கள் எவ்வளவுதான் அதற்கு ஒட்டு போட முயன்றாலும், அது எப்படியும் விழுந்து போகும். அவள் அதை செய்தாள், அவளுக்கு விமோசனம் இல்லை. தேவன் அவ்வாறு கூறினார். அவள் அத்துடன் முடிந்துவிட்டாள். தேவன் அதை நிர்மூலமாக்குவார். அவர் அவ்வாறு கூறியுள்ளார். முழு காரியமும் புதிதாக்கப்படும். அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? (சபையார் 'ஆமென்' என்கின்றனர் - ஆசி) ஆதியில் இந்த உலகம் பிறந்தபோது; தேவன் முதலில் தண்ணீரை பூமியிலிருந்து தனியே ஒதுக்கினபோது - அவர் தாயின் கர்ப்பத்திலுள்ள தண்ணீரைச் செய்தது போல - உலகம் பிறந்தது. ஆம்! தேவன் ஜனங்களை இவ்வுலகில் வைத்தபோது, அவர்கள் அங்கு வாழத் தொடங்கினர். பிறகு அவர்கள் பாவம் செய்யத் தொடங்கினர். நோவாவின் நாட்களில் அது தண்ணீர் முழுக்கினால் ஞானஸ்நானம் பெற்றது. பிறகு சிருஷ்டிகரின் இரத்தம் அதன் மேல் விழுந்ததால் அது பரிசுத்தமாக்கப்பட்டது. அந்த வழியாய் தான் நீங்களும் வருகிறீர்கள்; தேவனை விசுவாசிக்கத்தக்கதாக நீதிமானாக்கப்படுதலின் மூலம், நீங்கள் மனந்திரும்புதலுக்கென்று ஞானஸ்நானம் பெற்றீர்கள் - உங்கள் பாவ மன்னிப்புக்கென்று. உங்கள் பாவங்களை நீங்கள் தேவனுக்கு முன்பாக அறிக்கையிட்டீர்கள், அவர் உங்கள் பாவங்களை உங்களுக்கு மன்னித்தார். நீங்கள் மன்னிக்கப்பட்டீர்கள் என்பதை ஜனங்களுக்கு அறிக்கை செய்து, இயேசு கிறிஸ்து உங்களுக்காக மரித்தாரென்றும், அவர் உங்கள் ஸ்தானத்தை எடுத்துக் கொண்டாரென்றும் நீங்கள் இப்பொழுது அவருடைய ஸ்தானத்தில் நிற்கிறீர்கள் என்றும் விசுவாசிக்கிறீர்கள் என்பதை உலகிற்கு காண்பிக்க ஞானஸ்நானம் பெற்றீர்கள். நீங்கள் அவராக வேண்டும் என்பதற்காக அவர் நீங்களானார். அப்பொழுது பரிசுத்தமாக்கும் தேவனுடைய வல்லமை உங்கள் வாழ்க்கையில் காணப்பட்ட எல்லா கெட்ட பழக்க வழக்கங்களையும் நீக்கி சுத்திகரித்தது. நீங்கள் புகைபிடித்து, குடித்து செய்யத் தகாத செயல்களைப் புரிந்து, பொய் சொல்லிக் கொண்டிருந்தீர்கள். இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் பரிசுத்தமாக்கும் வல்லமை உங்கள் வாழ்க்கையில் வந்து இவையனைத்தையும் எடுத்துப் போடுகின்றது. ஏதாவது தவறு நேரிடும் போது, நீங்கள் உடனே, “ஒரு நிமிடம் பொறுங்கள் என்னை மன்னித்து விடுங்கள். நான் அப்படி கூற நினைக்கவில்லை'' என்கிறீர்கள். பாருங்கள்? பிசாசு அங்கு உங்களுக்கு ஒரு கண்ணியை வைத்தான் ஆனால் நீங்கள் கிறிஸ்தவராயிருக்கும் பட்சத்தில் கிருபை உடனடியாக உங்களிடம் வந்து, ”நான் செய்தது தவறு'' என்று கூறும்படி செய்கிறது. ஆம்! எனவே... 46அடுத்தப்படியாக நீங்கள் பெற்றுக்கொள்வது பரிசுத்த ஆவி மற்றும் அக்கினி அபிஷேகம். ஆயிர வருட அரசாட்சி முடிவு பெற்றவுடனே தேவன் இந்த உலகத்திற்கு அக்கினி ஞானஸ்நானம் கொடுக்கப் போகிறார். அது எல்லாவற்றையும் நிர்மூலமாக்கும். வானங்களும் பூமியும் எரிந்து அழிந்து போகுமென்று பேதுரு கூறியுள்ளான். அது அக்கினி அபிஷேகம் பெற்று, முழுவதும் புதிதாக்கப்படும். அப்பொழுது புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகும். அங்கு நீதி வாசமாயிருக்கும். அங்குதான் நாம்... தேவனுடைய வார்த்தை நமது ஆத்துமாக்களை பிரகாசிக்கச் செய்தபோது, நாம் அழிவுள்ளவர்கள், காலவரையுள்ளவர்கள் என்னும் நிலையிலிருந்து நித்தியமுள்ளவர்களாக; அவருடைய தன்மைகளை, தேவனுடைய மரபு அணுவைப் பெற்ற தேவனுடைய குமாரரும் குமாரத்திகளுமாக மாறி, பரலோகத்திலுள்ள பிதாவாகிய தேவனை நோக்கி, “அப்பா, பிதாவே, என் தேவனே, என் தேவனே'' என்று கூப்பிடும் சிலாக்கியத்தைப் பெறுகிறோம். ''என் பிதாவின் வீட்டில்...” 47இந்த பழைய உலகம் விழுந்து போக வேண்டும். ஏனெனில் அது இனசேர்க்கையின் மூலம் வந்தது. அது துவக்கத்தில் கீழ்ப்படியாமையின் மூலம் வந்தது. நாம் வீழ்ச்சியின் காரணத்தால் இவ்வுலகில் இனசேர்க்கையின் மூலம் பிறந்தோம். அது மீண்டும் அதே விதமாக வீழ்ச்சிக்கே செல்லவேண்டும். ஆனால் அவர் இப்பொழுது உங்களுக்காக ஆயத்தம் பண்ணிக் கொண்டிருப்பது விழ முடியாது. ஏனெனில் அவர் அதை மிகவும் நாம் இந்த விதமான சரீரத்திலேயே எப்பொழுதும் வாழ நேர்ந்தால் என்னவாகும்? மரணம் என்று ஒன்று இருப்பதற்காக உங்களுக்கு மகிழ்ச்சி அல்லவா? (சபையார் 'ஆமென்' என்கின்றனர்) அது வினோதம் அல்லவா? இப்பொழுது, உதாரணமாக, சில ஆண்டுகளுக்கு முன்பு நான் சிறுவனாயிருந்தேன், இப்பொழுது நான் நடுத்தர வயதுள்ள மனிதன். இங்கு என் நண்பர் ஒருவர், திரு. டெள உட்கார்ந்து கொண்டிருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு அவருக்கு தொண்ணூற்று மூன்று வயது முடிந்தது. அவரை இப்பொழுது பாருங்கள். நாற்பது அல்லது நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு பிறகு நான் அவரைப் போல் இருப்பேன். இன்னும் நாற்பது ஆண்டுகள் அவருக்கு கூட்டுங்கள். அவர் எங்கு செல்வார். ஒரே ஒரு... 48இந்த கிருமிகள் நிறைந்த வீட்டிலிருந்து நம்மை விடுவிக்க ஏதோ ஒன்றுள்ளதற்காக நான் மகிழ்ச்சி கொள்கிறேன். திறந்த வாசல் ஒன்றுண்டு, அது மரணம் என்றழைக்கப்படுகிறது. இயேசு அந்த வாசலில் நின்று கொண்டிருக்கிறார். 'ஆமென்' அவர் என்னை நதிக்கு அப்பால் நடத்தி செல்வார். அந்த வாசலின் வழியாக அவர் என்னைக் கொண்டு செல்வார். அப்பால் மரணம் என்றழைக்கப்படும் ஒரு பெரிய வாசல் உள்ளது. ஒவ்வொரு முறையும் உங்கள் இருதயம் துடிக்கும் போதும், நீங்கள் அதற்கு ஒரு துடிப்பு அருகாமையில் செல்லுகின்றீர்கள். என்றாவது ஒரு நாள் நான் அந்த வாசலுக்கு வரவேண்டும். நீங்கள் அங்கு வர வேண்டும். நான் அங்கு வரும் போது, ஒரு கோழையாக இருக்க விரும்பவில்லை. நான் கூச்சலிட்டு பின்னால் ஓட எனக்கு விருப்பமில்லை. நான் அந்த வாசலை அடைந்து, அவருடைய நீதியின் அங்கியினால் என்னை சுற்றிக்கொள்வேன் - என்னுடைய நீதியின் அங்கியினால் அல்ல, அவருடைய நீதியின் அங்கியினால். அதன் மூலம், அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையினால் அவரை நான் அறிந்திருக்கிறேன் என்பதை அறிந்து கொள்வேன். அவர் என்னை கூப்பிடும் போது, நான் மரித்தோரிலிருந்து வெளியே வந்து, கிருமிகள் நிறைந்த இந்த வீட்டிலிருந்து விடுவிக்கப்பட்டு, அவரோடு கூட இருப்பேன். இந்த சரீரம் எங்கு விழ நேரிட்டாலும், அது எந்த இடத்தில் விழுந்தாலும், அது என்னவானாலும், என்றாவது ஒரு நாள் அதை விட்டு நான் வெளியே வருவேன். ஏனெனில் அவர் அவ்வாறு எனக்கு வாக்களித்துள்ளார். அதை நாம் விசுவாசிக்கிறோம். ஆம், ஐயா! விழுந்து போகக்கூடாத ஒன்றை அவர் உண்டாக்கிக் கொண்டிருக்கிறார். 49இவ்வுலகில் கர்ப்பிணியாயுள்ள ஒரு ஸ்திரீயை கவனியுங்கள். அவளுடைய சரீரம் குறிப்பிட்ட சிலவற்றிற்காக ஆசை கொள்கிறது. நான் என்ன கூறுகிறேன் என்று வயது வந்தவர்கள் அனைவரும் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன். குழந்தையை சுமந்து கொண்டிருக்கும் தாயின் சரீரத்தில் ஏதாகிலும் குறைவு ஏற்படுமானால் அவள் சிலவற்றிற்காக ஆசை கொள்ளத் தொடங்குகிறாள். கவனியுங்கள். தந்தை எப்படி... நாங்கள் எளிய குடும்பத்தில் வளர்ந்ததை நினைவு கூருகிறேன், நாங்கள் சிறுவர்களாயிருந்த போது, உண்பதற்கும் கூட எங்களிடம் ஒன்றுமில்லை, உங்களில் பலர் அதே விதமாக கஷ்டப்பட்டிருப்பீர்கள். எப்படி அந்த - அந்த குழந்தை பிறப்பதற்கு முன்பு, தாய் ஏதாவதொன்றுக்கு ஆசைப்படுவாள், தந்தை முயன்று எப்படியாகிலும் அதை அவளுக்கு கொண்டு தருவார். பாருங்கள், அது அவளுடைய சரீரம்... அவள் சரீரத்துக்கு சுண்ணாம்பு சத்து, விட்டமின்கள் போன்றவை தேவைப்படுகின்றன. பாருங்கள்? வரப்போகும் அந்த குழந்தைக்கு உணவளிக்க, அவள் சரீரம் ஆசைப்படுகின்றது. குழந்தை சந்தோஷமுள்ளதாயும் நல்ல ஆரோக்கியத்துடனும் பிறக்க வேண்டும் என்பதற்காக பெற்றோர் அதை வாங்க முயல்கின்றனர். பாருங்கள், உங்கள் பெற்றோரும் அப்படித்தான் செய்தனர். ஏதாவதொன்று தேவைப்படும் போது, தாய் அதை சாட்சியாக அறிவிக்கிறாள். பாருங்கள்? அவளுடைய உடலமைப்பு அவ்வாறு உள்ளது. பிறக்கப் போகும் குழந்தைக்கு ஏதாவதொன்று தேவைப்படும் போது, தாய் அதற்காக ஆசைப்படுகிறாள் என்பதை நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள். 50இப்பொழுது ஒரு நிமிடம் நில்லுங்கள். நாம் ஏன் எழுப்புதல் கூட்டங்களை நடத்துகிறோம்? நாம் ஏன் சபை கூடுகிறோம்? நான் ஏன் ஜனங்களை எப்பொழுதும் கடிந்து கொள்கிறேன்? நான் ஏன் பெந்தெகொஸ்தே பெண்கள் முகத்தில் வர்ணம் தீட்டிக் கொள்வதையும், அழகுப்படுத்தும் பொருட்களை உபயோகிப்பதையும், தலைமயிர் கத்தரித்துக் கொள்வதை விட வேண்டும் என்று கூறிக் கொண்டிருக்கிறேன்? நான் ஏன் அப்படி கூறுகிறேன்? ஏனெனில் பழமை நாகரீகமுள்ள பெந்தெகொஸ்தேயினர் இம்மாதிரி செயல்களில் ஈடுபட்டதில்லை. உண்மையான வேத வழி அதை செய்யாதிருப்பதே. புருஷருக்குரிய குட்டைகால் சட்டைகளையும், உடைகளையும் நீங்கள் உடுக்கின்றீர்கள். அது தேவனுக்கு அருவருப்பானது என்று வேதம் கூறுகிறதென்று உங்களுக்குத் தெரியுமா? (சபையார் 'ஆமென்' என்கின்றனர்). ஆனால் நாமோ அதை அனுமதிக்கிறோம். பரிசுத்த ஆவி ஏன் கூக்குரலிட்டுக் கொண்டிருக்கிறது? அங்கு ஏதோ குறைவுள்ளது என்று அவர் அறிந்திருக்கிறார். நாம் இயேசு கிறிஸ்துவின் பூரண வளர்ச்சியை அடைய வேண்டும். நாம் தேவனுடைய குமாரரும் குமாரத்திகளுமாய் இருக்க வேண்டும். நாம் தேவனுடைய பிள்ளைகளைப் போல் நடந்து கொள்ள வேண்டும். 51பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சிறு கதை கூறப்படுவது வழக்கம். பின்னால் ஒரு கறுப்பு சகோதரன் உட்கார்ந்து கொண்டிருப்பதை நான் கவனித்தேன். தென்பாகத்தில் அவர்கள் அடிமைகளை விற்பது வழக்கம் - அது அடிமை விடுதலை பிரகடனம் வருவதற்கு முன்பு. அவர்கள் கார் விற்பனை செய்பவரிடம் சென்று காரை வாங்குவதைப் போல, அடிமைகளை விலைக்கு வாங்கினர். அவர்களுக்காக செலுத்தப்பட்ட தொகைக்கு அவர்கள் ரசீது கொடுப்பார்கள். 52ஒரு சமயம் ஒரு தரகன் வந்தான். அவன் தோட்டங்களுக்கு சென்று அடிமைகளை வாங்குவான். ஒரு நாள் ஒரு பெரிய தோட்டத்துக்கு அவன் சென்றான். அங்கு நிறைய அடிமைகள் இருந்தனர். எத்தனை அடிமைகள் அங்கிருந்தனர் என்று அவன் கணக்கிட விரும்பினான். அவர்கள் அனைவரும் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தனர். அவர்கள் வருத்த முற்றிருந்தனர். அவர்கள் தங்கள் சொந்த நாட்டிலிருந்து வெகுதூரம் இருந்தார்கள். அவர்கள் ஆப்பிரிக்காவை சேர்ந்தவர்கள். அவர்கள் இங்கு கொண்டு வரப்பட்டனர். போயர்கள் அவர்களை இங்கு கொண்டு வந்து அடிமைகளாக விற்றனர். எனவே அவர்கள் வருத்த முற்றிருந்தனர். அவர்கள் மறுபடியும் வீடு திரும்ப முடியாது என்பதை அறிந்திருந்தனர். அவர்கள் அங்கேயே வாழ்ந்து மரிக்க வேண்டியது தான். அவர்கள்... அநேக முறை அவர்கள் சாட்டையால் அடிக்கப்பட்டனர். அவர்கள் தங்கள் முதலாளியின் சொத்துக்கள். எனவே அவன் தன் விருப்பப்படி அவர்களைத் துன்புறுத்தினான். அவன்... அவனுக்கு விருப்பமானால், அவர்களைக் கொல்லவும் செய்யலாம். அவனுக்கு... விருப்பமானதையெல்லாம் அவன் செய்தான். அதுதான் அடிமைத்தனம். இஸ்ரவேல் ஜனங்களும் இன்னும் மற்ற நாடுகளும் இத்தகைய அடிமைத்தனத்தில் இருந்தனர். அந்த ஏழை அடிமைகள்... அவர்கள் கடினமாக உழைத்தனர். அவர்கள் எந்நேரமும் அழுது துக்கமடைந்திருந்தனர். 53அனால் அந்த அடிமைகளில் ஒரு வாலிபன் மார்பை முன்னால் தள்ளிக் கொண்டு தலை நிமிர்ந்து நடப்பதை அவர்கள் கவனித்தனர். அவர்கள் அவனை சாட்டையால் அடிக்க அவசியமேயிருக்கவில்லை. அவன் என்ன செய்ய வேண்டுமென்று அவனிடம் கூற அவர்களுக்கு அவசியமிருக்கவில்லை. எனவே அந்த தரகன், “அந்த அடிமையை நான் விலைக்கு வாங்க விரும்புகிறேன்'' என்றான். முதலாளி, “அவன் விற்பனைக்கு அல்ல'' என்றான். தரகன், “அவனை வாங்க விரும்புகிறேன்” என்றான். முதலாளி, “இல்லை, அவன் விற்பனைக்கு அல்ல” என்றான். தரகன், “அவன் மற்றவர்களுக்கெல்லாம் முதலாளியா?'' என்றான். முதலாளி, “இல்லை, அவன் முதலாளி அல்ல, அவன் ஒரு அடிமை'' என்றான். தரகன், “மற்றவர்களுக்கு கொடுக்கும் உணவைக் காட்டிலும் வித்தியாசமான உணவை நீங்கள் அவனுக்கு அளிக்கிறீர்கள் போலும்'' என்றான். முதலாளி, “இல்லை, அவர்களெல்லாரும் ஒன்றாக உணவு உண்கின்றனர்'' என்றான். தரகன், “அப்படியானால் அவன் ஏன் மற்றவர்களைக் காட்டிலும் வித்தியாசமாயிருக்கிறான்?'' என்று கேட்டான். முதலாளி, ''அதற்கு ஒரு காரணம் உண்டு. நானும் கூட சிறிது காலம் அதைக்குறித்து வியந்தேன். அந்த பையன் ஆப்பிரிக்காவிலிருந்து இங்கு வந்தவன். ஆப்பிரிக்காவில் அவனுடைய தந்தை பழங்குடியினருக்கு அரசன். அவன் தன் சொந்த நாட்டை விட்டுப் பிரிந்து இங்கு அந்நியனாக இருக்க நேரிட்டாலும் ராஜாவின் மகனைப் போலவே நடந்து கொள்கிறான். இந்த நாட்டுக்கு அப்புறமுள்ள நாட்டில் அவன் தந்தை பழங்குடியினரின் அரசன் என்பதை அவன் அறிந்திருக்கிறான். அவன் ராஜாவின் மகனாதலால், அவன் அவ்வாறு நடந்து கொள்கிறான்'' என்றான். 54ஓ, சகோதரனே, சகோதரியே, நாம் வாழும் இவ்வுலகில் நீயும் நானும் தேவனுடைய குமாரரும் குமாரத்திகளுமாக நடந்து கொள்வோம். நாம் இங்கு அந்நியர். ஆனால் நம்முடைய நடத்தை, நாம் தேவனுடைய குமாரர் குமாரத்திகள் என்னும் நிலையில் தேவனுடைய கட்டளைகளுக்கு ஏற்றதாய் இருக்கவேண்டும். தேவன் நமக்கு வகுத்துள்ள பிரமாணத்தின்படி நமது நடத்தை, நாம் புரியும் செயல்கள் அனைத்தும் அமைந்திருக்க வேண்டும். புருஷரின் உடைகளை ஸ்திரீகள் தரிப்பது தேவனுக்கு அருவருப்பானது. ஒரு ஸ்திரீ தன் தலை மயிரைக் கத்தரித்துக் கொள்ளுதல் தவறானதும் பாவமான செயலுமாகும். வேதம் அவ்வாறு கூறியுள்ளது. அவள் ஜெபிக்கவும் கூடாது. நீங்கள் ''அதனால் என்ன?'' எனலாம். 55அண்மையில் பிரபல போதகர் ஒருவர் என்னிடம் வந்து, ''சகோ. பிரன்ஹாமே, வாருங்கள், உங்கள் மேல் நான் கைகளை வைக்க விரும்புகிறேன். உங்கள் ஊழியத்தை நீங்கள் பாழக்கிக்கொள்ளப் போகின்றீர்கள்“ என்றார். நான், “ஏன்?” என்றேன். அவர். “பெண்களை நோக்கி நீங்கள் எப்பொழுதும் கூச்சலிட்டுக் கொண்டிருக்கிறீர்களே” என்றார். ''நான் உண்மையைத் தானே...“ என்றேன் அவர், “ஓ, அது எனக்குத் தெரியும். நானும் ஒரு பெந்தெகொஸ்தேயினன். பெண்கள், அவர்கள் இப்பொழுது செய்வது போல், குட்டை தலைமயிர் வைத்துக்கொள்ளக் கூடாது, ஆண்களின் கால்சட்டைகளை அணியக்கூடாது. முகங்களில் வர்ணம் தீட்டக் கூடாதென்று எனக்குத் தெரியும். அவர்கள் அப்படி செய்யக்கூடாதது தான். ஆனால் வியாதியஸ்தருக்கு ஜெபிக்கவே தேவன் உங்களை அழைத்திருக்கிறார்'' என்றார். ''சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கவே அவர் என்னை அழைத்தார்“ என்றேன். பாருங்கள்? அவர், ''அது எனக்குத் தெரியும். ஆனால் நீங்கள் நினைக்கிறீர்களா...'' என்று கேட்டார். நான், ''உங்களிடம் என்ன உள்ளதென்று பாருங்கள் - பெரிய நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போன்றவை. தேவனுக்கு பதில் கூறுவதைத் தவிர என்னிடம் வேறொன்றுமில்லை“ என்றேன். அவர், ''நான் - நான் - நான்... உங்கள் ஊழியத்தை நீங்கள் பாழாக்கிக் கொள்ளப் போகின்றீர்கள்“ என்றார். நான், 'தேவனுடைய வார்த்தை பாழாக்கும் எந்த ஊழியமும் பாழாக்கப்பட வேண்டியதே“ என்றேன். அது உண்மை! நிச்சயமாக. அது முற்றிலும் உண்மை! அவர், ''நல்லது, நீங்கள் அதை பாழாக்கி விடுவீர்கள்“ என்றார். 56''நான் அப்படியானால் யார் அதை அவர்களுக்கு எடுத்துக் கூறுவது? (பாருங்கள்?) யாராகிலும் ஒருவர் அதை எடுத்துக் கூற வேண்டும். சத்தியம் எதுவோ அதற்கு, அது மனம் நோகச் செய்தாலும் யாராகிலும் ஒருவர் உறுதியாக நிற்கவேண்டும்'' என்றேன். நண்பர்களே, கிறிஸ்தவர்கள் என்னும் முறையில், நாம் பரலோகத்துக்கு செல்லப் போகின்றோம் என்று விசுவாசிக்கும் மக்களாயிருப்பதால், பரிசுத்த ஆவியானவரே நம்மை தேவனுடைய வார்த்தைக்கு கொண்டு வருவார். அவர், “நீங்கள் என்ன செய்யவேண்டும் தெரியுமா”? “நீங்கள் தீர்க்கதரிசியென்று மக்கள் விசுவாசிக்கின்றனர்”. எனவே “இந்த சிறு செயல்களைக் கண்டு நீங்கள் குறை கூறுவதற்குப் பதிலாக தீர்க்கதரிசன வரங்களைப் பெறுவது எப்படியென்று நீங்கள் பெண்களுக்கு கற்றுத்தர வேண்டும்'' என்றார். நான், “மொழியின் முதலெழுத்துக்களாகிய A,B,C யைக் கற்க மறுக்கும் இவர்களுக்கு என்னால் எப்படி அல்ஜீப்ரா கணிதத்தை கற்றுத்தர முடியும்? சாதாரண, இயற்கையான காரியங்களை செய்ய மறுக்கும் இவர்களுக்கு மேலான காரியங்கள் எப்படி நீங்கள் போதிக்க முடியும்? அவர்கள் கீழிருந்து தொடங்கவே மறுக்கின்றனரே'' என்றேன். நீங்கள் ஏணியில் முதல் படியில் காலெடுத்து வைக்காமல், உச்சப்படியை அடைய முயல்கின்றீர்கள். அதனால் தான் நீங்கள் விழுந்து போகின்றீர்கள். பாருங்கள்? நீங்கள் கீழே தொடங்கி, தேவன் உங்களை மேலே வழிநடத்தும் விதமாகவே, மேலேறிச் செல்லுங்கள். பாருங்கள்? உங்கள் வாழ்க்கையை நீங்கள் சரிவர அமைத்து கொண்டு, தேவன் உங்களுக்கு நியமித்துள்ளப்படியே வார்த்தையின் ஒவ்வொரு அம்சத்தையும் பின்பற்றுங்கள். 57இப்பொழுது சிந்தித்துப் பாருங்கள், தேவன் எப்படி... நாம் கிறிஸ்தவர்களைப் போல் நடந்து கொள்ள வேண்டும். நமது நடத்தை கிறிஸ்தவர்களின் நடத்தையைப் போல் இருக்க வேண்டும். நாம் இங்கு அந்நியராயிருக்கிறோம். இது நம்முடைய வீடல்ல. இல்லவே இல்லை. நாம் இங்கு தற்காலிகமாகவே வைக்கப்பட்டிருக்கிறோம். நாம் ஒவ்வொருவரும் இங்கிருந்து செல்ல வேண்டியவர்களாயிருக்கிறோம். இப்பொழுது சிந்தித்துப் பாருங்கள், தேவன் தம்முடைய இரக்கத்தினால் அந்த தாய்க்கு... குழந்தை பிறப்பதற்கு முன்பு, அது சில விட்டமின்களுக்காக தவிக்கிறது. அப்பொழுது தாய், ''எனக்கு தர்ப்பூசணி பழம் வேண்டும். எனக்கு ஏதாவதொன்று வேண்டும்'' என்று கணவனிடம் வெளிப்படையாய் கூறுகிறாள். அவன் அதைக் கொண்டு தருவதற்காக அவனால் முடிந்த எல்லாவற்றையும் செய்வான். ஏனெனில் குழந்தை நல்ல விதமாக பிறக்க வேண்டுமென்று அவன் விரும்புகிறான். எனவே அதை கொண்டு தருவதற்கு தன்னாலான எல்லாவற்றையும் அவன் செய்கிறான். அப்படியிருக்க அவர் எவ்வளவு அதிகமாக நமக்குத் தர வல்லவர்? அவர் சிருஷ்டி கர்த்தர். இப்பொழுது, சற்று சிந்தித்து பாருங்கள், நாம் வாழ்வதற்கென்று அவருடைய சொந்த மகிமையின் சரீரத்தைப் போலவே ஒரு சரீரத்தை ஆயத்தம் பண்ண அவர் எவ்வளவு வல்லவராயிருக்கிறார் நாம் வாழ விரும்பினால், நமக்குள் இருக்கும் ஏதோ ஒன்று வாழ அழைக்கிறது. நமக்குள் இருக்கும் எதோ ஒன்று நன்மையானதை செய்ய அழைக்கிறது. பிறகு தேவன் யாரோ ஒருவரை மேடைக்கு அல்லது பிரசங்க பீடத்துக்கு வரவழைத்து சத்தியத்தை முற்றிலுமாக பிரசங்கிக்கப் பண்ணுகிறார். ஏன் பாருங்கள்? நீங்கள் உண்மையான தேவனுடைய பிள்ளையாயிருந்தால், நீங்கள் அழுது, ''தேவனே, இதை என்னிலிருந்து எடுத்துப்போடும். என்னிலிருந்து அதை விருத்தசேதனம் செய்யும். இவைகள் என்னை விட்டு அகற்றும் என்பீர்கள்“. ஏன்? நீங்கள் செல்லவிருக்கும் பரலோக வீட்டுக்கு அது அவசியமானது. அவர் ஆயத்தம் பண்ண அங்கு சென்றிருக்கிறார். நீங்கள் கிறிஸ்துவின் உண்மையான வார்த்தை மணவாட்டியாக இருக்க வேண்டியது அவசியம். 58சில இரவுகளுக்கு முன்பு நான், பாவ நிவாரண நாட்களில் செலுத்தப்பட்ட பலியைக் குறித்து பேசினேன். தேவன் மனிதனை - சபையை சந்திக்கும் ஒரே ஸ்தலத்தைக் குறித்து அப்பொழுது குறிப்பிட்டேன். அது அவருடைய நாமத்தை அவர் வைத்துள்ள ஸ்தலத்தில் என்று அவர் கூறினார், அவர் ''நான் வேறெந்த இடத்திலும் அவனை சந்திக்க மாட்டேன். என் நாமத்தை நான் வைத்திருக்கும் வாசலில் மாத்திரமே சந்திப்பேன்“ என்றார். அவர் உங்களை மெதோடிஸ்டு வாசலில், பாப்டிஸ்டு வாசலில், பெந்தெகொஸ்தே வாசலில் அல்லது வேறெந்த வாசலிலும் சந்திப்பதில்லை. அவர் தமது நாமத்தை வைத்திருக்கும் குமாரனில் மாத்திரமே சந்திக்கிறார். இயேசு, ''நான் என் பிதாவின் நாமத்தில் வந்திருக்கிறேன்'' என்றார். எந்த ஒரு மனிதனும் ஒரு பிள்ளை தன் தந்தையின் நாமத்தில் வருகிறான். அவன்... நான் பிரன்ஹாமின் நாமத்தில் வந்தேன். ஏனெனில் என் தந்தை ஒரு பிரன்ஹாம். அவ்வாறே நீங்களும் உங்கள் தந்தையின் நாமத்தில் வந்திருக்கிறீர்கள். குமாரனாகிய இயேசு பிதாவின் நாமத்தில் வந்தார். அவருடைய நாமத்தை அவர்... ''நீங்கள் பலி செலுத்தும் இந்த வாசலில் என் நாமத்தை வைக்கிறேன்'' என்றார். இயேசு கிறிஸ்து என்னும் அந்த ஒரு ஸ்தலத்தில் மாத்திரமே நீங்கள் ஐக்கியமும், தேவனுக்கு ஆராதனை செலத்துவதையும் பெறமுடியும். நீங்கள், ''நான் இந்த சபையைச் சேர்ந்தவன்'' எனலாம். அதனால் ஒரு வித்தியாசமுமில்லை. நீங்கள் கிறிஸ்துவுக்குள் இருக்கவேண்டும். ஒரு குறிப்பிட்ட ஸ்தாபனத்தைச் சேர்ந்த போதகர் அன்றொரு இரவு என்னிடம், “திரு. பிரன்ஹாமே, இங்கு பாருங்கள், 'விசுவாசிக்கிறவன் எவனும்' என்று இயேசு கூறியுள்ளார்”. வேதாகமம், “இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன் என்று விசுவாசிக்கிறவன் எவனும் தேவனுடைய ஆவியால் பிறந்திருக்கிறான், என்று கூறுகின்றது” என்றார். 59நான், ''பரிசுத்த ஆவியினாலேயன்றி இயேசுவைக் கர்த்தரென்று ஒருவனும் சொல்லக் கூடாதென்று வேதம் கூறவில்லையா?'' என்றேன். பாருங்கள்? வேதாகமத்தை பொய்யுரைக்க செய்ய உங்களால் கூடாது, அது சரியாக பொருந்த வேண்டும். எனவே நீங்கள் முற்றிலுமாக பரிசுத்த ஆவியினால் பிறந்திருக்க வேண்டும். உங்களுக்குள் இருக்கும் அந்த பரிசுத்த ஆவி, நீங்கள் அவர் தேவனுடைய குமாரனென்று அறிந்திருக்கிறீர்கள் என்று உங்களைக் குறித்து வெளியரங்கமாக சாட்சியுரைக்க வேண்டும். நீங்கள் அதன் ஒரு பாகமாக... நீங்கள் தேவனுடைய பிள்ளையாக தேவனுடைய வார்த்தையில் நிலைதிருப்பீர்களானால், நீங்கள் எப்படி வார்த்தையை மறுதலிக்க முடியும். வேதம் வேறு விதமாக கூறியிருக்கும் போது, பரிசுத்த ஆவி எவ்வாறு உங்களை ஒரு கோட்பாட்டை விசுவாசிக்கச் செய்து, நீங்கள் வேதம் கூறினதற்கு முரணாக செய்ய வேண்டுமென்று கூறும்? வேதம் வெளிப்படையாக நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்று கூறியிருக்க, ''நாங்கள் ஒரு ஸ்தாபன சபையை சேர்ந்து கொள்ள வேண்டும். இதை, அதை செய்யவேண்டும்'' என்று கூறுகின்றார்கள். பாருங்கள்? அதை நீங்கள் காணும்போது அதற்குள் குதித்து ஒப்புரவாகிவிடுகின்றீர்கள். சரியாக முன்னே சென்று கொண்டிருக்க, ஆகவே அது வளர்கிறது. ஒரு பெண்ணின் கருப்பையில் முட்டையுடன் உள்ளே வருகின்ற ஒரு அணுவைப்போல். அந்த சிறு முட்டை பெருகி அணுக்களை உற்பத்தி செய்யும் போது, ஒரு மனித அணு, ஒரு நாய் அணு, ஒரு பசு அணு என்று இப்படியாக வெவ்வேறு அணுக்களை உற்பத்தி செய்வதில்லை. அவையனைத்தும் மனித அணுக்களே. 60தேவனுடைய பிள்ளை, முன்குறிக்கப்பட்ட அந்த... அது அநேகருக்கு பிடிக்காத சொல், ஆனால் தேவனுடைய வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள சொல்லை நான் உபயோகப்படுத்தியே ஆகவேண்டும். தேவனுடைய முன்னறிவு முன் குறித்து, எல்லாவற்றையும் அவருடைய மகிமைக்காக நடப்பிக்கும். நீங்கள் முன் குறிக்கப்பட்ட வித்தாயிருக்க நியமிக்கப்பட்டீர்கள். தேவன் உங்களை அழைத்தார். அந்த சிறு கழுகாகிய வித்து தேவனுடைய வார்த்தையைக் கேட்டது. அது ஒன்றின் மேல் ஒன்றாக, ஒன்றின் மேல் ஒன்றாக, ஒன்றின் மேல் ஒன்றாக கட்டிக் கொண்டு வரும். அது எந்த கோட்பாட்டுடனும் கலவாது. அந்த வாசல்களில் அவர்கள் ஒவ்வொரு நாளும் புதிய அப்பத்தைப் புசிக்க வேண்டும். ஏழு நாட்களளவும் புளித்த மாவு அவர்கள் மத்தியில் காணப்படக்கூடாது. அது சரியா? (சபையார் 'ஆமென்' என்கின்றனர் - ஆசி) ஏழு சபையின் காலங்களில் அது எந்த புளித்தமாவுமின்றி ஒரு கோட்பாடோ, எதுமே சேர்க்கப்படாமல் வளர்ந்து வருகிறது. உங்கள் மத்தியில் புளித்தமா காணப்படலாகாது, வார்த்தை மாத்திரமே, அது ஒன்று மாத்திரமே... அந்த வார்த்தை தேவனாயிருக்கிறது. தேவன் இயேசு கிறிஸ்து என்னும் நபரில் மாம்சத்தில் வெளிப்பட்டார். அதுவே அந்த வாசல். “நீங்கள் தேவனுடைய கட்டளைகளைக் கைக்கொள்ளும் போது, நான் அந்த வாசலில் உங்களைச் சந்திப்பேன்''. 61எனவே இன்றிரவு நீங்கள் வந்து, ''என் வாழ்க்கையை இயேசு கிறிஸ்துவுக்கு அர்ப்பணிக்கிறேன்'' என்று கூறி, நீங்கள் இன்னும் பரிசுத்த ஆவியைப் பெறாமலிருந்தால், அதை பெற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் நிச்சயமாக பெற்றுக்கொள்ள வேண்டும்! நீங்கள் அதில் வளர வேண்டும். நீங்கள் தேவனுடைய குமாரன் அல்லது தேவனுடைய குமாரத்தி என்னும் பரிபூரண வளர்ச்சியை அடையும் வரைக்கும் வார்த்தையின் மேல் வார்த்தையை அடுக்கும்படி தேவனிடம் வேண்டிக் கொள்ளுங்கள். உலகத்தின் காரியங்களை உங்களிலிருந்து எடுத்துப் போடும்படி... “ஒருவன் உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்பு கூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை'' என்று 1:யோவான் உரைக்கிறது. நீங்கள் வஞ்சிக்கப்பட்டீர்கள். உலகத்தின் அன்பு உங்களில் இருந்தால் வேறு காரியங்களை அங்கு அடுக்கிக் காண்பித்து பிசாசு உங்களை வஞ்சித்து விட்டான்... பாருங்கள். நீங்கள் செய்யக் கூடாது. நீங்கள் வேதாகமத்திலிருந்து ஒரு தேவனுடைய வார்த்தையும் கூட எடுத்துப் போடக்கூடாது. முதலாம் பாவம் உண்டாகக் காரணம் என்ன? ஒருபெரிய பொய்யைச் சொன்னதனால் அல்ல. ஏவாள் ஒரு வார்த்தையை தவறாக அர்த்தம் கொண்டதால் (பிசாசு அவளிடம் தவறான அர்த்தம் உரைத்தான்). அந்த ஒரு வார்த்தை சங்கிலியை முறித்தது. ஏவாள் ஒரு வார்த்தையை ஏற்றுக் கொள்ள மறுத்தாள். அது வேதாகமத்தின் துவக்கத்தில். பின்பு இயேசு வேதாகமத்தின் நடுவில் வந்து, ”மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்“ என்றார் - அதாவது தேவனுடைய வார்த்தை முழுவதையும். அது அவரைக் குறித்த வெளிப்பாடு என்று விசுவாசிக்கிறீர்களா? (சபையார் 'ஆமென்' என்கின்றனர் - ஆசி) தேவனுடைய வார்த்தை முழுவதையும். பிறகு வெளிப்படுத்தின விசேஷம் 22-ம் அதிகாரத்தில் பத்மூ தீவிலிருந்த யோவானிடத்தில் இயேசு வந்தார். இயேசு, இவைகளைச் சாட்சியாக அறிவிக்கும்படிக்கு இயேசுவாகிய நான் என் தூதனை அனுப்பினேன். இந்த புத்தகத்திலிருந்து ஒருவன் ஒரு வார்த்தையாவது எடுத்துப் போட்டால் அல்லது ஒரு வார்த்தையாவது கூட்டினால் ஜீவ புஸ்தகத்திலிருந்து அவனுடைய பங்கை நான் எடுத்துப் போடுவேன்“ என்றார். 62பலர், ''இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன் என்று நான் விசுவாசிக்கிறேன்'' என்கின்றனர். அது நல்லது தான். ஆனால் மற்றவைகளை அதனுடன் கூட்டுகின்றனரே. நீங்கள், ''நான் நீதிமானாக்கப்பட்டேன். நான் என் கரத்தை போதகருக்கு கொடுக்கிறேன். நான் இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறேன்'' என்கிறீர்கள். நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும். நீங்கள் பரிசுத்த ஆவியினால் நிறையப்பட வேண்டும்! பாருங்கள்? நீங்கள் வளர்ந்து கொண்டே செல்ல வேண்டும். நீங்கள் வளர்ந்து தேவனுடைய குமாரரும் குமாரத்திகளுமாக பூரண வளர்ச்சியை அடைகின்றீர்கள். என்னே தேவன் நம்மை ஆயத்தம் பண்ணி, ஏதாவதொன்றை காண வேண்டுமென்னும் வாஞ்சையை நமது வாழ்க்கையில் அருள் வல்லவராயிருக்கிறார். இங்குள்ள எத்தனை பேர் தேவனை இன்னும் அதிகமாகப் பெற விரும்புகின்றீர்கள்? (சபையார் 'ஆமென்' என்கின்றனர் - ஆசி) உங்களுக்காக இன்னும் அதிகம் வைக்கப்பட்டுள்ளது என்பதை அது காண்பிக்கின்றது. பாருங்கள்? அதற்காக நீங்கள் வாஞ்சிக்கிறீர்கள், உங்களுக்கு பிரசவ வேதனை உண்டாகின்றது. பாருங்கள்? நீங்கள் மகிழ்ச்சியாகவும், சுயாதீனமாகவும், பரிபூரணமாகவும் இருக்க அது உங்களுக்கு அதிகம் தேவைப்படுகிறது. நாம் அப்படித்தான் இருக்கவேண்டும். 63ஜீவனின் சிறு கிருமி தாயின் கர்ப்பத்திலுள்ளது போன்று, தேவனுடைய மடியில் உள்ளது... தேவன் நமக்காக ஒரு ஸ்தலத்தை ஆயத்தம் பண்ண சென்றிருக்கிறார் - அவருடன் கூட நாம் இருக்கும்படிக்கு நித்தியமான ஒரு ஸ்தலத்தை. நீங்கள் மரிக்கக் கூடிய தொற்றுநோய் நிறைந்த வீடு அல்ல. இங்கு பாவம், விபச்சாரம், உலகத்தின் அசுத்தம் குடிக்கொண்டுள்ளது. உங்கள் சிந்தை அதன் மேல் இருந்தால், நீங்கள் தேவனுடன் தொடர்பு கொள்ளவில்லை என்பதை அது காண்பிக்கின்றது. நீங்கள் உணர்ச்சிவசப்பட்டீர்கள்; உங்களுக்கு மனதில் மாயையான தோற்றம் உண்டானதென்று அதன் அர்த்தம். நீங்கள் ஒரு ஸ்தாபன சபையை சேர்ந்து கொண்டு, “நான் இதை சேர்ந்திருக்கிறேன். என் தாய் அதை சேர்ந்திருந்தார்கள்'' என்கிறீர்கள் உங்கள் தாயின் காலத்தில் அது சரியாயிருந்திருக்கலாம். ஆனால் நாம் வேறொரு காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வெஸ்லியின் செய்தி... லூத்தரின் செய்தியை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. லூத்தர் நீதிமானாக்கப்படுதலில் நம்பிக்கை கொண்டிருந்தார். ஆனால் வெஸ்லியோ பரிசுத்தமாக்கப்படுதல் என்பதைக் கொண்டிருந்தார். பெந்தெகொஸ்தேயினர் வந்தனர். அவர்களால் நீதிமானாக்கப்படுதலையும் பரிசுத்தமாக்கப்படுதலையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அது வரங்கள் புதுப்பிக்கப்படுதலுக்குரிய நேரமாயிருந்தது. நாம் அங்கிருந்து சென்று கொண்டிருக்கிறோம். பாருங்கள்? திராட்சை செடியின் வளர்ச்சியில் மூன்று கட்டங்கள். முதலாவதாக சிறு முளை. லூத்தர் சீர்திருத்த காலத்தில் தோன்றினார். சரி, அது தண்டு. இயற்கையைக் கவனியுங்கள். தேவனும் இயற்கையும் இணைந்து கிரியை செய்கின்றனர். ஏனெனில் தேவன் இயற்கையில் இருக்கின்றார். அடுத்ததாக தோன்றுவது பட்டுக்குஞ்சம், மகரந்தப் பொடி, மெலோடிஸ்டு காலம். அதன் பிறகு பெந்தெகொஸ்தேயினர் வருகின்றனர். ஓ, என்னே, எவ்வளவு, பிழையற்றது. காண்பதற்கு அது கோதுமை மணியைப் போன்றே தத்ரூபமாய் உள்ளது. ஆனால் அதை திறந்து பாருங்கள், அங்கு கோதுமை மணியே இல்லை. அது பதர், கோதுமை மணியை சுமப்பது அதன் ஜீவன் பதரின் வழியாக வருகிறது. பாருங்கள்? 64லூத்தரின் காலத்திலும் அந்த ஜீவன் அதன் வழியாக வந்தது. ஆனால் லூத்தருக்குப் பின்பு அது சென்று ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டது. முதலாவதாக உங்களுக்குத் தெரியுமா, அது ஸ்தாபனமாகின்றது. சுட்டெரிக்கப்படுவதே அதன் முடிவு. பாருங்கள்? தண்டு உலர்ந்து போகின்றது. அது சுமக்கும் பொருள் மாத்திரமே. சிலர் இன்னும் அது பழைய சுமக்கும் தண்டில் இருந்து கொண்டு, தேவனைக் குறித்து ஒன்றும் அறியாதவர்களாயிருக்கின்றனர். அவர்கள், ''கவனியுங்கள், நாங்கள் ஒரு இலை. நாங்கள் பழைய லூத்தரன்கள்'' என்கின்றனர். அது உண்மைதான், ஆனால் அது இப்பொழுது எங்குள்ளதென்று பாருங்கள். ''நாங்கள் மெதோடிஸ்டுகள்“, ''நாங்கள் பெந்தெகொஸ்தேயினர்”. பெந்தெகொஸ்தேயினரைப் பாருங்கள் - அவர்கள் எவ்வளவு குளிர்ந்து சம்பிரதாயமாய் இருக்கின்றனர் என்று. அவர்கள் எல்லோரும் சத்தியத்திலிருந்து விலகிச் செல்கின்றனர். அது என்ன? அது உண்மையான வித்தை சுமக்கும் ஒன்று. பாருங்கள்? இவர்கள் அனைவரும் சுமப்பவர்கள், அவர்கள் ஸ்தாபனங்களுக்குள் சென்றுவிட்டனர். நீங்கள், “நான் பெந்தெகொஸ்தேயினன்'' என்கிறீர்கள். நீங்கள் உங்களை பெந்தெகொஸ்தேயினர், ரோமன் கத்தோலிக்கர், யூதன் என்று அழைத்துக் கொள்ளலாம். அது தேவனுடைய பார்வையில் ஒன்றுமேயில்லை. நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும். சுமப்பவைகளின் வழியாக வரும் அந்த ஜீவன் அது தண்டில் நின்று விடுவதில்லை. பதரில் நின்று விடுவதில்லை. நேராக அந்த பூரண பாகமாகிய கோதுமை மணிக்குள் சென்றுவிடுகின்றது. 65இப்பொழுது ஞாபகம் கொள்ளுங்கள், நமக்கிருந்த லூத்தரன்கள் போன்ற ஒவ்வொரு சீர்திருத்தத்துக்கும் பிறகு மூன்று ஆண்டுகளுக்குள், அவர்கள் ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டனர். அது உண்மை. ஒவ்வொரு சீர்திருத்தத்தையும் தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்குள் ஒரு ஸ்தாபனம் உருவானது. இது எவ்வளவு காலம் நீடித்திருக்கிறது என்பதை சற்று சிந்தித்து பாருங்கள். இருபது ஆண்டுகள் கடந்த பிறகும் ஸ்தாபனமே உண்டாகவில்லை. ஏன்? கோதுமை மணி பதருக்குள் இப்படி தோன்றிக் கொண்டிருக்கிறது. அது சூரிய வெளிச்சத்தில் கிடந்து, பூமிக்குள் சென்ற அந்த கோதுமை மணியைப் போன்றே மகிமையுள்ள கோதுமை மணியாக மாறவேண்டும். உண்மையான சபை முதலில் பூமிக்கடியில் சென்றது. அது தண்டின் வழியாக வந்து மற்றொரு சபை உருவானது. நிலத்தின் சொந்தக்காரர் அதை களஞ்சியத்தில் சேர்ப்பதற்காக வரும் போது, லூத்தருக்குள் இருந்த அந்த ஜீவன், மெதோடிஸ்டுக்குள் இருந்த அந்த ஜீவன், பெந்தெகொஸ்தேயினருக்குள் இருந்த அந்த ஜீவன் தானியத்துக்குள் வந்து, இவையனைத்துமே கோதுமை மணிக்குள் சென்று, இயேசு கிறிஸ்துவின் பரிபூரண சரீரமாக உருவாகி, இங்கிருந்து புறப்பட்டு செல்வர். 66சூரியன் காலையில் உதிப்பது போல், நீங்கள் காணும் இயற்கை தேவனைக் குறித்து சாட்சி பகருகின்றது. தேவன் ஒருவர் இருக்கிறார் என்று அறிந்து கொள்ள உங்களுக்கு வேதாகமம் கூட தேவையில்லை. சூரியன் காலையில் பலவீனமுள்ள குழந்தையாக பிறக்கிறது. சுமார் 7 மணிக்கு அது பள்ளிக் கூடம் செல்லத் தொடங்குகின்றது. 10 அல்லது 12 மணிக்கு அது பள்ளிக்கூடப் படிப்பை முடித்து வெளியேறுகிறது. 12 மணிக்கு அது முழு பெலனைப் பெறுகிறது. பகல் 3 மணிக்கு அதற்கு வயதாகின்றது. மாலை 7 அல்லது 8 மணிக்கு - 5 அல்லது 6 மணிக்கு அதன் தோள் தொங்கி மரிக்கிறது. அதுதான் அதன் முடிவா? இல்லை! அது அடுத்த நாள் காலை உயிரோடெழுகிறது - ஜீவன், மரணம், அடக்கம், உயிர்த்தெழுதல். 67மரத்தில் தோன்றும் இலைகளைப் பாருங்கள். அவை நன்றாக வளர்ந்து நிழலைத் தந்து, கனிகளையும் தருகின்றது. அடுத்ததாக முதலாவதாக, இலையுதிர்காலம் வந்து, மரணம் அதை தாக்கும் போது, அந்த மரத்தின் சத்து வேர்களின் வழியாக நிலத்துக்குள் செல்கின்றது. அதுதான் அதன் முடிவா? அடுத்த வசந்த காலத்தின் போது அது மறுபடியும் மேலே வந்து சாட்சி பகருகின்றது. ஓ, அது இடைவிடாத (perpetual) ஜீவன். ஆனால் சகோதரனே, சகோதரியே, நாம் நித்திய ஜீவனைப் பெற்றிருக்கிறோம். இவ்வுலகில் வந்து சென்றவரின் மூலம் நாம் நித்திய ஜீவனைப் பெற்றுள்ளோம். அவர் நமக்காக ஒரு சரீரத்தை ஆயத்தம் பண்ண சென்றிருக்கிறார். நமக்குள்ள வேதனைகள் அனைத்தும் ஸ்திரீகளாகிய நீங்கள் சத்தியத்துக்காக நின்று புரியும் செயல்களினால் மற்றவர்கள் உங்களைக் கண்டனம் செய்வது போன்று இந்த மனிதர்கள் வேத பள்ளிகளில் கற்ற உபதேசங்களை இறுகப் பற்றிக்கொண்டு, “நான் கோட்பாடுகளை உச்சரிக்கிறேன், நான் இதை செய்கிறேன்...'' என்கின்றனர். ஆனால் குருடர்களின் கண்கள் திறக்கப்படுவதையும் செவிடர் கேட்பதையும், இன்னும் வாக்குத்தத்தம் செய்யப்பட்ட அற்புதங்கள் நடப்பதையும், வார்த்தை அதன் வல்லமையில் பிரசங்கிக்கப்படுவதையும், தெருவில் நடமாடிக் கொண்டிருந்த ஒரு வேசி நற்பண்புள்ளவளாக மாறுவதையும், குடிகாரன் அதிலிருந்து வெளி வந்து உண்மையான தேவனுடைய பரிசுத்தவானாக மாறுவதையும் நீங்கள் காணும் போது, இங்கு ஏதோ ஒன்றுள்ளது என்பதை அறியவேண்டும். ஓ, என்னே! பாருங்கள் இங்கு ஏதோ ஒன்று, ஒரு ஜீவன், உள்ளது. அப்பொழுது உங்களுக்கு, ”அப்படி நான் செய்திருக்கக் கூடாது'' என்னும் உணர்வு தோன்றுகிறது. அது என்னவென்று கவனியுங்கள். அப்பாலுள்ள உங்கள் சரீரத்துக்கு ஏதோ ஒன்று தேவைப்படுகிறது. பாருங்கள். அந்த சரீரத்துக்கு தேவையான விட்டமின்கள் அனைத்தையும் தேவன் இங்கேயே வைத்திருக்கிறார். இயேசு தேவனுடைய மடியில் ஒரு ஸ்தலத்தை ஆயத்தம் பண்ணச் சென்றிருக்கிறார். ஆம், ஐயா? ஒரு சிறு அணு தேவனுடைய குமாரன், ஒரு சிறு தேவனுடைய குமாரன் அல்லது குமாரத்தி. 68இயேசு பிதாவுக்கு ஏறெடுத்த ஜெபத்தில் ஒன்றை மாத்திரமே கேட்டார். அது என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? அவர் இவ்வுலகில் செய்த எல்லா தியாகத்துக்கும், அவர் வாழ்ந்த வாழ்க்கைக்கும், அவர் நடந்த பாதைக்கும் பிறகு அவர் ஒன்றை மாத்திரமே கேட்டார். அதாவது, “நான் எங்கே இருக்கிறேனோ அங்கே அவர்களும் என்னுடனே கூட இருக்க விரும்புகிறேன்”. அவர் நமது ஐக்கியத்தை கேட்டார். அவர் ஒன்று மாத்திரமே அவர் ஜெபத்தில் பிதாவினிடம் கேட்டார். என்றென்றும் உங்களோடு கூட இருத்தல். நீங்கள் யோவான் 17-ம் அதிகாரம் 24 வசனத்தைப் படியுங்கள்... அப்படியானால், நாம் எவ்வளவாக அவரை வாஞ்சிக்க வேண்டும்? அவர்... இப்பொழுது கவனியுங்கள். நீங்கள் உண்மையாகவே தேவனுடைய ஆவியினால் பிறந்திருந்தால், அதுவே உங்களுக்கு எல்லாவற்றிற்கும் எல்லாமாக இருக்கும். பாருங்கள்? அது சட்டங்களைக் கைக் கொள்வதல்ல. நீங்கள் நியாயப் பிரமாணங்ளின்படி வாழ்வதில்லை, நீங்கள் தேவனுடைய கிருபையினால், தேவனுடைய ஆவியினால், வாழ்கின்றீர்கள். 69நான் அடிக்கடி உங்களிடம் இதை கூறியிருக்கிறேன். மிஷனரி என்னும் முறையில், நான் வெளிநாடு செல்வது வழக்கம். அப்பொழுது என் மனைவியையும் பிள்ளைகளையும் ஒன்று சேர்த்து, ''இப்பொழுது பாருங்கள், பிள்ளைகளே... திருமதி பிரன்ஹாமே, இதைக் கேள். நான் உன் கணவன். நான் சென்றுவிட்ட பிறகு, என்னைத் தவிர வேறே கணவர்கள் உனக்கு இருக்க வேண்டாம். அப்படி நீ செய்தால் நான் திரும்பி வரும்போது உன் தோலை உரித்து விடுவேன்“ என்பேன். பாருங்கள்? நான் காலை ஓங்கி தரையில் மிதித்து, ”பிள்ளைகளே, நான் சொல்வதைக் கேளுங்கள்''. “ஆம், ஆம் அப்பா. ஆமாம்''. “நீங்கள் ஒரு முறை கூட கட்டளைகளை மீறினீர்கள் என்று கேள்விப்பட்டால்...'' என்பேன். பாருங்கள்? அது ஒரு நல்ல குடும்பமாக இருக்குமா? அவளும், ''ஐயா, நீங்களும் கூட. திரு.பிரன்ஹாமே, உங்களிடம் ஒன்றைக் கூற விரும்புகிறேன். நான் சட்டப்படி உங்களை மணம் செய்து கொண்ட மனைவி. நீங்கள் வெளிநாட்டில் உள்ள போது என்னைத் தவிர வேறே பெண் சிநேகிதிகள் உங்களுக்கு இருக்க வேண்டாம்“ என்பாள். அது ஒரு நல்ல குடும்பமாகவா இருக்கும்? அது வேறொரு நிலையில் இருக்கும். நாங்கள் அப்படியொன்றும் செய்வதில்லை. அவளை நான் நேசிக்கிறேன், அவள் என்னை நேசிக்கிறாள். நான் வெளியே செல்கிறேன் என்னும் போது, கர்த்தர் போகக் கட்டளையிடாமல் நான் செல்லமாட்டேன் என்று அவள் அறிந்திருக்கிறாள். நாங்கள் பிள்ளைகளையும் கூட்டி தரையில் முழங்கால்படியிட்டு ஜெபிப்போம். நான், ''அன்புள்ள தேவனே, என் துணைவியையும் பிள்ளைகளையும் பாதுகாத்துக் கொள்ளும்'' என்று ஜெபிப்பேன். பிள்ளைகளும், “தேவனே, அப்பா வெளியேயிருக்கும் போது அவரைப் பாதுகாத்துக்கொள்ளும்'' என்று ஜெபிப்பார்கள். நான் அவர்களிடம் விடை பெற்றுச் செல்கிறேன். 70நான் வெளியே இருக்கும் போது தவறு செய்தேன் என்று வைத்துக் கொள்வோம். நான் கட்டளையை மீறி தவறு செய்து, திரும்பி வந்து, சுருக்கம் விழுந்துள்ள முகத்தையும் நரைத்து கொண்டிருக்கிற தலைமயிரும் கொண்ட என் ஏழை மனைவியிடம் சென்று, “தேனே, உன்னிடம் ஒன்றைக் கூற வேண்டும்”. நான் உன்னை நேசிக்கிறேன் என்பதை நீ அறிந்திருக்கிறாய் என்றால். அவள், ''பில், நீங்கள் என்னை நேசிக்கிறீர்கள் என்பது உறுதி'' என்பாள். ''நான் என்ன செய்தேன் என்று உன்னிடம் சொல்கிறேன். ஒரு பெண்ணை என் அறைக்குக் கொண்டு சென்றேன். என்னை மன்னிப்பாயா?'' என்று அவளைக் கேட்டால் அவள் மன்னித்துவிடுவாள் என்று எனக்கு தெரியும். ஆனால் நான் அப்படி செய்வேனா? அங்கு நான் நின்று கொண்டு, அவளுடைய தலைமயிர் நரைத்துக் கொண்டிருப்பதை நான் காணும் போது, அவள் எனக்கும் பொது ஜனத்துக்கும் இடையே நின்று பணிபுரிந்தாள் என்றும், அவள் எவ்வளவு நல்ல மனைவியாக இருந்து வந்திருக்கிறாள் என்பதையும் உணரும் போது, அப்படி செய்ய எனக்கு மனம் வருமா? அவளை நோகச் செய்வதற்கு பதிலாக நான் மரிப்பது நலம். என் மனைவியின் பேரிலுள்ள உலகப்பிரகாரமான அன்பே பெரிதாயிருக்குமானால், என் தேவன் பேரிலுள்ள தெய்வீக அன்பு அதைக் காட்டிலும் எவ்வளவு பெரிதாயிருக்கும்? ஓ, அவரை நோகப்பண்ண நான் எதையுமே செய்யமாட்டேன். நிச்சயமாக செய்ய மாட்டேன். நான் அவரை நேசிக்கிறேன். நான் செய்ய வேண்டுமென்று அவர் விரும்பும் அனைத்தையும் நான் செய்வேன். அவர் கூறின ஒவ்வொரு வார்த்தையும் நான் கைக்கொள்ள விரும்புகிறேன். உலகம் என்ன கூறின போதிலும் - அவர்கள் எப்படியும் அதை விசுவாசிக்கப் போவதில்லை. நான் செய்ய வேண்டுமென்று அவர் கூறுவதை நான் அறிந்து கொள்ள விரும்புகிறேன். என்னில் ஏதாகிலும் குறைவு இருக்குமானால், அவர் அதை எனக்களிக்க வேண்டுமென்று விரும்புகிறேன். உலகத்தினின்று நம்மை பிரித்துக்கொண்டு அவருக்காக நாம் வாழ்வோம். 71மண்ணான இந்த சரீரம் அழிந்து... அது... இதை நான் உங்களிடம் கூற விரும்புகிறேன். நீங்கள் அதிக மேன்மையாக நினைத்துக் கொண்டு ஹாலிவுட் பாணியில் அலங்கரித்துக் கொள்ளும் இந்த மண்ணான சரீரம் - ஹாலிவுட் நீண்ட காலம் இருக்காது. உங்களுக்கு ஞாபகமுள்ளதா, கர்த்தர் அதைக் குறித்து எனக்களித்த தீர்க்கதரிசனத்தை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள் (பாருங்கள்?). அது தண்ணீருக்குள் செல்லும். ஆம், ஐயா! கவனியுங்கள். அது செல்லும். நீங்கள் கவனித்துக்கொண்டு வாருங்கள். இதுவரைக்கும் அவர் தவறான எதையும் என்னிடம் கூறினதில்லை. அதை மறுக்கும் எவரிடமும் இதை நான் கூற விரும்புகிறேன். அது எப்பொழுது எங்கே என்று எனக்குத் தெரியாது. ஆனால் அதற்கு முடிவு வந்துவிட்டது. நியாயத்தீர்ப்பு அதன் மேல் உள்ளது. அதற்கு விமோசனமே இல்லை; அது கடந்துவிட்டது. பாருங்கள்? 72இப்பொழுது, இதை கவனியுங்கள். அவருக்காக வாழ்ந்து உலகத்தினின்று நம்மை பிரித்துக் கொள்ளவேண்டும். பாருங்கள்! சகோதரிகளாகிய உங்களில் சிலர் தொலைக்காட்சியைக் கண்டு அதன்படி செய்ய விரும்புகிறீர்கள். நீங்கள் இளம் பெண்கள், அது எனக்குத் தெரியும். ஆனால் நீங்கள் கிறிஸ்தவர்கள். பாருங்கள்? நீங்கள் வித்தியாசப்பட்டவர்கள். நீங்கள் உலகத்திலுள்ளவர்களைப் போல் இருக்கக் கூடாது, நீங்கள் உலகத்திலுள்ளவைகளில் அன்பு கூருகிறீர்கள் - இளம் பெண்கள் மாத்திரமல்ல. சற்று அதிகம் வயதான உங்களில் சிலரும் கூட. பாருங்கள்? அப்படி நீங்கள் செய்யக் காரணம் என்ன? நீங்கள் தொலைகாட்சியைக் காண்கிறீர்கள். நீங்கள் கடைக்குச் சென்று, பெண்கள் உடுக்கும் தேவனுக்குப் பிரியமில்லாத உடைகளை அங்கு காண்கிறீர்கள். நியாயத்தீர்ப்பின் நாளில் என்ன நடக்குமென்று உங்களுக்குத் தெரியுமா? உங்கள் கணவனுக்கு நீங்கள் கற்புள்ளவர்களாக இருக்கலாம், ஆனால் நியாயத்தீர்ப்பின் நாளில் விபச்சாரம் செய்த குற்றத்துக்காக நீங்கள் பதில் கூற வேண்டும். ஏனெனில் ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபச்சாரம் செய்தாயிற்று என்று இயேசு கூறியுள்ளார். அதற்கு யார் குற்றவாளி? நீங்கள். பாருங்கள், நீங்கள் குட்டை கால்சட்டைகளையும் தளற்கால்சட்டைகளையும் அணிந்து சென்று, மற்றவர் இச்சிக்கும்படி உங்களைக் காண்பித்தீர்கள். அண்மையில் சில பெண்கள் என்னிடம், ''சகோ. பிரன்ஹாமே, நான் குட்டை கால்சட்டை அணிவதில்லை. அதற்காக நான் கர்த்தருக்கு நன்றி செலுத்துகிறேன். நான், “தளற்கால் சட்டை மாத்திரமே அணிகிறேன்'' என்றனர். ''அது அதைவிட மோசமானது அதைவிட மோசமானது“ என்றேன். அது உண்மை. 73பெண்களுக்கான உடைகளை இக்காலத்தில் வாங்கவே முடியவில்லை என்றார். அவள் கூறினாள். ஒரு பெண், ''ஆம், நீங்கள் உண்மையைக் கூறினீர்கள். அது வாங்குவதற்கு கிடைக்கவில்லை'' என்றாள். ஆனால் அவர்கள் இப்பொழுதும் துணிகளையும் தையல் மெஷின்களையும் விற்கிறார்கள் (பாருங்கள்?), எனவே சாக்கு போக்குக்கு இடமில்லை. பாருங்கள்? சகோதரியே, அது எதை காண்பிக்கிறதென்றால்... நான் உங்கள் சகோதரன், நான் கிறிஸ்துவின் ஊழியக்காரன். இன்றிரவு நான் உங்களிடம் எதை கூறுகிறோனோ அதற்கு நியாயத்தீர்ப்பின் நாளிலே பதில் கூற வேண்டியவனாயிருக்கிறேன். பாருங்கள்? நீங்கள் விபச்சாரம் செய்த குற்றத்துக்காக அங்கு நிற்பீர்கள். ஏனெனில் தேவனுடைய அன்பு உங்கள் இருதயத்திலிருந்து ஒழுகிவிட்டது. நீங்கள் இன்னும் சபைக்குச் செல்கின்றீர்கள், நீங்கள் ஆவியில் நடனமாடலாம், நீங்கள் அந்நிய பாஷைகள் பேசலாம். அவையாவும் நல்லதுதான். ஆனால் அது மாத்திரம் போதாது, இல்லை, ஐயா! “கடைசி நாட்களில் கள்ளக் கிறிஸ்துக்கள் எழும்புவார்கள்” என்று வேதம் கூறியுள்ளதை நினைவில் கொள்ளுங்கள் - கள்ள இயேசுக்கள் அல்ல. அதை அவர்களால் சகிக்க முடியாது. ஆனால் கள்ளக் கிறிஸ்துக்கள் - கள்ள அபிஷேகம் பெற்றவர்கள். அவர்கள் முற்றிலுமாக பரிசுத்த ஆவியினால் அபிஷேகம் பெற்றவர்கள். இருப்பினும் கள்ளக் கிறிஸ்துக்கள். பாருங்கள்? 74நீங்கள் மூன்று பாகங்களைக் கொண்டவர்கள். உங்கள் வெளிப்புறம் சரீரம். இவ்வுலக வீட்டுடன் தொடர்பு கொள்ள சரீரம் ஐம்புலன்களைப் பெற்றுள்ளது. அந்த சரீரத்துக்குள் ஆவியுள்ளது. அந்த ஆவிக்கும் அன்பு, மனசாட்சி போன்ற ஐம்புலன்கள் உள்ளன. ஆனால் அதற்கும் உள்ளில் ஆத்துமா உள்ளது. மழை நீதியுள்ளவர் மேலும் அநீதியுள்ளவர் மேலும் பெய்கிறது என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். கோதுமையை வளரச் செய்யும் அதே மழைதான் களையையும் வளரச் செய்கின்றது. பாருங்கள்? அது என்ன? அந்த வித்தின் உட்பாகத்தில் ஒரு சுபாவம் உள்ளது. அந்த சுபாவம் தன்னை வெளிப்படுத்துகின்றது. அது அதே வயலில் களையுடன் ஒன்றாக இருக்கமுடியும். களையும் கோதுமையும் ஒன்றாக இருந்து, ஒன்றாகவே களி கூருகின்றன. தண்ணீர் இல்லாத போது, கோதுமையைப் போலவே களையும் உரக்க சத்தமிடுகின்றது. ஆனால் அவைகளுடைய கனிகளினாலே நீங்கள் அறிவீர்கள். பாருங்கள்? 75கிறிஸ்தவர்களே, உங்களை நான் மறுபடியும் காண முடியாமல் போய்விடலாம். இங்கு நான் அநேக ஆண்டுகளுக்குப் பிறகு வந்துள்ளேன். உங்களை ஒருக்கால் நான் மறுபடியும் காணாமல் போய்விடக் கூடும். தேவனுடைய வார்த்தையுடன் உங்களை வரிசைப்படுத்திக் கொள்ளுங்கள். நிலைக் கண்ணாடியில் பாருங்கள். ஒருமுறை ஒரு நாட்டுப்புற சிறுவன்; அவன் நிலைக் கண்ணாடியைக் கண்டதேயில்லை. அவன் அத்தை வீட்டுக்குச் சென்றான். அவன் மாடிப்படியில் ஏறினபோது நிலைக் கண்ணாடியைக் கண்டான். அவன் ஒரு சிறுவனை அதில் கண்டான். அவன் அதை கவனித்துக் கொண்டே மாடிப்படியில் ஏறினான். அவன் கையாட்டின போது, நிலைக் கண்ணாடியில் அவன் கண்ட சிறுவனும் கையாட்டினான். அவன் உற்று நோக்கிக் கொண்டேயிருந்தான். அவன் தன் உருவத்தை அதுவரை நிலைக் கண்ணாடியில் கண்டதில்லை. அவன் அதற்கருகில் சென்று வியப்புடன், ''அத்தை அது நான்'' என்றான். நீங்கள் தேவனுடைய நிலைக் கண்ணாடியில் எவ்வாறு காணப்படுகிறீர்கள்? அது தேவனுடைய குமாரனை அல்லது குமாரத்தியை பிரதிபலிக்கின்றதா? நீங்கள் காதுகளில் கேட்கும் ஏதாவதொன்று, அதை கூறும் மனிதனை நீங்கள் வெறுக்கும்படி செய்கிறதா? அல்லது ஏதாவதொன்று உங்களை அதன்பால் இழுத்து, “இந்த மனிதன் கூறுகிறது உண்மை, ஏனெனில் அது வேதத்தில் உள்ளது'' என்கின்றதா? அப்படியானால் அங்கு செல்ல நியமிக்கப்பட்டிருக்கும் சரீரத்துக்கு தேவையான விட்டமின்கள் அதுவே. நீங்கள் அங்கு செல்லும் போது இந்த சரீரத்துக்கு அங்குள்ள வீடு தேவைப்படும். பாருங்கள்? இந்த வீடு - மண்ணானாவனுடைய சாயலை நாம் அணிந்திருக்கிறது போல... 76இப்பொழுது ஞாபகம் கொள்ளுங்கள், இந்த சரீரத்தைக் குறித்து நாம் மேன்மையாய் நினைக்கிறோம். நாம் தேவையில்லாத அநேக காரியங்களைச் செய்கிறோம், நாம் மாற்றி, மாற்றி, மாற்றிக் கொண்டேயிருக்கிறோம்... ஏன், எல்லோருமே தான். யாராவது ஒன்றைத் தொடங்கட்டும். உங்கள் படிகளுக்கு நீங்கள் சிவப்பு வர்ணம் பூசினால், ஜோன்ஸ் குடும்பமும் தங்கள் படிகளுக்கு சிவப்பு வர்ணம் பூசுகின்றனர். நீங்கள் ஷெவர்லே காரை மாற்றி ஃபோர்ட் காரை வாங்கினால், அவர்களால் அதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இது ஒன்றையொன்று பொருத்தும் காலமாயுள்ளது (matching time). ஒரு பெண் ஒரு குறிப்பிட்ட தொப்பியை அணிந்து சபைக்கு வந்தால், எல்லா பெண்களும் அதே விதமான தொப்பியை அணிந்து வருவதை நீங்கள் கவனிக்கலாம் - முக்கியமாக போதகரின் மனைவி. அது முற்றிலும் உண்மை. இது ஒன்றையொன்று பொருத்தும் காலமாயுள்ளது. சகோதரனே, ஒன்றையொன்று பொருத்தும் காலம்... இவையனைத்தும் ஒரு நோக்கத்துக்காகவே செய்யப்படுகின்றன. என் 'கோட்'டின் நிறம் என் கால் சட்டையின் நிறத்துடன் பொருந்துகின்றதா என்று நான் கவலைப்படுவதில்லை. இதனால் எனக்கு கடினமான நேரம் உண்டாகின்றது. என் மனைவி அல்லது மருமகள், நான் என்ன விதமான கழுத்தணியை என் 'சூட்'டுடன் அணிய வேண்டும் என்று எனக்கு சொல்லிக் கொடுக்க வேண்டியதாயுள்ளது. அவை பொருந்துகின்றனவா என்று எனக்குக் கவலையேயில்லை. என் அனுபவம் தேவனுடைய வார்த்தையுடன் பொருந்தவே நான் விரும்புகிறேன். அவ்வளவு தான், ஏனெனில் அங்குதான் நான் வாழ வேண்டுமென்று எண்ணம் கொண்டிருக்கிறேன், மூலையில் ஜோன்ஸ் குடும்பத்துடன் அல்ல, ஆனால் மகிமையில் இயேசு ஆயத்தம் பண்ண சென்றிருக்கிற ஸ்தலத்தில். ஆம், அதுதான் நமக்கு வேண்டும். ஆம் ஐயா! இவையனைத்தினின்றும் விலகி... 77இங்குள்ள இந்த பழைய பூமிக்குரிய கூடாரம், அது என்னவென்று உங்களுக்குத் தெரியும். இந்த சரீரம் நீங்கள் அணிந்த பழைய 'கோட்'டைப் போன்றது - நீங்கள் ஒரு காலத்தில் அணிந்த கோட்டு. ஆனால் இப்பொழுது உங்களுக்கு அதைக் காட்டிலும் நல்ல 'கோட்' உள்ளதால், பழைய 'கோட்'டை நீங்கள் அணிவதில்லை. நீங்கள் அதை என்ன செய்கிறீர்கள்? அதை அலமாரியில் தொங்கவிட்டு விடுகிறீர்கள், ஏனெனில் உங்களுக்கு அதைக் காட்டிலும் நல்ல 'கோட்' உள்ளது. நீங்கள் முன்பு அணிந்திருந்தது பழையதாகிவிட்டு, இப்பொழுதுள்ளது இக்காலத்துக்கேற்றதாக உள்ளது. அது என்ன? அது ஒரு உடை. நீங்கள் அதற்குள் இருக்கிறீர்கள். அந்த உடை என்ன செய்தது? அது உங்கள் சாயலை தரித்திருந்தது. பாருங்கள்? ஆனால் அது உங்களுக்கு இனிமேல் தேவையில்லை. அதை நீங்கள் தொங்க விட்டுவிட்டீர்கள். அது கந்தையாகிவிட்டது. அது போன்று தான் இந்த பழைய சரீரமும் கூட. அது வானவரின் சாயலைத் தரித்திருந்தது. இருப்பினும் அந்த சரீரம் நீங்கள் அல்ல. நீங்கள் அந்த சரீரத்துக்குள் இருக்கிறீர்கள். நீங்கள், தேவனுடைய ஆவி, அந்த சரீரத்துக்குள் இருக்கிறீர்கள். அதுதான் வெளிப்புறத்தை அதன் கட்டுக்குள் கொண்டு வருகிறது. ஏனெனில் உள்ளுக்குள் இருப்பது அதை இழுத்து (பாருங்கள்?), அதை தேவனுடைய வார்த்தையுடன் வரிசைப்படுத்துகிறது; சரீரத்துக்குள் இருக்கும் நீங்கள். இந்த சரீரம் ஒரு பழைய 'கோட்'. ஒருநாள் அதை என்ன செய்யப்போகிறீர்கள்? அது உங்களுக்கு சிறிது காலம் உடையாக இருந்தது. அது - இந்த சரீரம் - பூமிக்குரிய உடை. ஆனால் உண்மையான நான் வில்லியம் பிரன்ஹாம் என்றழைக்கப்படும் அந்த பழைய கோட்டுக்குள் இருக்கிறேன் - அல்லது சுசி ஜோன்ஸ், வேறெந்த பெயராலும் அழைக்கப்பட்டாலும். பாருங்கள்? ஒருநாள் இது பூமியின் ஞாபகார்த்த மண்டபத்தில் தொங்கிக் கொண்டிருக்கும். அதை நீங்கள் கல்லறையில் வைத்து, யாராவது ஒருவர் அதன் மேல் கல்லை வைத்து ''இங்கு சங்கை இன்னார் இன்னார்“ அல்லது ”ஜான் இன்னார் இன்னார்“ படுத்திருக்கிறார் என்று எழுதுகின்றார். அது உங்கள் ஞாபகார்த்தமாக அங்குள்ளது. ஜனங்கள் உங்களை அந்த சரீரத்தில் காண்கின்றனர். ஆனால் உண்மையான நீங்கள் அதற்குள் இருக்கின்றீர்கள். அந்த பழைய கோட்டு வானவருடைய சாயலை அணிந்திருந்தது. ஓ, ஜனங்களே, கோட்டுகளை மாற்றிக்கொள்ள நீங்கள் பதிவு செய்து கொண்டீர்களா? பரலோகத்துக்கு செல்ல நீங்கள் பதிவு செய்து கொண்டீர்களா? ஞாபகம் கொள்ளுங்கள். நீங்கள் பதிவு செய்திருக்க வேண்டும். அதில்லாமல் நீங்கள் அங்கு செல்ல முடியாது. உங்களிடம் நான் இப்பொழுது நவீன மொழியில் பேசிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் ஒரு ஓட்டலுக்கு தங்கச் சென்றால், 78அங்குள்ளவர், ''நீங்கள் பதிவு செய்து விட்டீர்களா? நான் வருந்துகிறேன், எல்லா அறைகளும் நிறைந்துள்ளன'' என்று சொல்லிவிடுவார். நீங்கள் பதிவு செய்யாத காரணத்தால் குளிரில் இருக்க நேரிடும். அவ்வாறே நீங்கள் பதிவு செய்யாமல் உங்கள் வாழ்க்கை பாதையின் முடிவுக்கு வந்துவிட்டால், உங்களைச் சந்திக்க அங்கு யாரும் இருக்கமாட்டார்கள். நீங்கள் இருண்ட நித்தியத்துக்குள் செல்ல வேண்டும். அங்கு அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும். நீங்கள் பதிவு செய்தே ஆகவேண்டும். பதிவு செய்யாமல் நீங்கள் நகரத்துக்குள் செல்ல முடியாது. இயேசு ஆயத்தம் பண்ணச் சென்ற அந்த நகரத்துக்குள் செல்ல நீங்கள் பதிவு செய்திருக்க வேண்டும். ஞாபகம் கொள்ளுங்கள், நீங்கள் பதிவு செய்திருக்க வேண்டும், இரட்சிப்பின் அங்கியை தரித்திருக்க வேண்டும். இல்லையென்றால்... 79மத்தேயுவிலிருந்து ஒரு வேதபாகத்தை இங்கு குறித்து வைத்துள்ளேன் (நான் வேத வசனங்களை கவனித்துக் கொண்டு வருகிறேன்). மத்தேயு 22: 1-14. அதை படிக்க எனக்கு நேரமில்லை, ஏனெனில் அதிக தாமதமாகிவிட்டது. நான் நீண்ட நேரம் உங்களிடம் பேசிவிட்டேன். ஞாபகம் கொள்ளுங்கள். ராஜா ஒரு விருந்து பண்ணினான். அவன் அதற்காக தன் எருதுகள் அனைதையும் கொழுத்த ஜெந்துக்களையும் அடித்து ஒரு பெரிய விருந்தை ஆயத்தம் பண்ணினான். அவன் தன் ஊழியக்காரரை அனுப்பி அநேகரை விருந்துக்கு அழைத்தான். ஒருவன் “உங்களுக்குத் தெரியுமா, நான் இதைச் சார்ந்தவன், எனக்கு இது உள்ளது. என் வயலுக்கு நான் செல்லவேண்டும்'' என்று சாக்கு போக்கு சொல்லிவிட்டான். அவன் மறுபடியும் அனுப்பினான். அவர்கள் ஊழியக்காரரை அவமானப்படுத்தினார்கள். முடிவில்... இயேசு யூதர் சந்ததிக்கு இதை கூறினார்; அவர்கள் வேறொன்றைச் செய்யவேண்டும். முடிவில் அவன், ''அவர்களைப் பலவந்தம் பண்ணி அழைத்து வாருங்கள். நீங்கள் வழிச் சந்திகளிலும் தெருக்களிலும், எல்லாவிடங்களிலும் சென்று அவர்களை பலவந்தமாக அழைத்து வாருங்கள்“ என்றான். அதன் பிறகு அவன் கலியாண விருந்தைப் பரிமாற தீர்மானம் கொண்டான். அங்கு விருந்தாளிகள் இருந்தனர். ஒருவன் கலியாண வஸ்திரம் தரித்திராதவனாய் அங்கு இருப்பதை அவன் கண்டான். அவன் பழைய வஸ்திரத்தையே உடுத்தியிருந்தான். அவன் அவனிடம் என்ன சொன்னான் என்று பாருங்கள். ''சிநேகிதனே, உன்னை நான் கலியாண விருந்துக்கு அழைத்தேன்”. அதற்கு வரும்படி உனக்கு அழைப்புவிடுத்தேன். 80நீங்கள் கிழக்கத்திய நாடுகளுக்கு எப்பொழுதாவது சென்றிருந்தால் - நான் பலமுறை அங்கு பிரசங்கித்திருக்கிறேன் - இப்பொழுதும் முன் போலவே கலியாண விருந்து வைக்கப்படுவதைக் காணலாம். மணமகன் அநேக விருந்தாளிகளை அழைக்கிறான். சகோ. காப், நீங்கள் இந்தியாவில் அதை கண்டிருப்பீர்கள். பாருங்கள்? அவன் அநேக விருந்தாளிகளை அழைக்கிறான். அவன் முப்பது விருந்தாளிகளை அழைக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அவர்கள் ஒவ்வொருவருக்கும் மணமகன் அங்கியை அளிக்க வேண்டும். ஒரு மனிதன் அங்கு வந்து வாசலில் நின்று கொண்டிருப்பான். விருந்தாளி தன்னுடன் அழைப்புச் சீட்டையும் கொண்டு வர வேண்டும். அந்த மனிதன் அதை பரிசோதித்துவிட்டு, விருந்தாளிக்கு ஒரு அங்கியை அணிவிக்கிறார். சிலர் பணக்காரர், சிலர் ஏழைகள். அவர்கள் வெவ்வேறு வகையினர். அவர்கள் அங்கியை அணியும்போது, ஒரே போல் காணப்படுகின்றனர். நீங்கள் அனைவரும் ஒரே போல் இருக்க வேண்டும்; நீங்கள், ''நான் அங்குள்ள மெதோடிஸ்டு'', ''நான் அங்குள்ள பிரஸ்பிடேரியன்“ என்று சொல்ல முடியாது, இல்லவே இல்லை! நீங்கள் அப்படி கூறினால், முதலாவதாக அங்கு செல்லவே முடியாது. பாருங்கள்? நீங்கள் வாசலின் வழியாக வரவேண்டும். இயேசு, ”நானே ஆடுகளுக்கு வாசல்'' என்றார். ''நான் பெந்தெகொஸ்தேயினன்'', ''நான் இது, நான் அது.'' அதனால் ஒரு உபயோகமுமில்லை, நீங்கள் வாசலின் வழியாக பிரவேசிக்க வேண்டும். அவ்வாறு பிரவேசித்தால் அங்கியைப் பெற்றுக் கொள்வீர்கள். 81அவன், “சிநேகிதனே, இங்கே எப்படி வந்தாய்?'' என்று கேட்டான். பாருங்கள்? அவன் வேறு வழியாய் பிரவேசித்தான் என்பதை அது காண்பிக்கிறது. அவன் ஜன்னலின் வழியாகவோ அல்லது பின் வழியாகவோ பிரவேசித்திருக்க வேண்டும் - வாசலின் வழியாக அல்ல, இயேசு தம்மை பலியாக ஒப்புக் கொடுத்து பிரவேசித்த வாசலின் வழியாக அல்ல. உங்கள் அனைத்தையும் தேவனிடம் ஒப்புவித்து. கல்வாரிக்கு நடந்து சென்று, அவருடன் சிலுவையிலறையப்பட்டு, மறுபடியும் எழுந்து, அவருடைய பலியாகிய வஸ்திரத்தை தரித்து, உலகத்தின் காரியங்களுக்கு மரிப்பதன் மூலமே அதில் பிரவேசிக்க முடியும். நீங்கள் உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்பு கூர்ந்தால், உங்களிடத்தில் தேவனின் அன்பு சிறிதுகூட இல்லை. பாருங்கள்? நீங்கள் இன்னும் உலகத்தின் மேல் அன்பு உலகத்தைப் போல் நடந்து கொண்டு, உலகத்தைப் போல் செயல் புரிந்தால், நீங்கள்... நீங்கள் இன்னும்... நீங்கள் சபையில் இருக்கிறீர்கள், ஆனால் கோதுமையின் மத்தியில் களையாக இருக்கிறீர்கள். மற்றவர்களுடன் நீங்களும் கூச்சலிடுகிறீர்கள், மற்றவர்களுடன் நீங்களும் களிகூருகின்றீர்கள்; ஆவிக்குரிய எல்லா ஆசீர்வாதங்களும் உங்கள்மேல் தங்கியுள்ளது. நீங்கள், ''நான் தீர்க்கதரிசனம் உரைக்கிறேன்'' எனலாம். காய்பாவும் கூட தீர்க்கதரிசனம் உரைத்தான், பிலேயாமும் தீர்க்கதரிசனம் உரைத்தான். அதனால் ஒன்றுமில்லை... 82''நான் பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெற்றிருக்கிறேன்.'' அதற்கும் இதற்கும் யாதொரு சம்பந்தமில்லை. அது உங்களிடம் அளிக்கப்பட்ட சரீரப் பிரகாரமான ஒரு வரம் மாத்திரமே. ஆனால் உண்மையான வரம் உங்களுக்குள் இருக்கும் ஆத்துமாவே (பாருங்கள்?), அது தேவனால் பிறந்து தேவனுடைய வார்த்தைக்கும் அவருடைய சித்தத்துக்கும் முழுவதுமாக கட்டுக்கு அடங்கினதாய் இருக்க வேண்டும்; அதில் நீங்கள் வளருகின்றீர்கள். பாருங்கள்? அப்பொழுது நீங்கள் தேவனுடைய குமாரரும் குமாரத்திகளுமாயிருக்கிறீர்கள். நீங்கள் தேவனுடைய பிள்ளையாயிருக்கிறீர்கள். இப்பொழுது தோன்றுகிற இந்த காரியங்கள்... தாயைப் போன்று; நீங்கள் பூமியின் வயிற்றிலிருந்து வெளிவர பிரயாசப்பட்டு கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் வெளிவரும் தேவனுடைய குமாரன். வசனம், ''நீங்கள் இதை செய்ய வேண்டும், நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும்'' என்று கூறுவதை நீங்கள் காண்கிறீர்கள். ''நான் ஒரு சபையைச் சேர்ந்தவன். அதனால் ஒரு உபயோகமுமில்லை“. பாருங்கள்? ''நான் ஒரு மெதோடிஸ்டு, என் தாய்...'' அது உன் தாய்க்கு நல்லதாக இருந்தது. ''நான் பெந்தெகொஸ்தேயினன்; நான் இதை சேர்ந்தவன்''. நீ தேவனுடைய வார்த்தையுடன் இணையாமல் போனால், ஏதோ தவறுண்டு. பாருங்கள்? அப்பொழுது உன் உண்மையான பிதா, தேவன் அல்ல (பாருங்கள்?). ஏனெனில் உன் ஆத்துமா தான் முதலில் ஆரம்பமானது. ஆவி என்று ஒன்று இருப்பதற்கு முன்பே, உன் ஆத்துமா இருந்தது. அந்த ஆத்துமா தேவனிடத்திலிருந்து வராமல் போனால், அது துவக்கத்தில் தேவனுடைய அணுவாக இல்லை. நீ வஞ்சிக்கப்பட்டாய். நீ ஒரு களையாக இருந்து, களை என்னும் முறையில் உலகத்தைக் குறித்து சாட்சி கொடுத்து, உலகத்தைப் போல் நடந்து கொண்டு, உலகத்தில் அன்பு கூருகிறாய். ஏனெனில் தேவனுடைய அன்பு உன்னிடத்தில் இல்லை. 83கடைசி நாட்களில் கள்ள அபிஷேகம் பெற்றவர்கள் இருப்பார்கள், கள்ள இயேசுக்கள் அல்ல. கள்ள இயேசுக்களை அவர்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்; கள்ள அபிஷேகம் பெற்றவர்களை அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள். அவர்கள் அபிஷேகம் பெற்றவர்களே. ஆம், ஐயா! ஆனால் அவர்கள் கிறிஸ்துவுக்கு விரோதமானவர்கள். கிறிஸ்து செய்த அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்ய அவர்கள் ஆவியினால் அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள், ஆனால் அவருடைய வார்த்தையுடன் இணைந்து போகாதவர்கள். பாருங்கள்? ''அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா“? என்பார்கள். அவர், “நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே என்னைவிட்டு அகன்று போங்கள்'' என்பார். ''நான் பெந்தெகொஸ்தேயினனாக இருந்தேன். தேவனுக்கு மகிமை! நான் கூச்சலிட்டேன்; அந்நிய பாஷைகள் பேசினேன்; வியாதியஸ்தர் மேல் கைகளை வைத்து சுகப்படுத்தினேன்; பிசாசுகளைத் துரத்தினேன்.'' ''அக்கிரமச் செய்கைக்காரனே, என்னை விட்டு அகன்று போ, நான் ஒருக்காலும் உன்னை அறியவில்லை“. 84நான் என்ன கூறுகிறேன் என்று உங்களுக்குப் புரிகிறதா? ஓ, சிறு பிள்ளைகளே, இன்றிரவு அந்த விட்டமினின் தேவையை உணருகிறீர்களா, அந்த ஒன்றை...? மேலே ஒரு சரீரம் காத்திருக்கிறது, ஒரு சரீரம், பெற்றுக் கொள்வதற்காக அங்கு காத்திருகிறது. ஜனங்களே, வஞ்சிக்கப்படாதீர்கள்! வஞ்சிக்கப்படாதீர்கள் பிசாசு வஞ்சிக்கிறவன். நீங்கள் கலியாண வஸ்திரத்தை கண்டிப்பாக தரிக்க வேண்டும். நாம் இப்பொழுது சாயங்கால நேரத்தில் இருக்கிறோம். மண்ணான இந்த சரீரம் அழிந்து போகக் காத்திருக்கிறது, நாம் வானத்துக்குரிய சரீரத்தில் பிரவேசிக்க ஆயத்தப்பட்டுக் கொண்டிருக்கிறோம். நாம் மகத்தான ஏதேனுக்குள் பிரவேசிக்க தேவனுடைய வினோதமான அழைப்பை இப்பொழுது உணருகிறோம். நாம் இவ்வுலகில் பிறப்பதற்கு முன்பு, நமது சிறு சரீரங்கள் எதோ ஒன்றுக்காக அழுத்து. அது கொடுக்கப்பட வேண்டும். இல்லையென்றால் நாம் ஊனமுள்ள பிள்ளைகளாய் பிறந்திருப்போம். தேவன் அங்கு எந்தவிதமான ஊனத்தையும் வைத்திருக்கவில்லை. எல்லாமே பிழையின்றி அமைந்திருக்கும். மணவாட்டி மணவாளனைப் போன்று தன் காலத்தில் வெளிப்பட்ட வார்த்தையாயிருக்கிறாள். பிள்ளைகளே, இன்றிரவு உங்கள் ஒவ்வொருவருக்கும் தேவன் அருளுவாராக. நாம் செல்வதற்கு பரலோகம் ஒன்றுண்டு. செல்லாமல் நம்மைக் காத்துக்கொள்ள, நரகம் ஒன்றுண்டு. 85கர்த்தர் எனக்கு ஆயிரக்கணக்கான தரிசனங்களை அருளியுள்ளார் என்று உங்களில் பலர் அறிந்துள்ளனர். மிகப் பெரிய காரியம்... நான் மரணத்தைக் குறித்து முன்பு பயந்ததுண்டு. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கிறிஸ்தவ வர்த்தகர் பத்திரிக்கையில் ''காலத்தின் திரையைக் கடந்து செல்லுதல்“ என்பதை நீங்கள் படித்திருப்பீர்கள். இன்றிரவு முழுவதும் நான் உயிரோடில்லாமல் மரிக்கக் கூடும். ஒருக்கால் என் வாழ்க்கையில் உங்களை நான் மறுபடியும் காணாமல் போய்விடக் கூடும். ஆனால் நான் கூறுவது உண்மை. இதை தரிசனம் என்றழைப்பதோ என்னவென்று எனக்குத் தெரியவில்லை. அண்மையில் ஒரு நாள் காலையில், நான் உறக்கத்தினின்று எழுந்தேன். நான் கூட்டத்திலிருந்து அப்பொழுது தான் திரும்பி வந்தேன். என் மனைவி அங்கு உறங்கி கொண்டிருந்தாள். நான், ''தேனே விழித்துக் கொண்டிருக்கிறாயா?'' என்று கேட்டேன். அவள் உறங்கிக் கொண்டிருந்தாள். பிள்ளைகளைப் பள்ளிக் கூடத்துக்கு அனுப்புவதற்காக நாங்கள் எழுந்திருக்க வேண்டுமென்று அறிந்திருந்தேன். நான் என் கையை இப்படி பின்னால் போட்டு, ”பில் பிரன்ஹாமே, உனக்கு ஐம்பது வயது கடந்து விட்டதென்று உனக்குத் தெரியுமா? நீ கர்த்தருக்கு ஏதாவது செய்ய நினைத்தால், அதை வேகமாக செய். ஏனெனில் உனக்கு இன்னும் அதிக சமயமில்லை'' என்று நானே என்னிடம் கூறிக் கொண்டேன். ''கர்த்தராகிய இயேசுவின் வருகையைக் காண நான் உயிரோடிருப்பேன் என்று நம்புகிறேன்'' என்று எண்ணினேன். நாம் மரித்துப் போனால் ஆவியாக மாறிவிடுவோம் என்று எப்பொழுதுமே என் மனதில் எண்ணியதுண்டு. உதாரணமாக, இங்குள்ள சகோதரன். ''சகோ. பிரன்ஹாமே, பூமியில் ஒரு இரவு என் சபையில் பிரசங்கித்தீர்கள்'' என்று கூறினார் என்று வைத்துக்கொள்வோம். ஆனால் அவர் ஒரு ஆவியாயிருப்பதால், அவருடன் என்னால் கைகுலுக்க முடியவில்லை. அவருடைய கை கல்லறையில் அழுகிப் போய்விட்டது. என் கையும் கூட, அப்படித்தான் நான் நினைத்துக் கொண்டிருந்தேன். 86அன்று காலை ஏதோ ஒன்று என் மேல் வருவது போல் தோன்றினது - ஒரு தரிசனம் உண்டாவது போல். நான் பார்த்துக் கொண்டிருந்த போது, ''என்னே, இது என்ன?'' என்று எண்ணினேன். நான் பார்த்தபோது, பசுமையான மலைகள் காணப்பட்டன. வாலிப் பெண்கள் ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் எல்லாவிடங்களிலுமிருந்தும் வருவதை நான் கண்டேன். அவர்களுடைய கூந்தல் நீளமாக வளர்ந்து தொங்கிக் கொண்டிருந்தது. அவர்கள் வெள்ளை அங்கிகளை அணிந்து, வெறுங்கால்களில் நடந்து, ''எங்கள் சகோதரனே!'' என்று கூச்சலிட்டுக் கொண்டு வந்தனர். ''இது விசித்திரமாயுள்ளதே'' என்று நான் நினைத்தேன். நான் திரும்பிப் பார்த்தபோது, அங்கு படுத்துக்கொண்டிருந்தேன். என் மனைவி படுக்கையில் படுத்துக் கொண்டிருந்தாள். என்ன தெரியுமா, “நான் மரித்துப் போனேன்'' என்று நினைத்துக் கொண்டேன். ”எனக்கு மாரடைப்பு ஏற்பட்டு நான் மரித்துவிட்டேன். என் உடல் அங்கு படுத்துக் கிடக்கிறது'' என்று எண்ணினேன். என் கைகள் இப்படி பின்னால் இருந்த வண்ணம் (பாருங்கள்? நான் விறைத்துப் போய் படுத்துக் கொண்டிருந்தேன்). ''அது இருபது அடி தூரம் கூட இல்லையே“ என்று எண்ணினேன். ''அங்கு என் மனைவி இருக்கிறாள். எல்லாமே அங்குள்ளது. என் 'ஷர்ட்' அங்கு கட்டில் கம்பத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது நான் இங்கு இருக்கிறேனே'' என்று எண்ணினேன். 87நான் மறுபடியும் பார்த்தபோது, இந்த பெண்கள் அனைவரும் வந்து கொண்டிருந்தனர். நான் இந்த பக்கம் பார்த்த போது, என் சகோதரர் - எல்லோருமே அப்பட்டமானவர்கள் - வந்து கொண்டிருந்தனர். அவர்கள் எல்லோரும் வாலிபர்களாக காணப்பட்டனர். அவர்கள், ''விலையேறப் பெற்ற எங்கள் சகோதரனே!'' என்று கூச்சலிட்டனர். என்ன நினைப்பதென்றே எனக்குத் தெரியவில்லை. “இது விசித்திரமாயுள்ளதே” என்று எண்ணினேன் நான் என்னைப் பார்த்த போது, “நான் வயோதிபனாக அல்ல. வாலிபனாக காணப்பட்டேன். இது வினோதமாயுள்ளது. இது தரிசனமா?'' என்று எண்ணினேன். நான் என் விரலைக் கடித்தேன். ''இது நான் வழக்கமாக காணும் தரிசனம் அல்ல” என்று நினைத்துக் கொண்டேன். மேலேயிருந்து ஏதோ ஒன்று என்னிடம், “உன் ஜனங்களுடன் நீ சேர்ந்துவிட்டாய்'' என்று கூறினது. நான், “என் ஜனங்களுடனா? இவர்களெல்லாரும் பிரன்ஹாம் குடும்பத்தைச் சேர்ந்தவர்களா?'' என்று எண்ணினேன். அவர், ''இவர்களெல்லாரும் நீ கிறிஸ்துவினிடம் கொண்டு வந்தவர்கள்'' என்றார். அந்த பெண்கள்... நான் பெண்களை வெறுப்பவன் என்று எப்பொழுதுமே கருதப்படுபவன். அவர்கள் என்னை அவ்வாறு அழைக்கின்றனர். நான் அப்படியல்ல (பாருங்கள்?) ஏனெனில் நான் என்ன நம்புகிறேன் என்றால்... பாருங்கள்? நான் - நான் - நான் நடத்தை கெட்ட, நாணயமில்லாத பெண்களை விரும்புவதில்லை; எனக்கு உத்தமமான சகோதரிகளைப் பிடிக்கும். அவர்கள் அப்படி நினைத்தால் பரவாயில்லை. 88நான் சிறுவனாயிருந்த போது, என் உடலில் சில தழும்புகள் உண்டாயின, சில சம்பவங்கள் என்னை அந்த வழிக்கு கொண்டு சென்றன. ஆனால் அவையனைத்தும் தேவனால் உண்டானவை, இந்த நேரத்துக்கென்று அவர் என்னை வனைந்தார். பாருங்கள்? ஒரு உண்மையான, உத்தமமான சகோதரியைக் காட்டிலும் அருமையானது ஒன்று கிடையாது என்பது என் கருத்து. தேவன் ஒரு மனிதனுக்கு இரட்சிப்பைக் காட்டிலும் சிறந்த ஒன்றைத் தர முடியுமானால், அவர் அவனுக்கு ஒரு மனைவியைத் தருகிறார். பாருங்கள்? அதைக் காட்டிலும் சிறந்த ஒன்றைத் தரமுடியுமானால் அவர் தந்திருப்பார். அப்படியிருக்க, அவர்களில் சிலர் மனைவியைப் போல் நடந்து கொள்ளாமல், அவர்கள் செய்த விவாகப் பொருத்தனைகளை மீறுவதைக் காணும் போது அவ்வாறே கணவர்களும் கூட. நீங்கள் உயிரோடிருக்கும் வரைக்கும் ஒருவரோடொருவர் இணைக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். தேவன் பூமியில் எதை இணைக்கிறாரோ, அது பரலோகத்திலும் இணைக்கப்பட்டிருக்கிறது. 89எனவே அதை நான் கண்டேன். இந்த பெண்கள் ஓடி என்னண்டை வந்து, தங்கள் கரங்களை என் தோள்களின் மேல் போட்டு என்னைக் கட்டித் தழுவி, என்னை சகோதரன் என்றழைத்தனர். அவர்கள் பெண்கள், ஆனால் அந்த இடத்தில் பாவம் இருக்கமுடியாது... ஒரு பெண்ணுக்கு பெண் சுரப்பிகளும், ஒரு ஆணுக்கு ஆண் சுரப்பிகளும் குழந்தைகளைப் பெறுவதற்காகவே அளிக்கப்பட்டுள்ளன. ஆனால் அங்கு இந்த சுரப்பிகள் கிடையாது. எல்லோருக்கும் ஒரே விதமான சுரப்பி இருக்கும். ஆனால் அவர்கள் அதே உருவத்தில் இருப்பார்கள். அவர்கள் இங்கு அணிந்திருந்த மண்ணான சாயல் அங்கும் இருக்கும், ஆனால் பாவம் என்பது அங்கிருக்காது. ஆண்களும் பெண்களும் எல்லாம் ஒன்றே. அங்கு பிள்ளைகளைப் பெறமுடியாது. பாருங்கள்? அது உண்மை. அது அவ்விதமாகத்தான் இருக்கும். எனவே நான் பார்த்த போது, இந்த பெண்கள்... 90இந்த சகோதரர்கள் என்னை தூக்கி ஓரிடத்தில் உட்கார வைத்தனர். ''நீங்கள் ஏன் இப்படி செய்கிறீர்கள்?'' என்று கேட்டேன். அவர், ''பூமியில் நீ அவர்களுக்கு தலைவனாயிருந்தாய். நீ... இவர்கள் உன்னுடையவர்கள்'' என்றார். சில பெண்கள் வந்தனர். ஒரு பெண். ''விலையேறப் பெற்ற எங்கள் சகோதரனே'' என்றாள். சிறந்த அழகி. அவள் என்னை கடந்து சென்றபோது, ஒரு சத்தம், “அவளை உனக்கு ஞாபகமுள்ளதா?'' என்று கேட்டது. நான், “இல்லை” என்றேன். “அவள் தொண்ணூறு வயதைக் கடந்த பிறகு, அவளை நீ கிறிஸ்துவினிடம் வழி நடத்தினாய். அவள் ஏன் உன்னை விலையேறப்பெற்ற சகோதரனே என்றழைக்கிறாள் என்று உனக்குப் புரியவில்லையா?'' என்று கேட்டது. நான், ''நீங்கள் எங்கு...'' என்று கேட்டபோது. அவர்கள், “இல்லை, நாங்கள் இங்கு காத்திருக்கிறோம்” என்றனர். ''நான் கடந்து சென்று இயேசுவைக் காண விரும்புகிறேன்“ என்றேன். அப்பொழுது அவர்கள், “நீங்கள் இப்பொழுது காண முடியாது. அவர் இன்னும் சிறிது உயரத்தில் இருக்கிறார். ஒருநாள் அவர் திரும்ப வருவார். நாங்கள் மறுபடியும் பூமிக்குச் செல்வோம். இங்கு நாங்கள் புசிப்பதும் குடிப்பதும் கிடையாது'' என்றனர். 91''இதைக் குறித்தா நான் பயப்பட்டேன்? இது...'' என்று எண்ணினேன். அதை விவரிக்க வார்த்தையே கிடையாது நண்பனே. அது ஒரு பரிபூரணம் (Perfect) என்னும் சொல் அதனருகில் வரவே முடியாது. பயபக்தியூட்டும் (Sublime) - அதை விவரிக்க எனக்குத் தெரிந்தவரைக்கும் அகராதியில் வார்த்தையே கிடையாது எனக்குத் தெரிந்த எல்லாவற்றைக் காட்டிலும் அது சிறந்தது. அவர் அங்கிருந்தார். அங்கு வியாதியில்லை, துன்பமில்லை. அங்கு நீங்கள் மரிக்க முடியாது. அங்கு நீங்கள் பாவம் செய்ய முடியாது. அது மிகவும் பரிபூரணமானது. மிகவும் பரிபூரணமானது. நண்பர்களே, அதை நீங்கள் இழந்து போகக் கூடாது. இழந்து போகக் கூடாது. ஞாபகம் கொள்ளுங்கள்... நான் சிறுவனாயிருந்த போது, நரகத்தைக் குறித்த ஒரு தரிசனம் கண்டேன். உங்களுக்குத் தெரியும், இன்றைய சீமாட்டிகள் (ஸ்திரீகள், நற்பண்பு கொண்ட சீமாட்டிகள் அப்படி செய்யமாட்டார்கள்) எப்படி தங்கள் கண்களை ஓநாய்களின் கண்கள் போல் வர்ணம் தீட்டிக் கொள்கின்றனர் என்று. அவர்கள் கண்களின் கீழ் நீல நிறமுள்ள அந்த பொருள். அதை நான் கண்டேன். என் உயிர் போய்க் கொண்டிருந்தது. நான் சிறுவனாயிருந்த போது துப்பாக்கியால் சுடப்பட்டு, மருத்துவமனையில் மரணத்தருவாயில் இருந்தேன். தேவன் இருக்கிறாரென்று நான் எப்பொழுதும் அறிந்திருந்தேன். நான் ஜெபிக்க முயன்ற என் முதல் ஜெபம் என் நினைவுக்கு வருகிறது. என்னால் கூற முடிந்த ஒன்றே ஒன்று. இதை நான் முன்பு கூறினதில்லை. இப்பொழுது கூற ஏவப்படுகிறேன். நான் சுடப்பட்டு வயலில் மரணத்தருவாயில் கிடந்திருந்தேன். நான் தேவனிடம் செய்த ஒரே ஜெபம், “கர்த்தாவே, நான் விபச்சாரம் செய்யவில்லையென்று உமக்குத் தெரியும் என்பதே” பாருங்கள்? பதினைந்து வயது சிறுவனாக, நான் நேர்மையாக நடக்க முயன்றேன். ''நான் சுத்தமான வாழ்க்கை வாழ்ந்து வந்திருக்கிறேன்'' என்று மாத்திரமே என்னால் கூற முடிந்தது. அந்த தகுதியை மாத்திரமே என்னால் அவருக்களிக்க முடிந்தது. 92அங்கு படுத்திருந்த போது... மருத்துவர் என்னை விட்டு நடந்து சென்று விட்டார். நான் அந்தகார நித்தியத்துக்குள் அமிழ்ந்து போவதைப் போல் உணர்ந்தேன். நான் அப்பாவுக்காக கதறி, “ஓ, அப்பா, எனக்குதவி செய்யும்'' என்றேன். அங்கு அப்பா இல்லை. ''அம்மா எனக்குதவி செய்யும்”, அங்கு அம்மா இல்லை. ''தேவனே, எனக்குதவி செய்யும்'' அங்கு தேவன் இல்லை. அது முடிவற்ற, பயங்கரமான, ஓ, திகில் மூட்டும் காட்சி. எரிந்து கொண்டிருக்கும் அக்கினி ஜுவாலை நரகத்தை அதற்கு அருகில் வைத்தப் பார்த்தால் ராட்சத அக்கினி நரகமே சுகமான ஒன்றாக இருக்கும். அதிலிருந்து விலகியிருப்பதென்பது மிக்க மகிழ்ச்சி அளிக்கும். அந்த காட்சியை கண்ட போது. ஓ, என்னே என்று நினைத்தேன். அங்கு ஓரிடத்தை நான் அடைந்தேன் - புகை, இருள், வியாதி; ஓ அப்படிப்பட்ட ஒரு உணர்ச்சி. அது என்மேல் மரணமாயிருந்தது. அந்த பெண்கள் இப்படி வர்ணம் தீட்டிய கண்களுடன் என்னிடம் வருவதை நான் கண்டேன். அது நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. எப்படியும் நாற்பது ஆண்டுகள் இருக்கும். அந்த பெண்கள் இப்படி ஊ... ஊ... ஊ... என்று சத்தமிட்டு சென்றனர் ''நான் என்றென்றைக்கும் இங்கு இருக்க வேண்டுமா?'' என்று கேட்டேன். ''என்றென்றைக்கும்'' அப்பொழுது நான், “ஓ, தேவனே, இங்கிருந்து வெளியே செல்ல என்னை அனுமதிப்பீரானால், நான் உம்மைக் குறித்து இனி வெட்கப்படவே மாட்டேன். நான் வெட்கப்படவே மாட்டேன். தேவனே, தயவு கூர்ந்து எனக்கு ஒரு தருணம் அளிப்பீராக'' என்றேன். முதலாவதாக என்ன நேர்ந்ததென்றால் நான் மேலே வருவதைப் போன்ற உணர்ச்சி எனக்கு ஏற்பட்டது. மருத்துவருக்கு அது அதிசயமாயிருந்தது. ஏனெனில் என் இருதயம் ஒரு நிமிடத்துக்கு பதினேழு முறை மாத்திரம் துடித்துக் கொண்டிருந்தது. என் இரத்தம் எல்லாம் உடலிலிருந்து வெளியேறியிருந்தது. நான் என் இரத்தத்தில் படுத்துக்கொண்டிருந்தேன். என்றாகிலும் ஒரு நாள் பெண்கள் இவ்வாறு வர்ணம் தீட்டிக் கொள்ளுதல் நிகழும் என்று எண்ணினேன். 93இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, நான் டூசானில் குடியேறிய போது, என் மனைவியுடன் நான் ஜே.சி. பென்னி அங்காடிக்கு சென்றிருந்தேன். நான் தலைகுனிந்த வண்ணம் அங்கு உட்கார்ந்து கொண்டு என் மனைவிக்காக காத்திருந்தேன். ஸ்திரீகள் கடைக்குச் சென்று வாங்கினால் எவ்வளவு நேரம் எடுப்பார்களென்று உங்களுக்குத் தெரியும். நான் தலை குனிந்தவண்ணம் இப்படி உட்கார்ந்து கொண்டிருந்தேன். அப்பொழுது தானாகவே இயங்கும் படிக்கட்டு (escalator) மேலே வந்து கொண்டிருந்தது. அதில் சில பெண்கள் ''வாட்டர் ஹெட்'' தலைமயிர் அலங்காரத்துடனும், கண்களில் இப்படி வர்ணம் தீட்டிக்கொண்டும் வந்து கொண்டிருந்தனர். அவர்கள் ஸ்பானிய மொழி பேசினர். அது - அது அதெல்லாம்... அந்த தரிசனம் மறுபடியும் உண்டானது. அது அங்கிருந்தது (''ஊ... ஊ...''). சகோதரனே, சகோதரியே, உங்களிடம் ஒன்றைக் கூற விரும்புகிறேன். இப்பொழுது இது உங்களுக்கு கோமாளித்தனமாகத் தென்படக் கூடும். ஆனால் நீங்கள் அங்கு ஒருமுறை செல்வீர்களானால், அது ஆபத்தானது என்பதை அறிந்து கொள்வீர்கள். அந்த வழியில் ஒருக்காலும் செல்லாதீர்கள். 94நான் வயதான ஒரு போதகர், நான் உலகம் முழுவதும் பிரசங்கித்திருக்கிறேன். எனக்கு லட்சக்கணக்கான நண்பர்கள் உண்டு. நான் மறுகரையில் உங்களோடு நிற்க வேண்டுமென்பதை அறிந்திருக்கிறேன். உலகத்தின் காரியங்களிலிருந்து விலகுங்கள். இப்பொழுது நீங்கள் நடந்து கொள்ளும் விதமாகவே நடந்து கொள்ள வேண்டுமெனும் விருப்பம் உங்களுக்குள் இருந்தால், உலகத்தின் காரியங்கள் உங்களில் இருக்கிறது. அப்படியானால் நீங்கள் தேவனுடையவர்கள் அல்ல. நீங்கள் ஒரு சபை அங்கத்தினர் மாத்திரமே. ஆழத்தை ஆழம் நோக்கிக் கூப்பிடும் வரைக்கும் பாருங்கள்? மீனின் முதுகில் துடுப்பு (fin) உண்டாவதற்கு முன்பே அது நீந்துவதற்கு முதலில் தண்ணீர் இருக்க வேண்டும். இல்லையென்றால் அதற்கு துடுப்பே இருந்திருக்காது. மரம் உண்டாவதற்கு முன்பே, அது வளருவதற்கு ஒரு பூமி இருக்கவேண்டும். இல்லையென்றால் வளருவதற்கு மரமே இருந்திருக்காது... 95சிருஷ்டிப்பு உண்டாவதற்கு முன்பே சிருஷ்டிகர் ஒருவர் இருக்க வேண்டும். ''நீதியின் மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்“, அதில் ஏதோ ஒன்றுண்டு. சற்று முன்பு நீங்கள் உங்கள் கைகளையுயர்த்தி ''எனக்கு இன்னும் அதிகமாக தேவன் வேண்டும்'' என்பதை தெரியப்படுத்தினீர்கள். பாருங்கள், தேவையுள்ள ஏதோ ஒன்றுள்ளது. நீங்கள் உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்பு கூர்ந்து அவ்வழியில் சென்றால் நீங்கள் விழுந்து போவீர்கள். பாருங்கள்? அதை விட்டு வெளியே வாருங்கள்! நீங்கள் ராஜாவின் குமாரரும் குமாரத்திகளுமாயிருக்கின்றீர்கள். நற்பண்புள்ள பெண்களும் ஆண்களுமாக இருங்கள். கிறிஸ்தவர்களைப் போல நடவுங்கள்; கிறிஸ்தவர்களைப் போல் வாழுங்கள்; கிறிஸ்தவர்களைப் போல் நடந்து கொள்ளுங்கள், ஞாபகம் கொள்ளுங்கள். இந்த அறிவுரைகளுடன் உங்களை நான் நியாயத்தீர்ப்பில் சந்திப்பேன். பாருங்கள்? இன்றிரவு உங்களை நிலைக்கண்ணாடியில் நோக்கி, ''நான் எந்த வழியாய் சென்று கொண்டிருக்கிறேன்? இயேசு எனக்காக ஒரு ஸ்தலத்தை - ஒரு சரீரத்தை - ஆயத்தம் பண்ணுகிறாரா? அந்த சரீரம் பரிபூரணமானது. அது ஒழுங்காக நடக்கும்; அது தேவனுக்கு முன்பாக குமாரனும் குமாரத்தியுமாய் இருக்கும். அந்த சரீரத்துக்குள் பிறப்பதற்காக இங்கு நான் பிரசவ வேதனைப்படுகிறேன். நான் இன்னும் உலகத்தில் அன்புகூர்ந்தால், அங்கு எனக்கு சரீரம் இல்லையென்பதை அது காண்பிக்கிறது. நான் ஒரு சபை அங்கத்தினன் மாத்திரமே, நான் தேவனுடைய மரபு அணுவாகவே இல்லை... அவர் என் பிதா இல்லை'' என்று சொல்லுங்கள். 96''நீங்கள் சிட்சையை சகிக்காமல் போனால் (அதுதான் இப்பொழுது உங்களுக்கு நடந்து கொண்டிருக்கிறது), நீங்கள் தேவனுடைய புத்திரராயிராமல் வேசிப் பிள்ளைகளாயிருப்பீர்கள்'' என்று அவர் கூறியுள்ளார். அது சரியல்லவா? (சபையார் ''சரி'' என்கின்றனர் - ஆசி) வேதம் அவ்வாறு கூறுகின்றதா? (ஆமென்). வேதம் உங்களை சரிபடுத்துவதை நீங்கள் கண்டு, தேவனுடைய சிட்சை உங்களுக்குக் கிடைக்கும் போது, நீங்கள் அதை சகிக்காமல், ''ஓ, அதை கேட்க எனக்கு விருப்பமில்லை. நான் ஒரு கிறிஸ்தவன். என் விருப்பப்படியே...'' என்று கூறுவீர்களானால், பரவாயில்லை, அப்படியே செய்யுங்கள். நீங்கள் தேவனுடைய பிள்ளையல்ல என்பதற்கு அது உறுதியான சான்று. உண்மையான தேவனுடைய பிள்ளை எவரும் பசி தாகம் கொண்டவர்களாயிருப்பார்கள். ஏன்? உங்கள் இருதயத்திலுள்ள ஏதோ ஒன்று அது தேவையென்று உங்களிடம் கூறினால், உங்களை அங்கு இழுத்துக் கொள்ளும் துடிப்பு ஒன்றுள்ளது என்பதை அது காண்பிக்கிறது. அங்கு ஒரு சரீரம் உள்ளது, இங்குள்ள சரீரம் அதற்கு அடையாளமாய் உள்ளது. இந்த சரீரத்தை நீங்கள் எதற்காக உபயோகிக்கின்றீர்கள்? பிசாசையும், உலகத்தையும் அதன் வேஷத்தையும் மகிமைப்படுத்தவா? அல்லது நீங்கள் பரலோகத்தை நோக்குகின்றீர்களா? அங்கு ஏதோ ஒன்றுண்டு. உங்கள் வாழ்க்கையினால் தேவனை மகிமைப்படுத்துங்கள். “என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால் நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன், ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம் பண்ணப்போகிறேன். நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம் பண்ணின பின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக் கொள்ளுவேன்''. இனி வரப்போகும் காரியங்கள். இப்பொழுதுள்ளவை இனி வரப்போகிறவைகளை அறிவிக்கும் அடையாளங்களாயுள்ளன. நாம் ஜெபம் செய்வோம். 97இதை ஆழ்ந்து சிந்தியுங்கள். அருமை கிறிஸ்தவ நண்பனே, அப்படி செய்வாயா? ஒரு வினாடி ஆழ்ந்து சிந்தனை செய்யுங்கள். ஒரு நிமிடம் நாம் அமைதியாயிருப்போம். பரிசுத்த ஆவியானவர் பேசட்டும். அநேக நாட்களுக்கு முன்பு கர்த்தராகிய இயேசு என்னை பெந்தெகொஸ்தேயினராகிய உங்களிடம் அனுப்பினார். இங்கு உங்களுக்குப் போதகராயுள்ள இந்த இளைஞர் இந்த ஊழியத்தின் விளைவினால் போதகர் ஆனதாகக் கூறினார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து குருடாயிருந்த கண்களைத் திறப்பதை அவர் கண்டதாகக் கூறினார். நான் இப்பொழுதும் சுகமளிக்கும் ஆராதனைகளை நடத்துகிறேன். நான் அதிகம் நோய்வாய்ப்பட்டிருந்த அநேகருக்கு ஜெபம் செய்துவிட்டேன். அவர்கள் சுகமடைந்தனர். கர்த்தர் ஜெபத்துக்கு உத்தரவு அருளி வியாதியஸ்தர்களை சுகப்படுத்தினார். ஆனால் சுகமடைந்த சிலர் மரித்து விட்டனர். நீங்கள் எவ்வளவு வியாதிப்பட்டு சுகமடைந்த போதிலும், எப்படியும் ஒரு நாள் மரிக்கத்தான் போகின்றீர்கள். ஆனால் அந்த ஆத்துமா, என் விலையேறப் பெற்ற சகோதரியே, அதைக் குறித்து இப்பொழுது சிந்திக்கமாட்டாயா? அது நித்தியமானது. தேவனுடைய அன்பு அங்கில்லையென்றால், உங்களை ஒன்றும் இழுக்காது. நீங்கள் தேவனிடம், “ஓ, தேவனே, என்னை மறுபடியும் புதிதாக தொடங்கும். கர்த்தாவே, உம்மை நான் நேசிக்கிறேன். உம்மை நான் நேசிக்க விரும்புகிறேன். என் இருதயத்திலுள்ள ஏதோ ஒன்று உம்மிடம் நெருங்கி வாழ வேண்டுமென்று என்னிடம் கூறுகின்றது. கர்த்தாவே, நான் இப்பொழுதே வந்து அதை செய்ய விரும்புகிறேன்'' என்று கூறுவீர்களா? அப்படிப்பட்ட நபர் கட்டிடத்துக்குள்ளோ அல்லது கட்டிடத்துக்கு வெளியிலோ இருந்தால் கிறிஸ்துவின் ஊழியக்காரன் என்னும் முறையில், இயேசு கிறிஸ்துவின் ஊழியக்காரன் என்னும் முறையில், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களைக் கேட்கிறேன். உங்கள் தலைகளை வணங்கி, உங்கள் கைகளை தேவனிடம் உயர்த்தி, ''அன்புள்ள தேவனே, என்னை உம்மிடம் அருகாமையில், அருகாமையில் இழுத்துக் கொள்ளும். உம்முடைய வார்த்தையில் நீர் கூறியுள்ள ஒவ்வொன்றுடனும் என்னை வரிசைப்படுத்திக் கொள்ள விரும்புகிறேன்'' என்று கூறுங்கள். உங்கள் கைகளை இப்பொழுது உயர்த்துங்கள். உத்தமமாயிருங்கள். சற்று யோசித்துப் பாருங்கள். 98நீங்கள், “ஓ, நான் இதை செய்திருக்கிறேன், நான் ஆவியில் சத்தமிட்டிருக்கிறேன், நான் அந்நிய பாஷை பேசியிருக்கிறேன். ஆனால் பாருங்கள், என் வாழ்க்கையில் ஏதோ ஒரு குறையுண்டு. நான் தேவனுடைய வார்த்தை என்னும் நிலைக் கண்ணாடியில் என்னைக் காணும் போது, என்னில் குறையுண்டு என்பதைக் காண்கிறேன். நான் சபைக்கு செல்கிறேன். ஆனால் நான் இருக்க வேண்டிய விதமாய் இருக்கவில்லை” என்று கூறுங்கள். பாருங்கள்? அது எதைக் காண்பிக்கிறதென்றால், ஏதோ ஒன்று... நீங்கள் உங்களை நிலைக்கண்ணாடியில் கண்டு, நீங்கள் தேவனுடைய வார்த்தையுடன் உங்களை வரிசைப்படுத்திக் கொள்ளவில்லை என்பதை அறிந்து, உங்கள் கையையுயர்த்த அங்கு ஒன்றுமில்லையென்பதை காண்பீர்களானால், ஏதோ தவறுள்ளது என்பதை அறியுங்கள். நீங்கள்... அங்கு... “சிகப்பு முள்ளங்கியில்லிருந்து நீங்கள் இரத்தத்தை பெற முடியாது. ஏனெனில் அங்கு இரத்தமேயில்லை'' என்று என் தாய் கூறுவதுண்டு. பாருங்கள்? அதை உண்மையில் ஆழ்ந்து சிந்தியுங்கள், இது உங்களுக்கு கடைசி தருணமாயிருக்கலாம். இந்த சிறு குழுவின் மத்தியில் முப்பது நாற்பது கரங்கள் உயர்த்தப்பட்டன - இது போதகர்களுக்கும் கூட. 99சிறிது நேரம் மிகவும் பயபக்தியாயிருங்கள். சரியாக சிந்தனை செய்து பாருங்கள். ''அன்புள்ள தேவனே, ஒருக்கால் இன்றிரவு நான் விபத்தில் கொல்லப்படலாம், அல்லது மாரடைப்பால் மரிக்கலாம். ஒரு நாள் காலையில் நான் மருத்துவரை அழைக்கலாம். அவர் வந்து என் நாடித் துடிப்பை பரிசோதிப்பார். நான் மரித்துக் கொண்டிருப்பேன். அப்பொழுது என் கன்னத்தை தலையணையின் மேல் அழுத்திக் கொண்டு, 'ஓ தேவனே', ஓ தேவனே! என்று கதறுவேன்'' பாருங்கள், உங்கள் இருதயம் கடைசி முறையாக துடிக்கிறது. நீங்கள் அந்த மகத்தான வாசலண்டை வருகின்றீர்கள். நீங்கள் தேவனுடைய ஆவியினால் மறுபடியும் பிறந்தாலொழிய ஸ்தாபனத்தை விட்டு வெளிவர முடியாது. நீங்கள் தேவனுடைய ஆவியினால் பிறந்த பிறகு தேவனுடன் செல்ல நீங்கள் பசி தாகம் கொள்ளாமலிருந்தால் நீங்கள் வெளிவர முடியாது. பாருங்கள்? நீங்கள் இந்த பூமியின் வயிற்றில் பிள்ளைகளாயிருந்து, தேவனுடைய ராஜ்யத்துக்குள் பிறப்பதற்காக இன்னும் காத்திருக்கிறீர்கள். உங்களுக்காக அவர் வேறொரு சரீரத்தை - பரிபூரண சரீரத்தை - ஆயத்தம் பண்ண சென்றிருக்கிறார். இப்பொழுது ஆழ்ந்து சிந்தியுங்கள். நாம் ஒருமித்து ஜெபம் செய்வோம். 100அன்புள்ள தேவனே, இது அந்தப் புஸ்தகத்தில் அந்த மகத்தான ஏட்டில் எழுதி வைக்கப்பட்டுள்ளதென்று அறிந்திருக்கிறேன். கர்த்தாவே, நாங்கள் விஞ்ஞானத்தில் தலையிட்டு, நாங்கள் செய்யும் ஒவ்வொரு அசைவும் உலகம் முழுவதும் உடனே செல்கின்றது என்னும் உண்மையை அறிந்துகொள்ள, போதிய அளவுக்கு உறக்கத்தினின்று எழுப்பப்பட்டுள்ளோம். அதை நாங்கள் தொலைகாட்சியின் மூலம் அறிந்துள்ளோம். பிதாவே, தொலைகாட்சி ஒரு படத்தை உற்பத்தி செய்வதில்லையென்றும், அது துடிப்புகளை ஒரு குழாயின் வழியாக செலுத்துவதன் மூலம் அந்த படம் உண்டாகின்றதென்றும் நாங்கள் உணருகிறோம். நாங்கள் உடுத்துள்ள எங்கள் உடைகளின் நிறமும் கூட காற்றிலுள்ள 'ஈதர்' (ether) அலைகளின் வழியாக சென்று தொலைகாட்சியில் அப்படியே காணப்படுகின்றது. அந்த துடிப்புகள் உலகம் பூராவும் சென்று கொண்டிருக்கிறது. அப்படியிருக்க நமது சகோதரிகள் எவ்வாறு இத்தகைய உடைகளை அணிந்து, இப்படி நடந்து கொண்டு, பசிதாகம் கொள்ளாமல், முகத்தில் வர்ணம் தீட்டி, தலைமயிரைக் கத்தரித்துக் கொள்கின்றனர்... போதகர்கள் ஏதோ ஒரு வேதப்பள்ளிக்குச் சென்று வேத சாஸ்திரத்தை கற்று, மனிதனின் வார்த்தையை ஏற்றுக்கொள்வதன் விளைவாக, அவர்களுடைய பாரம்பரியத்தினால் தேவனுடைய கற்பனைகளை ஜனங்களின் மத்தியில் அவமாக்குகின்றனர்... அவர்கள் ஒரு சபையைச் சேர்ந்து கொள்ள வேண்டுமென்றும், அவ்வளவுதான் என்றும், அவர்களுடைய பாரம்பரியங்களைக் கொண்டு போதிக்கின்றனர். ஓ, தேவனே, நாங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் பதிவாகின்றது என்று விஞ்ஞானத்தின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளதென்றும், நாம் இவ்வுலகில் வாழத் துவங்கும் அன்று முதல் அது பதிவாகத் துவங்கி, நாம் மரிக்கும் போது அது முடிவு பெற்று தேவனுடைய சேமிப்பு அறையில் சேர்க்கப்பட்டு, நியாயத்தீர்ப்பின் நாளில் அது மறுபடியும் போட்டு காண்பிக்கப்படும் என்பதை அவர்கள் உணருகின்றனரா? இது நமக்கு முன்பாக அவ்வளவு தெளிவாக இருக்கும் போது, அதை நாம் புறக்கணிக்கின்றோமே, நாம் எப்படி தேவனுடைய தண்டனைக்கு தப்பித்துக் கொள்ளப்போகிறோம்? ஓ, அன்புள்ள தேவனே, இந்த வார்த்தைகள் ஒருபோதும் அழிந்து போவதில்லை. அவை சென்று கொண்டேயிருக்கின்றன. நியாயத்தீர்ப்பின் நாளிலே பதிவு செய்யப்பட்ட அந்தத் தட்டு போடப்படும். பிதாவே, உயர்த்தப்பட்ட கரங்களை நீர் கண்டீர். அது நியாயத்தீர்ப்பின் நாளில் அங்கிருக்கும். அவர்கள் தங்கள் இருதயத்தில் என்ன நினைத்திருந்தனரோ, அதுவும் நியாயத் தீர்ப்பின் நாளில் அங்கிருக்கும். 101இப்பொழுதும் பிதாவாகிய தேவனே, உமது ஊழியன் என்னும் முறையில், ஜனங்களின் அக்கிரமம் எல்லாவற்றையும் அவர்களிடமிருந்து நீக்கிப்போட வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன். அக்கிரமம் (iniquity) என்றால், நாம் செய்ய வேண்டுமென்று அறிந்திருந்தும் அதை செய்யாமலிருப்பது என்று பொருள். “என் இருதயத்தில் அக்கிரம சிந்தை கொண்டிருந்தேனானால் ஆண்டவர் எனக்குச் செவிகொடார்'' என்று தாவீது கூறியுள்ளான். தேவனே, எங்கள் அக்கிரமத்தை நீக்கிப் போடும் படி உம்மை வேண்டிக்கொள்கிறேன். வார்த்தை தான் எங்களுடைய நிலையைக் காண்பிக்கும் உம்முடைய நிலைக் கண்ணாடி. நாங்கள் ராஜாவின் குமாரரும் குமாரத்திகளுமாவதற்கு எவ்வளவு குறைவுள்ளவர்களாக இருக்கிறோம் என்பதை அது காண்பிக்கிறது. பிதாவே, அதை இன்றிரவே செய்யவேண்டுமென்று வேண்டிக் கொள்கிறோம். அதை பீடமாக மாற்றுவீராக. பீடத்தை சுற்றிலும் ஜனங்கள் நிறைந்துள்ளனர். அவர்கள் உட்கார்ந்து கொண்டிருக்கும் நாற்காலிகளை பீடமாக மாற்றி, அவர்களுடைய இருதயங்களை பீடமாகச் செய்யும். இங்குள்ள ஒவ்வொரு சகோதரனிடமிருந்தும், சகோதரியிடமிருந்தும் உலகம் அகன்று செல்வதாக. அந்த ஜீவனின் சிறு அணு, நாங்கள் இப்பொழுது பேசின அந்த தேவனின் மரபு அணு; தேவனிடத்திலிருந்து இறங்கி வந்து, தேவனை மகிமைப்படுத்தவும், கனப்படுத்தவும் இங்கு வெளிப்பட்டுள்ள அந்த தன்மை... தேவனே அவர்களிடமிருந்து உலகத்தை அகற்றுவீராக. கர்த்தாவே, மற்றவர்களுக்காக என்னால் ஜெபிக்க முடியாது. ஏனெனில் அவர்களுடைய வியாதி மரணத்துக்கேதுவாய் உள்ளது. அவர்களை அசையச் செய்ய அங்கு ஒன்றுமேயில்லை. ஆனால் அசைய முடிந்து அது தவறென்று அறிந்திருப்பவர்களின் இருதயங்களையும் ஆத்துமாக்களையும் இன்றிரவு சுத்திகரிப்பீராக. பிதாவே, அவர்கள் உமது ஆவியினால் நிறைந்து உமது ஒளியில் நடப்பார்களாக. 102இங்குள்ள இந்த அருமையான வாலிப, ஆரோக்கியமுள்ள, திடகாத்திரமுள்ள போதகரை ஆசீர்வதிப்பீராக. கர்த்தாவே, நீர் செய்த காரியங்களை அவர் கண்டதன் மூலம் அதன் பக்கம் இழுக்கப்பட்டதாக அவர் கூறினார். ஓ, தேவனே, இந்த அருமையான வாலிபனின் ஆத்துமாவில் அனல் மூட்டுவீராக. கர்த்தாவே, அதை அருளும். அவர் எல்லா சமயத்திலும் தொடர்ந்து உண்மையுள்ள மேய்ப்பனாயிருந்து, பரிசுத்த ஆவியானவர் அவரை கண்காணியாக நியமித்த மந்தையைப் போஷிப்பாராக. கர்த்தாவே, அதை அருளும். அவர் வலது புறமாவது இடது புறமாவது சாயாமல், எந்த கோட்பாட்டின் வழியையும் பின்பற்றாமல், தேவனுடைய கலப்படமற்ற வார்த்தை மாத்திரமே அவருடைய வாயிலிருந்து புறப்படும்படி அருள்புரிவீராக. தேவனே, அவரையும் அவருக்கு அன்பானவர்களையும் இங்குள்ள அவருடைய சிறு சபையையும் ஆசீர்வதிப்பீராக, பிதாவே, அவர்கள் அனைவருடனும் கூட இருப்பீராக. பிதாவே, இதை உம்மிடம் சமர்ப்பிக்கிறேன். விதை விதைக்கப்பட்டுவிட்டது. அது நித்திய ஜீவனுக்கென்று நியமிக்கப்பட்ட நிலத்தில் விழுந்து, அவர்கள் இந்த சபையிலும் வெளியேயிருந்து வந்திருக்கும் மற்ற சபைகளிலும் பெலமுள்ள கிறிஸ்தவர்களாக வளருவார்களாக. கர்த்தாவே, இதை அருளும். இதை உம்மிடம் தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் சமர்ப்பிக்கிறேன். பிதாவே, ''நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டு பண்ணும் ஆக்கினை அவர் மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமானோம்''. 103சில நிமிடங்களுக்கு முன்பு இந்த கதவின் வழியாக நரம்பு தளர்ச்சி கொண்ட ஒரு ஏழை ஸ்திரீ நகர்ந்து செல்வதைக் கண்டேன். ஓ தேவனே, அவளுடைய குடும்பத்தில் எவ்வளவு பெரிய காரியங்கள் செய்யப்பட்டன! உம்மை எவ்வாறு வெளிப்படுத்தினீர்! தேவனே, இந்த ஸ்திரீக்காக நான் ஜெபிக்கிறேன். கர்த்தாவே, அவளுடைய வாழ்க்கையில் முன்பு நடந்தவைகளையெல்லாம் அகற்றி, இன்றிரவு அவளை சுகப்படுத்துவீராக. கர்த்தாவே, நீர் செய்வீரா? அவளை உம்மிடம் எடுத்துக்கொள்ளும். கர்த்தாவே, சுகம் தேவையாயுள்ள சிறு பிள்ளைகள் இங்கு உட்கார்ந்திருப்பதைக் காண்கிறேன் - மற்றவர்களும். பிதாவே, அவர்களை சுகப்படுத்த வேண்டுமென்று ஜெபிக்கிறேன். அதை அருளும். உமது மகத்தான சுகமளிக்கும் வல்லமை இறங்கி வந்து எங்கள் ஆத்துமாவுக்கும் சரீரத்துக்கும் சுகமளிக்கட்டும். 104இப்பொழுது, சபைக்கு உள்ளிலும் வெளியிலும் சுகம் தேவைப்படுவோர், உங்கள் கைகளையுயர்த்தி, ''சகோ. பிரன்ஹாமே, எனக்கு சுகம் தேவைப்படுகிறது'' என்று கூறுங்கள். எல்லோருக்குமே சுகம் தேவையுள்ளது போல் தோன்றுகிறது. சரி. நான் கிறிஸ்துவின் ஊழியக்காரன் என்று நீங்கள் விசுவாசித்தால், “ஆமென்” என்று சொல்லுங்கள் (சபையோர் “ஆமென்” என்கின்றனர் - ஆசி). நீங்கள் ஒருவர் மேல் ஒருவர் கைகளை வையுங்கள். கைகளை உயர்த்தினவர்கள் (உள்ளேயிருந்தாலும் வெளியேயிருந்தாலும்) - நீங்கள் தேவனுடைய விசுவாசிகள் என்பதை அறிவிக்க உங்கள் கைகளையுயர்த்தினவர்கள், இயேசு கிறிஸ்து சபைக்கு தமது கடைசி கட்டளையாக, “நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள். விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான். விசுவாசிக்கிறவர்ளை இந்த அடையாளங்கள் பின் தொடரும்; என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்; நவமான பாஷைகளைப் பேசுவார்கள்; சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக் கேதுவானயாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்'' என்றார். இப்பொழுது... இயேசு அதை கூறினார். ஞாபகம் கொள்ளுங்கள், அவர் அதை கூறினார். அது அப்படியே நடக்க வேண்டும். அந்த வார்த்தையை பிடித்துக் கொள்ள யாரும் இல்லாமற்போனால் அவர் அதை கூறியிருக்கமாட்டார். 105''ஒரு கன்னிகை கர்ப்பவதியாவாள்'' என்னும் வாக்குத்தத்தத்தை மரியாளின் கர்ப்பம் பிடித்துக் கொண்டது போல. பனை மரமும் ஓக் மரமும் மலையின் மேல் சிருஷஷ்டிக்கப்பட்டது போல - அவருடைய வார்த்தை அதை செய்தது. அந்த வார்த்தை உங்கள் இருதயத்தையும் இப்பொழுது இறுகப்பற்றிக் கொள்ள முடியும். நான் ஒரு விசுவாசி, கர்த்தாவே, நான் கைகளை வைத்திருக்கிற இந்த மனிதர் அல்லது ஸ்திரீ அவதியுறுகின்றார். எனக்காக நான் ஜெபிக்கவில்லை. ஏனெனில் அவர்கள் எனக்காக ஜெபிக்கின்றனர். நான் அவனுக்காக அல்லது அவளுக்காக ஜெபிக்கிறேன். ஓ தேவனே, அவளை அல்லது அவரை சுகப்படுத்தும். நான் ஒரு விசுவாசி. இப்பொழுது நாங்கள் சபை கூடி வந்திருக்கிறோம். கிறிஸ்து இவ்வுலகில் நடந்த போது, நாங்கள் அவருக்குள் இருந்தோம் என்று இப்பொழுது தான் கற்பிக்கப்பட்டோம். ஏனெனில் நாங்கள் அவருடைய வார்த்தையின் ஒரு பாகமாயிருக்கிறோம். அவருடன் நாம் பாடுபட்டோம். அவருடன் நமக்கு இரத்தம் பீறிட்டு வெளிவந்தது. அவருடன் நாம் மரித்தோம். அவருடன் நாம் அடக்கம் பண்ணப்பட்டோம். அவருடன் நாம் உயிரோடெழுந்து, மகத்தான ராஜாவாகிய கிறிஸ்துவுடன் நாம் உன்னதங்களில் உட்கார்ந்து கொண்டிருக்கிறோம். அவர் நமது மத்தியில் இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கிறார். நான் இந்த ராஜாவின் குமாரன் அல்லது குமாரத்தி. என் கையை எனக்காக ஜெபித்துக் கொண்டிருக்கிற குமாரன் அல்லது குமாரத்தியின் பேரில் வைத்து அவர்களுக்காக நான் ஜெபித்துக் கொண்டிருக்கிறேன். இப்பொழுதும் கர்த்தாவே, என் ஜெபத்துக்கு உத்தரவு அருளி. இந்த தேவனுடைய குமாரன் அல்லது குமாரத்திக்கு சுகமளிப்பீராக. இப்பொழுது நாம் ஒருமித்து ஒருவருக்கொருவர் ஜெபிப்போம். 106கர்த்தராகிய இயேசுவே, எங்கள் தவறுகளை அறிக்கையிட்டு தாழ்மையுடன் உம்மிடம் வருகிறோம். நாங்கள் வியாதிக்கும் மரணத்துக்கும் துயரத்துக்கும் பாத்திரவான்கள் என்று அறிக்கையிட்டு வருகிறோம். ஆனால் எங்கள் பாவத்துக்கும் எங்கள் வியாதிக்கும் நீர் அளித்துள்ள பரிகாரத்தை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். இன்றிரவு இங்கு அமர்ந்துள்ள தேவனுடைய குமாரரும் குமாரத்திகளும் வார்த்தை தங்களைத் திருத்துவதைக் கேட்டு, தங்கள் கரங்களையுயர்த்தி உம்மிடம் நெருங்கி நடக்க விரும்புகின்றனர். அவர்கள் இப்பொழுது ஒருவர் மேல் ஒருவர் கைகளை வைத்துள்ளனர். ஏனெனில் உமது வார்த்தை உண்மையென்று அவர்கள் விசுவாசிக்கின்றனர். நாங்கள் கிறிஸ்துவுடன் உயிரோடெழுந்து அவருடன் உன்னதங்களில் உட்கார்ந்திருக்கிறோம் என்பதை அவர்கள் விசுவாசிக்கின்றனர். அவர்கள் ஒருவர் மேல் ஒருவர் தங்கள் கைகளை வைத்து ஒருவருக்காக ஒருவர் ஜெபிக்கின்றனர். விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும். கர்த்தர் அவனை எழுப்புவார். அவன் பாவஞ் செய்தவனானால் அது அவனுக்கு மன்னிக்கப்படும். நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம் பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது என்று நீர் கூறியிருக்கிறீர். ஓ நித்திய தேவனே, உமது ஊழியக்காரனின் ஜெபத்தைக் கேட்டருளுவீராக. “என் நாமம் தரிக்கப்பட்ட ஜனங்கள் ஒன்று கூடி ஜெபித்தால், பரலோகத்திலிருக்கிற நான் கேட்பேன்'' என்றும் எழுதியிருக்கிறதே. ஓ தேவனே, உம்முடைய பிள்ளைகளின் ஜெபத்தை இன்றிரவு பரலோகத்திலிருந்து நீர் கேட்பீராக. இந்த கூட்டத்தினரின் மேல் பரிசுத்த ஆவியை பலத்த காற்று அடிக்கிற இடி முழக்கம் போல் அனுப்புவீராக. இவர்களை தேவனுக்கு முன்பாக நாங்கள் கொண்டு வருகிறோம். 107சாத்தானே, நீ தோற்றுப்போனாய்; நீ தோற்கடிக்கப்பட்டவன். இயேசுகிறிஸ்து உன் மேல் கல்வாரியில் வெற்றி சிறந்தார். உனக்கு வல்லமை எதுவும் கிடையாது. நீ ஒரு பொய்காரன். இன்றிரவு இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எல்லா வியாதிகளும் வெளியே வரும்படி கட்டளையிடுகிறேன். அவர்கள் தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் விடுவிக்கப்பட்டு செல்வார்களாக. அல்லேலூயா தேவனுடைய மகிமையை உணருங்கள். உங்கள் ஜெபத்துக்கு உத்தரவு அருளப்பட்டதை உணருங்கள். உங்கள் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தவர் உங்களுக்காக ஏறெடுத்த ஜெபத்தை தேவன் கேட்டாரென்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? எத்தனை பேர் விசுவாசிக்கிறீர்கள். உங்கள் கைகளையுயர்த்துங்கள்? (சபையார் களி கூருகின்றனர்-ஆசி) பார்த்தீர்களா? ஓ, அற்புதமானது. நான் அவரை நேசிக்கிறேன், நான் அவரை நேசிக்கிறேன் (உங்கள் கரங்களை இப்பொழுது உயர்த்தி உங்கள் முழு இருதயத்தோடும் அவரிடம் பாடுங்கள்) முந்தி அவர் என்னை நேசித்ததால் (நீங்கள் முழு இருதயத்தோடும் அதை பாடுகின்றீர்களா?) சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்தில். 108உங்கள் அக்கிரமங்களை நீங்கள், செய்த பாவங்களை தேவன் மன்னித்துவிட்டாரென்று உங்களில் எத்தனை பேர் உணருகிறீர்கள்? இன்றிரவு முதற்கொண்டு, “ஓ தேவ ஆட்டுக்குட்டியே, நான் நேர்மையாக நடப்பேன் என்று வாக்கு கொடுக்கிறேன். கிறிஸ்தவன்- கிறிஸ்துவைப்போல் - என்னும் பெயருக்கு கெளரவமாக நான் நடந்து கொள்வேன். தேவனே, என் கைகளையுயர்த்தி, இன்றிரவு என்னை புதிதாக அர்ப்பணிக்கிறேன். நான் ஒளியில் நடப்பேன்”. ஆமென்! நாம் ஒளியில் நடப்போம் அழகான ஒளியில்; அது இரக்கத்தின் பனித்துளிகள் பிரகாசமாயுள்ள இடத்திலிருந்து வருகிறது. இயேசுவே, உலகத்தின் ஒளியை எங்களைச் சுற்றிலும் இரவும் பகலும் பிரகாசியும் நாம் ஒளியில் நடப்போம் அந்த அழகான ஒளியில் அது இரக்கத்தின் பனித்துளிகள் பிரகாசமாயுள்ள இடத்திலிருந்து வருகிறது (அங்குதான் நமக்காக ஒரு இடத்தை ஆயத்தம் பண்ண அவர் சென்றிருக்கிறார்) இயேசுவே, உலகத்தின் ஒளியே, எங்களைச் சுற்றிலும் இரவும் பகலும் பிரகாசியும். ஒளியின் பரிசுத்தவான்களே வந்து இயேசுவே உலகத்தின் ஒளியென்று பிரகடனம் செய்யுங்கள் அவருடைய நாமத்தில் சத்தியமும் இரக்கமும் உள்ளது இயேசுவே, உலகத்தின் ஒளி (அப்படியானால் நாம் என்ன செய்வோம்?) நாம் ஒளியில் நடப்போம், அழகான ஒளியில் அது இரக்கத்தின் பனித்துளிகள் பிரகாசமாயுள்ள இடத்திலிருந்து வருகிறது இயேசுவே, உலகத்தின் ஒளியே எங்களைச் சுற்றிலும் இரவும் பகலும் பிரகாசியும் ஓ, நீங்கள் சுத்திகரிக்கப்பட்டு நல்லுணர்வு பெற்றுள்ளதை உணருகிறீர்களா? (சபையார் “ஆமென்'' என்கின்றனர் - அசி) ஓ, என்னே! நாம் மறுபடியும் பாடும் போது, ஒருவரோடொருவர் கைகுலுக்குவோம். நாம் ஒளியில் நடப்போம், அழகான ஒளியில் அது இரக்கத்தின் பனித்துளிகள் பிரகாசமாயுள்ள இடத்திலிருந்து வருகிறது இயேசுவே, உலகத்தின் ஒளியே எங்களைச் சுற்றிலும் இரவும் பகலும் பிரகாசியும் இப்பொழுது நாம் கண்களை மூடி இதை மெளனமாக இசைப்போம். (சபையோர் மெளனமாக இசைக்கின்றனர்-ஆசி). (நாம் பிள்ளைகளைப் போல் நடந்து கொள்கிறோம். நாம் பிள்ளைகள் ) ஓ, அது அழகான ஒளி அது இரக்கத்தின் பனித்துளிகள் பிரகாசமாயுள்ள இடத்திலிருந்து வருகிறது. இயேசுவே, உலகத்தின் ஒளியே, ஓ, எங்களைச் சுற்றிலும் இரவும் பகலும் பிரகாசியும். நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? என் விசுவாசம் உம்மையே நோக்குகிறது கல்வாரியின் ஆட்டுக்குட்டியே (இப்பொழுது கண்களை மூடி பாடுங்கள்... ஆவியில் தொழுது கொள்ளுங்கள்) தெய்வீக இரட்சகரே, நான் ஜெபிக்கும்போது எனக்கு செவிகொடும். என் பாவங்கள் அனைத்தும் போக்கியருளும் இன்று முதல் நான் என்றென்றும் உம்முடையவனாயிருக்கட்டும் வாழ்க்கையின் இருள் சூழ்ந்த பாதையில் நடந்து என்னை கவலைகள் சூழும்போது ஓ, என் வழிகாட்டியாயிரும். இருள் பகலாக மாறக் கட்டளையிடும், துயரத்தின் பயங்கரங்களைப் போக்கும் உம்மிலிருந்து விலகாதபடி என்னைக் காத்துக்கொள்ளும். ஓ, என்னே உங்களுக்குத் தெரியுமா, நான் பழமை நாகரீகம் கொண்ட ஒருவன். எனக்கு... இது புதிதாக தோன்றியுள்ள, விஷம் நிறைந்த, 'ராக் அண்டு ரோல்' போன்ற போலிகளை இலட்சக் கணக்கான மைல்களுக்கு அப்பால் துரத்தி விடும். பழைய காலத்து கவிஞர்கள் பாடல்களை எழுதினபோது, பரிசுத்த ஆவி அவர்களுடைய பேனாவைப் பிடித்து எழுதினார். ஓ, என்னே! நான் எட்டிப்ரூயிட்டையும், மற்றெல்லா சிறந்த கவிஞர்களையும் நினைவு கூருகிறேன். ஃபானி கிராஸ்பி போன்றவர்களை. என்னைக் கடந்து சென்று விடாதேயும், மிருதுவான இரட்சகரே என் எளிய கதறுதலைக் கேளும்... 109ஒரு முறை அவர்கள் அவளைத் தங்கள் பக்கம் இழுக்கப் பார்த்தனர். அவள் பெந்தெகொஸ்தேயினனாகிய எல்விஸ் பிரஸ்லியைப் போன்று காடிலாக் கார்களுக்காக தன் சேஷ்ட புத்திரபாகத்தை விற்று போடுபவள் அல்ல. அவர்கள் அவளிடம் வந்து உலகப் பிரகாரமான பாடல்களை எழுத வேண்டுமென்று கேட்டனர். அவள் “எக்காரணத்தைக் கொண்டும் நான் செய்ய மாட்டேன்” என்று கூறி மறுத்துவிட்டாள். அவர்கள், “நீ குருடாயிருக்கிறாயே. பரலோகத்துக்கு செல்லும் போது அவரை எப்படிக் காணப்போகிறாய்?'' என்று கேட்டனர். அவள் உடனே பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்டு, இப்படி பாடினாள்: அவரை அறிந்து கொள்வேன், அவரை அறிந்துகொள்வேன் மீட்கப்பட்டவளாய் அவர் பக்கத்தில் நிற்பேன் அவரை அறிந்து கொள்வேன், அவரை அறிந்து கொள்வேன் (எப்படி?) அவர் கையிலுள்ள ஆணி கடாவின காயத்தால், “அவரை என்னால் காண முடியாவிட்டால், அவருடைய கைகளை தொட்டுப் பார்ப்பேன்'' அவரை அறிந்து கொள்வேன், அவரை அறிந்து கொள்வேன் மீட்கப்பட்டவளாய் அவர் பக்கத்தில் நிற்பேன் அவரை அறிந்து கொள்வேன், அவரை அறிந்துகொள்வேன் அவர் கையிலுள்ள ஆணி கடாவின காயத்தால். அது நீங்கள் அவரை நேசிக்கும்படி செய்கிறதல்லவா? அவர் நமக்காக ஒரு ஸ்தலத்தை ஆயத்தம் பண்ண சென்றிருக்கிறார். ''நான் போய் உங்களுக்காக ஒரு ஸ்தலத்தை ஆயத்தம் பண்ணின பின்பு, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக் கொள்ளுவேன்!'' 110பிரசவ வேதனையிலுள்ள சிறு பிள்ளைகளே, தேவனுடைய கற்பனைகளுக்கு கீழ்ப்படியுங்கள். இங்குள்ள போதகரே, உங்களில் யாரும் இதுவரைக்கும் ஞானஸ்நானம் பெறாமலிருந்தால், தண்ணீர் இப்பொழுது ஆயத்தமாயுள்ளது - சபையில் அங்கத்தினராக சேருவதற்கு, அல்லது நீங்கள் வேறென்ன செய்தாலும். நீங்கள் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை இது வரைக்கும் பெறாமலிருந்தால், இன்றிரவே பெற்றுக் கொள்ளுங்கள். அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்கள் அல்லவா? (சபையார் “ஆமென்” என்கின்றனர் - ஆசி ) நீங்கள், “ஓ, சகோ. பிரன்ஹாமே, தாமதமாகிவிட்டது. நீங்கள் நீண்ட நேரம் பிரசங்கம் செய்துவிட்டீர்கள் எனலாம். பவுல் ஒரு முறை இரவு முழுவதும் இதே விதமான செய்தியைப் பிரசங்கம் செய்தான். அப்பொழுது ஒரு வாலிபன் மதில் மேலிருந்து கீழே விழுந்து மாண்டு போனான். பவுல் இதே விதமான செய்தியினால் அபிஷேகம் பண்ணப்பட்டிருந்ததால், அவன் தன் சரீரத்தை அவன் மேல் கிடத்தினான். அப்பொழுது உயிர் அவனுக்குத் திரும்பவும் வந்தது. அவர் நேற்று இன்றும் என்றும் மாறாத அதே இயேசு கிறிஸ்துவாக இன்னும் இருக்கிறார். அவரை நீங்கள் நேசிக்கிறீர்கள் அல்லவா? இப்பொழுது நாம் இன்னும் ஒரு முறை நமது கரங்களையுயர்த்தி, நான் அவரை நேசிக்கிறேன் என்னும் பாடலைப் பாடுவோம். பியானோ வாசிக்கும் சகோதரி எங்கே? நான்... சகோதரியே, அது யாராயிருந்தாலும், எங்களுக்கு ஒரு சிறு சுருதி கொடுப்பாயா? எத்தனை பேர் அவரை நேசிக்கிறீர்கள்? உங்கள் கைகளையுயர்த்தி, ''நான் உண்மையில் அவரை நேசிக்கிறேன். என் முழு இருதயத்தோடும் அவரை நேசிக்கிறேன். அவரை நான் நேசிக்கிறேன்'' என்று கூறுங்கள். 111இப்பொழுது நாம் கண்களை மூடி, கைகளை பரலோகத்துக்கு நேராக உயர்த்தி, நான் அவரை நேசிக்கிறேன், நான் அவரை நேசிக்கிறேன் என்னும் பாடலைப் பாடுவோம். அவரை நாம் தொழுது கொள்வோம். இப்படி அறுத்து, கிழித்து, இழுத்து பிரசங்கம் செய்யும் போது, தேவன் ஒரு தைலத்தை ஊற்றி குணப்படுத்துகிறார். ஆத்துமாவுக்காக கிலேயாத்தில் பிசின் தைலம் ஒன்றுண்டு. இப்பொழுது நாம் பாடுவோம். அந்த பாடலுக்கு சுருதி கொடுங்கள். நான் அவரை நேசிக்கிறேன் நான் அவரை நேசிக்கிறேன் முந்தி அவர் என்னை நேசித்ததால் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்தில். இப்பொழுது... ''நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதனால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லோரும் அறிந்து கொள்வார்கள்'' (யோவான்13:35), அது உண்மை. நாம் காண்பவர்களிடம் ஒருவரிலொருவர் அன்பு கூராமற்போனால், காணாத தேவனிடத்தில் எப்படி நாம் அன்பு கூரமுடியும்? நான் அவரை நேசிக்கிறேன் நான் அவரை நேசிக்கிறேன் முந்தி அவர் என்னை நேசித்ததால் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்தில். (சகோதரன் பிரன்ஹாம் பிரசங்க மேடையில் ஒரு சகோதரனுடன் பேசுகின்றார் - ஆசி) தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. (அந்த சகோதரன் “இன்றிரவு இங்கே இருப்பது பரலோகத்திலிருந்து வந்த ஒரு உண்மையான கனமே'' என்கிறார்) சகோதரனே, உமக்கு நன்றி. (“அது மிகவும் அருமையானது'' சபை, ஒவ்வொருவரும் பலப்படுத்தப்பட்டனர் என்று நான் நினைக்கிறேன். நீங்களும் அப்படித்தானே நினைக்கிறீர்கள்? (”ஆம், உண்மையாக“) சகோதரன் பூன், தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. சபையாரை நான் உங்களிடம் அளிக்கின்றேன். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.